கொட்டுமுரசு

கரோனா சிகிச்சையில் புதிய வெளிச்சம்

எட்டு மாதங்களாக உலகையே முடக்கிப்போட்டிருக்கும் கரோனா வைரஸ் குறித்து நாளொரு செய்தியும் பொழுதொரு வியப்பூட்டும் அறிவியல் உண்மையும் வெளிப்படுகின்றன. மூக்கு, தொண்டை, நுரையீரலைப் பாதிக்கும் ஒரு சுவாச நோய் எனும் அளவில்தான் ஆரம்பத்தில் கரோனா அறியப்பட்டிருந்தது. ஆனால், கரோனா பரவத் தொடங்கிய சில மாதங்களிலேயே அது இதயம், ரத்தக்குழாய், சிறுநீரகம், குடல் உள்ளிட்ட பலதரப்பட்ட உடலுறுப்புகளையும் பாதிக்கக்கூடியது என்பது தெரிந்தது. இதுபோல், கரோனா தொற்றாளரின் திடீர் மரணத்துக்கு அவர் உடலில் ‘சைட்டோகைன் ஸ்டார்ம்’ எனும் தடுப்பாற்றல் மிகைநிலை உருவாகி, கடுமையான மூச்சுத் திணறலுக்கு வழிகொடுப்பதுதான் ...

Read More »

அன்னையரின் கண்ணீரைப் பிரிக்காதீர்கள்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்பு நடந்து முடிந்த தேர்தலில் அம்மாவட்டத்தில் போட்டியிட்ட கருணாவை ஆதரிப்பதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது. அவ்வறிவித்தலின் பின்னணியில் தேர்தலுக்குப் பின் அண்மையில் அந்தச்  சங்கத்தின் அலுவலகம் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டது. தேர்தலுக்கு முன் கிளிநொச்சியில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோருக்கான  சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் சுமந்திரனுக்கும் சிறிதரனுக்கும் வாக்களிக்கக் கூடாது என்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது என்று பகிரங்கமாக முடிவெடுத்தது.கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தில் அந்த ...

Read More »

சாவதற்குத் தயாராகும் நோயாளி! இறுதிக் காட்சிகள் முகநூலில் நேரலை!

குணப்படுத்த முடியாத கொடிய நோய் (incurable disease) ஒன்றினால் சுமார் 34 ஆண்டுகள் படுத்த படுக்கையில் வாடும் நோயாளி ஒருவர் தானாகவே உயிர் துறப்பதற்கு முடிவு செய்திருக்கிறார். மருத்துவப் படுக்கையில் கிடந்தவாறு பெற்றுவரும் நீராகார உணவினையும் மருந்துகளையும் நிறுத்திக் கொண்டு மெதுவாகச் சாவதற்குத் தயாராகும் முடிவை முகநூல் நேரலை மூலம் நாட்டுக்கு அறிவித்திருக்கும் அவர், தான் சாகும் வரையான நிலைமைகளை தொடர்ந்து அனைவரும் காண வசதியாக அதனை முகநூலில் நேரலைக் காணொலியாக விட்டிருக்கிறார். சட்டங்களுக்கும் மனிதாபிமானத்துக்கும் பெரும் சவாலாக மாறியிருக்கும் ஒரு நோயாளியின் இந்த ...

Read More »

ஐ.தே.க இறந்துவிட்டதா?

ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிட்ட எந்தவொரு மாவட்டத்திலேனும், ஓர் ஆசனத்தையாவது வெற்றிபெற முடியாத அளவுக்கு, ஐக்கிய தேசிய கட்சியையும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும், பொதுமக்கள் நிராகரித்துவிட்டார்களா? நாம் இவ்வாறு கேட்கும்போது இவ்வளவு தெளிவாகத் தெரியும் ஒரு விடயத்தைச் சந்தேகிக்க வேண்டுமா என, மற்றவர்கள் கேட்கலாம். ஆனால், ஐ.தே.கவில் இருந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவும் இணைந்து இத்தேர்தலில் போட்டியிட்டு இருந்தால், அவர்கள் இம்முறை சஜித்தின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பெற்ற ...

Read More »

வ.உ.சி.யின் சிறை வாழ்க்கை

வ.உ.சி.யின் சிறை அனுபவங்களைப் பற்றி நாம் அறிந்துகொள்வதற்கு அவர் எழுதிய சுயசரிதத்தைத் தவிர வேறு எந்த ஒரு ஆவணமும் இல்லை. ஒருவேளை அவர் தனது சுயசரிதத்தை எழுதாமல் போயிருந்தால் அவரது சிறை வாழ்க்கை குறித்து நம்மால் எதையும் அறிய முடியாமலேயே போயிருக்கும். திருநெல்வேலி செசன்ஸ் நீதிமன்றத்தில் வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் மூவர் மீதும் இ.பி.கோ. பிரிவு 108-ன் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுப் பின்னர் அது பிரிவு 107(4) ஆக மாற்றப்பட்டது. அவ்வழக்கை விசாரிக்கத் தொடங்குவதற்கு முன்பாகவே மூவரும் கைதுசெய்யப்பட்டனர். நன்னடத்தைக்காகச் செலுத்தச் ...

Read More »

19ஆவது திருத்தத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் என்ன?

நேற்று (3) வெளியாகியுள்ள 20வது திருத்தத்தின் நகல்வடிவில் 19வது திருத்தத்தில் இடம்பெற்றிருந்த பல விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன. இரட்டை பிரஜாவுரிமையை உடையவர்கள் நாடாளுமன்றத்துக்கு செல்வதை தடை செய்யும் விதத்தில் 19வது திருத்தத்தில் காணப்பட்ட ஏற்பாடுகள் 20வது திருத்தத்தின் நகல்வடிவில் நீக்கப்பட்டுள்ளன . ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய வயதெல்லை குறைக்கப்பட்டுள்ளது . 30வயதுக்கு மேற்பட்ட எவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம். அரசாங்கமொன்றில் 30 அமைச்சுகளே காணப்படலாம் என்ற கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது. ஒரு வருடகாலத்தின் பின்னர் ஜனாதிபதி நினைத்தால் நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என நகல்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read More »

தீர்வா இன்னொரு தலைநகரம்?

மதுரையைத் தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் ஏற்கெனவே ஒன்றுக்கு மேற்பட்ட தலைநகரங்களைக் கொண்ட மாநிலங்கள் உண்டு. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது ஸ்ரீநகர் கோடைகாலத் தலைநகரமாகவும் ஜம்மு குளிர்காலத் தலைநகரமாகவும் இருந்தன. மஹாராஷ்டிரத்தில் மும்பை தலைநகரமாகவும், நாக்பூர் குளிர்காலத் தலைநகரமாகவும் இருந்துவருகின்றன. விதர்பா பிராந்தியத்துக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், நாக்பூரில் ஆண்டுக்கு ஒரு முறை சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் ஷிம்லாவுக்கு அடுத்து தர்மஷாலாவை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்தான் இரண்டாவது தலை நகர ...

Read More »

நெய்தவனுக்கு மட்டுமே தெரியும் ரகசியம்!

சாதாரணமாக ஒரு தீவிர நோயிலிருந்து மீண்டுவந்தால் செத்துப் பிழைத்தேன் என்று சொல்வார்கள். ஆனால், நான் நிஜமாகவே ‘செத்துப் பிழைத்தேன்’. மூன்றாம் முறையாக மாரடைப்பு வந்து மருத்துவமனையில் சேர்ந்த 30 நிமிடங்களுக்குள் இதயத் துடிப்பு நின்று, கண் செருகி, வாய் பிறழ்ந்த நிலையில் மருத்துவரும், நவீன உத்திகளும், மின்சார ‘ஷாக்’கும் என்னை இரண்டு நிமிடங்களில் உயிர்ப்பித்துவிட்டன. வீடு திரும்பினேன். மகனும் மகளும் அவரவர் தேசத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். பிறகுதான் கரோனாவும் ஊரடங்கும் வந்தன. தனியாக வசிக்கும் எனக்கு தினசரி வாழ்க்கை சவாலாக ஆகிவிட்டது. ஒருநாள், ‘85 ...

Read More »

பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை வரலாறு

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை வரலாறு பற்றிய விவரத்தை இந்த தொகுப்பில் காண்போம்… இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பணியாற்றியவர் பிரணாப் முகர்ஜி. 84 வயதாகும் பிரணாப் கடந்த 9-ம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் குளியல் அறையில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டு இடது கை உணர்ச்சியற்ற நிலையில் இருந்ததால் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரணாப்பிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையும், மூளையில் ரத்தக்கட்டி ...

Read More »

ஒற்றையாட்சியை அதிகரிப்பது ஆரோக்கியமானதல்ல! -ஞா.ஸ்ரீநேசன் நேர்காணல்

 கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறியது போன்று இருக்கின்ற அதிகாரங்கள் போதாது என்று ஆயுத போராட்டம் நடந்து முடிந்தும், ஜனநாயக போராட்டம் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றபோது, இருக்கின்ற அதிகாரங்களை பறிக்கின்ற செயற்பாடுகள் காணப்படுகின்ற படியால் அரசாங்கம் கொண்டு வருகின்ற 19 ஆவது திருத்தத்தை அகற்றுவதென்பது ஒரு அரசின் மேலாதிக்கத்தை உயர்த்துகின்ற செயற்பாடாக அமைவதோடு மட்டுமல்லாமல் 13 ஆவது திருத்தத்தில் கை வைப்பதென்பது இருக்கின்ற அதிகாரங்களையும் இல்லாமல் செய்து ஒற்றையாட்சி முறையின் வலுத்தன்மையை அதிகரிக்கின்ற போக்காக அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற ...

Read More »