அவுஸ்திரேலியாவில் இந்த ஆண்டு ஏற்கனவே காட்டுத் தீ, வெள்ளம் மற்றும் ஆலங்கட்டி மழை ஆகியவற்றினால் பாதிப்படைந்துள்ள நிலையில் தற்போது ஓர் வகையான விசத் தன்மையுடைய சிலந்திகள் (Funnel-web spiders) குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு அவுஸ்திரேலியாவின் ஈரமான வனப் பகுதியில் உள்ள இந்த சிலந்தி வகைகள் விரைவாக செயற்படக் கூடிய மிகவும் நச்சுத் தன்மை கொண்டவை என நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சோமர்ஸ்பியை மையமாகக் கொண்ட அவுஸ்திரேலிய ஊர்வன பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்ற இந்த சிலந்திகளானது உலகின் மிகவும் ஆபத்தான சிலந்திகளில் ஒன்றாகும். அவுஸ்திரேலியாவில் தற்போது நிலவும் வெப்பம் மற்றும் மழையுடனான வானிலை காரணமாக குறித்த சிலந்தி வகைகள் ஏனைய இடங்களை நோக்கி நகர ஆரம்பித்துள்ளதாகவும் பூங்காவின் செய்தித் தொடர்பான டேனியல் ரம்ஸி கூறியுள்ளார்.