Home / செய்திமுரசு / கொட்டுமுரசு (page 30)

கொட்டுமுரசு

இப்பகுதியில் சகஊடகங்களில் வெளியான பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.

அச்சாப்பிள்ளை அரசியல் தான் நடக்கின்றதா?

2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்க் கட்சிகள் அல்லது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அச்சாப்பிள்ளை அரசியலில் ஈடுபட்டு வருவதையே காண முடிகின்றது. அதாவது இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவாகச் செயற்பட்டுச் சிங்கள ஆட்சியாளர்களின் மனங்களையும் நோகடிக்காமல், அதேவேளை தமிழ்த் தேசிய அரசியலையும் தீவிரமாகப் பேசிக் கொண்டு சொத்துச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு தம்மைத் தியாகிகளாகவும் வெளிப்படுத்த முற்படுகின்றனர். ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து உயிர் ...

Read More »

மோடியின் கருத்திற்கு சிறிலங்கா உறுதிமொழி எதனையும் வழங்கவில்லை

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்திய பிரதமர் விடுத்த வேண்டுகோளிற்கு சிறிலங்கா உறுதிமொழி எதனையும் வழங்கவில்லை. நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் சிறிலங்கா  அரசாங்கத்தை தமிழ் மக்களின் ஐக்கிய இலங்கைக்குள்ளான சமத்துவம் நீதி கௌரவம் குறித்த அபிலாசைகளுக்கு தீர்வை காணுமாறு கேட்டுக்கொண்டுள்ள இந்திய பிரதமர் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களின் ஆணை மற்றும் அரசமைப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் நல்லிணக்கதத்தை ஏற்படுத்துவதன் மூலமும் தமிழ் மக்கள் ...

Read More »

திலீபனை முன்னிறுத்தி சில கேள்விகள்

திலீபனின் ஏன் உண்ணாவிரதம் இருந்தார்? யாருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்? அவர் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இரண்டு அரசுகளிடமும் நீதிகேட்டு உண்ணாவிரதம் இருந்தார். அதாவது திலீபனின் உண்ணாவிரதம் எனப்படுவது நாட்டுக்கு உட்பட்டது அல்ல.  அதற்கு ஒரு பிராந்திய பரிமாணம் உண்டு. ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் பிராந்திய பரிமாணத்தை அடைந்ததன் விளைவாக எழுதப்பட்டதே இந்திய – இலங்கை உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையின் போதாமைகளையும் இயலாமைகளையும் உணர்த்துவதற்காகவே ...

Read More »

சுமணரதன தேரருக்கு தமிழில் வந்த நீதிமன்ற உத்தரவு

மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம். நீதிமன்றத்துக்கும் போகப்போவதில்லையாம். அவருக்கு அவரின் மொழியில் தான் அனுப்பியிருக்க வேண்டும். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. ஆனால் அதனால் நீதிமன்றத்துக்கு போகப்போவதில்லை உத்தரவை புறக்கணிக்கிறேன் என்று பொலிஸாரிடம் திருப்பிக்கொடுத்து அனுப்பும் உரிமையை இலங்கையில் ஏனைய பிரஜைகளுக்கும் உண்டா? குறிப்பாக இத்தனை காலம் அரச நிறுவனங்களிலும் இருந்தும் தமிழர்களுக்கு கிடைக்கின்ற அறிவித்தல்கள், அரச ...

Read More »

இசையால் என்றென்றும் வாழ்வார்… எஸ்.பி.பி. ஒரு சகாப்தம்

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரைப்பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை காணலாம். ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். இதுவரை எஸ்.பி.பாலசுப்ரமணியம் வென்றுள்ள ஆறு தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது எஸ்.பி.பியின் பன்மொழி திறனுக்கு சான்று. 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் உலகின் ...

Read More »

சபாநாயகரால் அனுமதி மறுக்கப்பட்ட கஜேந்திரகுமாரின் உரை

தியாகதீபம் திலீபன் அவர்களை நினைவுவதனை அரசாங்கம் பொலீசார் ஊடாக தடைசெய்துள்ளமையானது ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல் என்பதனையும் சுட்டிக்காட்டி குறித்த நினைவேந்தலை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தும் பிரேரணை ஒன்று பாராளுமன்றில் உரையாற்றுவதற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் நேற்றய தினம் பாராளுமன்ற சபாநாயகரின் அனுமதிக்காக அவரது அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பாராளுமன்ற நிலையியல் கட்டளைச்சட்டம் 27 (2) ,ன் கீழ் அவசர முக்கியத்துவம் மிக்க பொது விடயங்கள் தொடர்பில் ...

Read More »

இந்தியாவை மீறி 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க முடியுமா?

“தமிழ்த் தேசியத்திலும் தமிழர் நலனிலும் அக்கறை கொண்டு செயற்படுபவர்கள் கட்சி அரசியலுக்கு அப்பால் காலத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் கருதி மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து ஓரணியில் திரளவேண்டியது அவசியம். இல்லையேல் நாம் தொடர்ந்தும் இவ்வாறு புலம்பிக்கொண்டிருக்கும் நிலை ஏற்படும்” என, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உப தலைவரும் இணை பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்  அளித்த விசேட செவ்வியில் ...

Read More »

பூவெலிக்கடவில் உதிர்ந்த பூக்கள்!

கண்டி பூவெலிக்கட பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் சரிந்து விழுந்து மூன்று உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளது. அந்த உயிர்களின் பெறுமதி குறித்த கேள்வியே எம் முன் நிற்கும் கேள்வி. அவர்கள் பாதுகாப்பான ஒரு இல்லத்தில்தான் வாழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் அருகாமை வீடு பாதுகாப்பு இல்லாத வகையில் அமைக்கப்பட்டதனால் அம்மாவும் அப்பாவும் குழந்தையும் என ஓர் அழகிய குடும்பம் இந்தமண்ணில் இருந்து பிரிந்து இலங்கை நாட்டுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்துச் செல்கிறது. அந்தப் ...

Read More »

11 வருடங்களாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் வாடும் இலங்கை அகதி

இலங்கையை சேர்ந்த அகதி ஒருவர் அவுஸ்திரேலிய அரசாங்கம் அவருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என தெரிவித்த போதிலும் 11 வருடங்களாக குடியேற்றவாசிகளுக்கான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என கார்டியன் தெரிவித்துள்ளது. இலங்கையின் பெரும்பான்மையினத்தை சேர்ந்த அந்த நபரின் உண்மையான பெயரை வெளியிடவிரும்பாத கார்டியன் அலெக்ஸ் என்ற பெயரை பயன்படுத்தி அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து செய்திவெளியிட்டுள்ளது. அலெக்சிற்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை என கார்டியன் தெரிவித்துள்ளது. எனினும் அவுஸ்திரேலியாவின் குடிவரவு ...

Read More »

திலீபன் நினைவேந்தல் நிகழ்வும் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையும்

“தமிழினத்தை ஒற்றுமைப்படுத்துவதற்கு எதிரிகளால்தான் முடியும்” என்ற கருத்து மீண்டும் உண்மையாகியிருக்கின்றது. திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நவக்கிரகங்கள் போல, ஒவ்வொரு திசையில் முரண்பட்டுக்கொண்டிருந்த தமிழ்க் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தியிருக்கின்றது. குறைந்தபட்சம், திலீபன் நினைவேந்தலிலாவது தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றது. பலமான ஒரு அரசாங்கம் தென்னிலங்கையில் பதவியேற்றிருக்கின்றது. கடும் சிங்கள – பௌத்த தேசியவாதத்தை தமது கொள்கையாகக் கொண்டுள்ள அந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் எவ்வாறானதாக இருக்கும் என்பது ...

Read More »