Home / செய்திமுரசு / கொட்டுமுரசு (page 20)

கொட்டுமுரசு

இப்பகுதியில் சகஊடகங்களில் வெளியான பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.

சகல கைதிகளும் சமமானவர்கள் அல்ல: வர்க்கபேதம், இனத்துவம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம்

நான் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்தபோது சந்தித்த கனகசபை தேவதாசன் 64 வயதுடைய சிறைக் கைதி ஆவார். அவர் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகள் கடந்து விட்டன. அந்தக் காலப்பகுதியில்; பத்து வருடங்களுக்கு மேல் அவர் சிறைச்சாலையில் கழித்து விட்டார். 2021 ஜனவரி 6ஆம் திகதி தேவதாசன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். தமது வழக்கில் துரிதப்படுத்துவதற்காக அதிகாரிகளுடன் பேசப் போவதாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து ஜனவரி 16ஆம் திகதி ...

Read More »

நினைவுத் தூபி தகர்ப்பு கற்றுத் தந்த பாடங்கள்!

அதிரடியாக வருகின்ற புல்டோசர் வாகனம் ஓசைபடாமல் யாழ். பல்கலைக்கழகத்துக்குள் நுழைகின்றது. அடுத்த கனமே அங்கு நுழைவாயிலுக்கு அருகில் முள்ளிவாய்க்காலில் இறந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்காக அமைக்கப்பட்ட தூபியை ஐந்து- ஆறு நிமிடங்களில் இருந்த இடமே தெரியாது தகர்த்தெறிகின்றது அந்த புல்டோசர் இயந்திரம். இந்த தகவல்கள் பல்கலைக்கழகத்தில் இருந்தவர்களால் வெளியில் சொல்லப்பட விரைந்து வந்த மாணவர்கள், அயலவர்கள், அரசியல்வாதிகளுக்கு பேரதிர்ச்சி. அங்கு இருந்த நினைவுத் தூபியைக் காணவில்லை. களத்தில் இருந்த ...

Read More »

வாக்குறுதி நிறைவேறுமா?

“யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக, இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக பாசாங்கு செய்தாரா?” போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் ...

Read More »

பேரறிவாளன் விடுதலையில் மாநில உரிமையைத் தக்கவைக்குமா தமிழக அரசு?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக, பல காலமாகப் பேசப்பட்டுவருகிறது. அரசமைப்பு உறுப்பு 161-ன்படி தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி பேரறிவாளன் அளித்த மனுவைத் தமிழக அரசு பரிசீலனை செய்யலாம் என கடந்த 2018-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 6-ம் தேதி அன்று அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற மூவர் அமர்வு ...

Read More »

வெகுஜன எழுச்சிக்கு வித்திட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின்  நினைவுத்தூபி இரவோடிரவாக இடிக்கப்பட்டமையும் அதை நேரடியாக காணொளி மூலம் பார்த்ததால் ஏற்பட்ட எல்லை மீறிய துயரங்களும் வார்த்தைகளால் அளவிட முடியாத நிஜங்களாகும். மேற்படி சம்பவம் இடம்பெற்ற அந்த கணப்பொழுதில் இருந்தே அதனை கண்டித்து திக்கெட்டும் பரவிய போராட்ட உணர்வலைகள் கவனத்தைப் பெற்ற ஒரு சம்பவமாக மாறி இருந்தது. தொடர்ச்சியாக தனக்கு வழங்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவும் இறுதியில் உங்களால் ...

Read More »

டிரம்பினை பதவியிலிருந்து நீக்க முடியுமா ? அரசியலில் இருந்து முற்றாக தடை செய்ய முடியுமா?

டொனால்ட் டிரம்பிற்கு எதிராக மீண்டும் அரசியல் குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் இரண்டு தடவைகள் அரசியல் குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியாக டிரம்ப் மாறியுள்ளார். கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வன்முறைகளை தூண்டினார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்க செனெட்டில் டொனால்ட் டிரம்ப் குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி விசாரணையை எதிர்கொள்கின்றார் அரசியல் குற்றப்பிரேரணை என்றால் என்ன? விசாரணைகளை நடத்துவதற்கதாக அமெரிக்க காங்கிரசில் குற்;றச்சாட்டுகளை கொண்டுவருவதே அரசியல் குற்றப்பிரேரணை ...

Read More »

படிப்படியாக பறிபோகும் தமிழர் உரிமைகள்

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்குப்பின் மறுபடியும் இலங்கை இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் மாகாண சபைகளின் மீது கவனம் குவிந்திருக்கிறது. மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக சில தினங்களாக பேசப்படுகின்றது. ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சி இம்மாதத்தோடு ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது. இந்த ஓராண்டுக் காலகட்டத்தில் மாகாண சபைகள் தொடர்பில் ராஜபக்சக்களும் அவர்களுக்கு நெருக்கமான அமைச்சர்களும் தெரிவித்துவரும் கருத்துகளைத் தொகுத்துப் பார்த்தால், அவர்கள் மாகாண சபைக் கட்டமைப்பை ...

Read More »

அமெரிக்க வன்முறையின் வரலாறு

கேப்பிட்டலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தூண்டியதைவிட ரத்தக்களரி நிரம்பிய, மிகவும் நாசகாரத்தன்மை கொண்ட பல அத்தியாயங்களைக் கொண்டிருப்பது அமெரிக்க வரலாறு. அமெரிக்காவின் பயங்கரமான கடந்த காலத்தைப் பற்றிய அறியாமையை வரலாற்றாசிரியர்கள் டபிள்யு.ஈ.பி. டுபோய்ஸ், ஜான் ஹோப் ஃப்ராங்க்ளின், ரிச்சர்டு ஹோஃப்ஸ்டேட்டர் போன்றோர் நன்றாக ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த அறியாமை தற்போதைய நிகழ்வுக்குப் பிறகு வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த நாசகாரச் சம்பவமானது வழக்கத்துக்கு மாறான ஒன்றுதான் என்று தொலைக்காட்சியில் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ...

Read More »

போரின்போதும் அதன் பின்னரும் என்ன நடந்தது?

இலங்கையின் ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கரைச் சந்தித்த யாழ். மாவட்ட எம்.பி.யும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் அவருடன் விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார். நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கரின் அழைப்பின் பேரில் விக்னேஸ்வரன் அவரின் அலுவலகத்திற்கு சென்று சந்தித்தார். அப்போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. போரின் பின்னரான வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை, தேர்தலின் பின்னர் அங்கு ...

Read More »

வாட்ஸ் அப் புதிய நிபந்தனைகள்: சர்ச்சைக்கு காரணம் என்ன?

முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் விதிகள் மற்றும் நிபந்தனைகள் புதுப்பிக்கப்பட்டிருப்பது இணைய உலகில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வாட்ஸ் அப் புதியநிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த சேவையை தொடர்ந்துபயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயனாளிகளின் தரவுகளை வாட்ஸ் அப் கையாளும் விதம் தொடர்பான தகவல்கள் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளன. இதனிடையே, தரவுகளை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர நிர்பந்திப்பதால், வாட்ஸ் அப்பை ...

Read More »