Home / செய்திமுரசு / கொட்டுமுரசு (page 4)

கொட்டுமுரசு

இப்பகுதியில் சகஊடகங்களில் வெளியான பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.

போரால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு உலக நாடுகள் உதவுமா?

ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அங்கிருந்து வெளியேறத் தவித்துக்கொண்டிருக் கிறார்கள். சில நாடுகள் ஆப்கானியர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளபோதிலும், சில நாடுகள் தங்கள் முடிவைத் தள்ளிப்போடவும் அகதிகளுக்கான தங்களது திட்டங்களை விஸ்தரிக்க விரும்பாமலும் உள்ளன. ரஷ்யாவும் ஆஸ்திரியாவும் ஆப்கன் அகதிகளை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன. இதற்கிடையில், ஆப்கன் குடிமக்கள், காபூல் சர்வதேச விமான நிலையத்துக்கான சாலைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். எனினும், ...

Read More »

வக்சினைப் போடுங்கள் ஆனால் கடவுளை நம்புங்கள்?

பவித்ரா வன்னியாராச்சியிடமிருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெருந்தொற்று நோய்க் காலத்தில் ஒரு நாட்டின் சுகாதார அமைச்சராக இருப்பது என்பது சோதனை மிகுந்தது. அந்தச் சோதனையில் அவர் சித்திபெறவில்ல. தொடக்கத்தில் இருந்தே அவர் சொதப்பி விட்டார். மந்திரித்த நீரை ஆறுகளில் கலப்பதிலிருந்து தொடக்கி உள்ளூர் வெதமாத்தையாவான தம்மிகாவின் கொரோனாப் பாணியை அங்கீகரித்து அருந்தியதுவரை அவர் மாந்திரீகம் மருந்து எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு குழப்பிவிட்டார். இப்போது அவருடைய இடத்துக்கு ஹெகலிய ரம்புக்வெல ...

Read More »

காலத்தாண்டுதலை நிகழ்த்திய நகுலன்

சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் காலத்திலிருந்து கவிதை (1959) எழுதினாலும் நாவல், சிறுகதை பெற்ற கவனத்தை நகுலனின் கவிதை பெறுவதற்குச் சிறிது காலம் பிடித்தது. இது தனிக்கவிதைகள் மூலமாக அல்லாமல், நீண்ட கவிதைகள் மூலமாகவே சாத்தியமாயிற்று. தனிக்கவிதைகளைத் தொடக்கக் காலத்திலும், தனது இறுதிக் காலத்திலும் எழுதியிருக்கிறார். ‘சிலை’ (1959) கவிதையில் சடங்கு வழிப்பட்ட மத நம்பிக்கைகளை, ‘சிலை முன் பல பேசி என்ன பயன்?’ என்று கேள்விக்கு உட்படுத்துகிறார். அதே கவிதையில், ...

Read More »

தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்கள் மெய்நிகர் சந்திப்பு

தமிழ் மக்களின் அரசியல் விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் செயல்படுவதற்காக தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை 22- 08- 2021 காலை 11.00 மணியளவில் மெய்நிகர் இணைய வழியின் ஊடாக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். இச்சந்திப்பில் மாவை சேனாதிராஜா, சீ. வி. விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன்,கோவிந்தன் கருணாகரம், என்.ஸ்ரீகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் இந்த கலந்துரையாடல் ...

Read More »

நவீனமயமாக்கத்தில் புதிய பயணத்தை தொடங்கியிருக்கும் திபெத்

## சீனாவின் திபெத் சுயாட்சி பிராந்தியம் அதன் வரலாற்றில் ஒரு திருப்புமுனையான சமாதானரீதியான விடுதலையின் 70 வருட நிறைவைக் கொண்டாடும் நிலையில், அபிவிருத்தியில் துள்ளிப்பாய்ந்த பல தசாப்தங்களுக்கு பிறகு புதிய நவீனமயமாக்கத்தை தொடங்குகிறது ; ## ஒரு சில தசாப்தங்களில், முனனென்றும் இல்லாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளைச் செய்வதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி திபெத்தில் உள்ள சகல இனக்குழுமங்களையும் ஐக்கியப்படுத்தி தலைமைதாங்கியிருக்கிறது ; ## ஐக்கியப்பட்ட, சுபிட்சம் நிறைந்ந, ...

Read More »

பசிலுடன் பேசுவதற்குத் தயாராகும் கூட்டமைப்பு?

பசிலுடன் பேசுவதற்குத் தயாராகும் கூட்டமைப்பு?கடந்த இரண்டு வாரங்களாக இடம்பெற்ற சில நிகழ்வுகள் இந்தக் கேள்விகளை அரசியல் வட்டாரங்களில் எழுப்பி யிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுப் பதற்காக அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் பசில் ராஜபக்‌ச நியமிக்கப் பட்டிருக்கின்றார். அதே வேளையில் பேச்சுக்களுக்கு முன்னோடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்துப் பேசியிருக்கின்றார். இவை எல்லாம் பகிரங்கப் படுத்தப்படாமல் இரகசியமாக இடம் பெற்றிருக்கின்றது. ஆனால், தகவல்கள் ...

Read More »

காபுல் விமானநிலையத்திலிருந்து பெரும் குழப்பத்திற்கு மத்தியில் நான் எவ்வாறு தப்பினேன்?

தலிபான் காபுலை கைப்பற்றிய தினம், ஜேர்மனியிலிருந்து நண்பர் ஒருவரின் தொலைபேசி அழைப்புடன் ஆரம்பமானது. ஜேர்மன் தூதுரகத்தின் பணியாளர்களுடன் அந்த நாட்டின் விமானமொன்று புறப்படவுள்ளதால் என்னை விமானநிலையத்திற்கு செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஆப்கானிலிருந்து ஜேர்மனிக்கு கொண்டு செல்லப்படவேண்டியவர்களின் பட்டியலில் அவர் எனது பெயரை பதிவு செய்தார்.நான் ஜேர்மன் ஊடகத்திற்காக பணியாற்றியிருந்தேன்.கடந்த ஒரு வருடகாலமாக நான் விசாவை பெறுவற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தேன. எனக்கு சிந்திப்பதற்கான நேரம் இருக்கவில்லை,நான் எனக்கு உயிர்தப்புவதற்கான சந்தர்ப்பம் என ...

Read More »

தலிபான் ஆட்சி எவ்வாறு அமையும்?

தலிபான் கிளர்ச்சிக் குழுவினர், திங்கட்கிழமை (17) முழு ஆப்கானிஸ்தானையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தூர பிரதேசங்களில், வேறு சில குழுக்கள் செயற்பட்டு வந்த போதிலும், அது, தலிபான்களின் நிர்வாகத்தை எவ்வகையிலும் இப்போதைக்குப் பாதிக்கப் போவதில்லை. தலிபான்கள், இவ்வளவு விரைவாக முழு நாட்டையும் கைப்பற்றிக் கொள்வார்கள் என, அமெரிக்கத் தலைவர்கள் நினைக்கவில்லை போலும்! கடந்த புதன்கிழமை (11) ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்த கருத்துகளால் அது விளங்குகிறது. அவர், ஊடகவியலாளர்களுக்குக் ...

Read More »

மரணங்கள் மலியும் பூமி

நாட்டின் எல்லாப் பாகங்களிலும், கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளதால், நிலைமை கட்டுப்பாட்டை மீறிப் போவதற்கிடையில், சில வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு, சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை விடுத்துவந்தனர். ஆனால், அந்தத் தீர்க்கமான தீர்மானத்தை எடுப்பதில், மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வந்த அரசாங்கம், இப்போது இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் திரிபுகளின் அதிகரித்த தொற்றுக் காரணமாக சுகாதார, பொருளாதார, சமூக அடிப்படைகளில் பெரும் பின்னடைவையும் அவல நிலையையும் ...

Read More »

டெல்டா மாறுபாடு பரவும் நிலையிலும் இலங்கை ஜனாதிபதி பொது முடக்கங்களை எதிர்க்கின்றார்

இலங்கையில் வேகமாக அதிகரித்து வரும் கோவிட்-19 மரணங்கள் மற்றும் நோய்த் தொற்றுகளையும் மற்றும் சுகாதார அமைப்பின் சீர்குலைவுகளையும் கையாள்வதற்காக பொது முடக்கம் செய்யுமாறு மருத்துவ நிபுணர்கள் இடைவிடாது விடுக்கும் வேண்டுகோள்களை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ நிராகரித்துள்ளார். ஜூலை 5 அன்று, இராஜபக்ஷ, கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான பல பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியதுடன், ஜூலை 28 அன்று, வீட்டிலிருந்து வேலை செய்யும் அனைத்து அரச ஊழியர்களையும் தங்கள் வேலைத் தளங்களுக்குத் திரும்புமாறு ...

Read More »