பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் – என்னும் சுலோகத்தின் கீழ் இடம்பெறும் எதிர்ப்பு பேரணி, தமிழ்ச் சூழலில் கவனத்தை பெற்றிருக்கின்றது. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு வகையான உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை அதன் 73வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில்தான், வடக்கு கிழக்கில் இவ்வாறானதொரு எதிர்ப்பு பேரணி திட்டமிடப்பட்டிருக்கின்றது. அதே வேளை அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா அமர்வு தொடர்பில் அனைவரது பார்வையும் திரும்பியிருக்கின்ற நிலையிலும்தான், இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது. நிகழ்வை திட்டமிட்டவர்கள் தருணம் பார்த்து நிகழ்வை ...
Read More »கொட்டுமுரசு
மியான்மார் தரும் பாடம்
மியான்மாரில் திங்கட்கிழமை (01) அரங்கேறிய இராணுவச் சதி, ஆசியச்சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலை அடுத்து, புதிய பாராளுமன்றம் திங்கட்கிழமை கூடவிருந்த நிலையில், மியான்மாரிய இராணுவம், தனது மூன்றாவது இராணுவச் சதியை அரங்கேற்றியது. மியான்மாருக்கு இராணுவச் சதியும் இராணுவ ஆட்சியும் புதிதல்ல. ஆனால், மாறிவரும் உலக ஒழுங்கில், கொவிட்-19 நோயின் நெருக்கடிக்கு மத்தியில், ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாதளவு சவாலுக்கு உட்பட்டுள்ள நிலையில், இந்த இராணுவச் சதி முக்கியத்துவம் வாய்ந்தது. பர்மா என்று பொதுவில் அறியப்பட்ட மியான்மார், பிரித்தானியா கொலனி ...
Read More »நவால்னி: ரஷ்யாவின் புதிய லெனினா?
கடந்த 2020-ல் ரஷ்யாவில் கணிசமான அளவில் மாற்றங்கள் ஏற்பட்டன: கரோனா பெருந்தொற்று, அதன் விளைவான பொருளாதாரச் சரிவு, ஒரு பிராந்திய ஆளுநரின் கைது, பெலாரஸ், கிர்கிஸ்தான், மால்டோவா, நகோர்னோ-காரபாக் போன்றவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள். ஆனால், 2021-ம் ஆண்டானது கடந்த ஆண்டின் பிரச்சினைக்குரிய சம்பவம் ஒன்றை கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது: புதினுக்கு எதிரான செயல்பாட்டாளர் அலெக்ஸி நவால்னியின் இன்னல்கள், இதனால் பல கேள்விகளுக்குப் பதிலே கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பாவின் தடைகள் மாஸ்கோவுக்குச் செல்லும் விமானத்தில் நவால்னிக்கு உடல்நலம் மோசமடைந்ததிலிருந்து இந்த நெடிய கதை தொடங்குகிறது. ஆம்ஸ்க் ...
Read More »சுயாதீன சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றின் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்
அரசாங்கம் தற்போது இன ,மத ரீதியாகவுள்ள சிறுபான்மையினர் மீது நடந்து கொள்ளும் மோசமான செயற்பாடு ஐ.நா கூட்டத் தொடரில் பலத்த எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதேபோல ஒரு சுயாதீன சர்வதேச விசாரணை பொறிமுறை என்ற விடயத்தை உள்ளடக்குவதன் ஊடாகத்தான் இலங்கையில் நடைபெற்ற குற்றங்களுக்கு நீதி கிடைப்பதற்கும் ,இவ்வாறான விடயங்கள் மீள நிகழாமைக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக பரிகார ரீதியாக அரசியல் தீர்வு அதேபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நிவாரணம், காணாமல் போனோர், அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் மற்றும் காணி அபகரிப்பு ஆகியவற்றுக்கு ...
Read More »இந்தோ- பசிபிக் பிராந்தியத்தை பைடன் எப்படிப் பார்க்கிறார்?
அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகம் எப்படிச் சிந்திக்கும் என்பது குறித்து இந்திய அரசியல் தலைவர்கள், வெளியுறவுத் துறையினர், இதழாளர்கள், அறிஞர்கள் போன்றோருக்குத் தற்போது ஒரு தெளிவான பார்வை ஏற்பட்டிருக்கும். இவர்களில் சிலர் பைடனைச் சந்தித்திருக்கிறார்கள். மற்றவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி ப்ளிங்கென், சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் போன்றோரில் தொடங்கி பருவநிலை மாற்றத்துக்கான சிறப்புத் தூதர் ஜான் கெர்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், அமெரிக்காவின் ‘இந்தோ-பசிஃபிக் ஒருங்கிணைப்பாளர்’ கூர்ட் கேம்பல் ஆகியோரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்கள். பராக் ஒபாமாவின் துணை அதிபராக ...
Read More »ஆய்வுப் புலத்துக்குள் தமிழை முன்நகர்த்தல்
பண்பாட்டு ரீதியாக, நாம் மிகப்பாரிய நெருக்கடியில் இருக்கிறோம். எமது அடையாளங்களைத் தக்க வைக்கவும் மொழியைப் பேணவும் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும், நாம் அரும்பாடுபட வேண்டி இருக்கிறது. நாம், இதைச் சரிவரச் செய்வதற்கு, அறிவியல் ரீதியான அணுகுமுறை தேவைப்படுகிறது. ‘கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த இனம்’ என்ற, வெற்றுப் பெருமைகளில் விளையும் பயன் எதுவுமல்ல; எமது மொழியையும் பண்பாட்டையும் வரலாற்றையும், அறிவியல் ரீதியான சிந்தனைப் பரப்புக்குள் கொண்டு சேர்ப்பது முக்கியமானது. எமக்கான வரலாற்றை, வெறுமனே கட்டுக்கதைகளில் இருந்து உருவாக்கிவிட முடியாது. ஒடுக்கப்படுகின்ற ...
Read More »46 வது அமெரிக்க ஜனாதிபதியும் 46 வது ஐநா கூட்டத்தொடரும்
உலகம் இனவாதம் மற்றும் அது தொடர்பான தீவிரவாதங்களுக்கு எதிரான ஒரு அணியையும் மதவாதம் உள்ளிட்ட தீவிரவாதங்களை மூலதனமாகக் கொண்டு பயணிக்கும் மாற்று அணிக்கும் இடையிலான சவால்கள் நிறைந்த போக்குகளையே எதிர்காலத்தில் காணப்போகிறது. ஜோ பைடனின் வருகை மற்றும் அவரது பிரகடனம் குறிப்பாக இனவாதத்துக்கு எதிரான உள்நாட்டு தீவிரவாதத்துக்கு எதிரான முழக்கங்கள் எதிர்காலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் அரசியல் நிகழ்ச்சி நிரலை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வில் பெனிஸண்டோய்ஸ் உள்ளிட்ட முற்போக்கு எண்ணங்களை கொண்ட பலர் அணிவகுத்து நின்றனர். மறுபக்கத்தில் உலகின் பிற்போக்கு ...
Read More »மிகச்சரியான மாற்றம்
தற்போது நாட்டை ஆளும் அரசும், அதன் சமூக அரசியல் முறையும், அதன் பொருளாதாரமும் முழுமையாக முடங்கி விழுந்துள்ளது. அதுவும் வங்குரோத்து நிலை மற்றும் அராஜகத்தின் இருண்ட நிழல்கள் நாட்டை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. துரதிஷ்டவசமான கொவிட்-19 இன் பாதிப்பும் இந்த சந்தர்ப்பத்தில்தான் நாட்டை காவு கொண்டுள்ளது. இந்த நிலை நாட்டின் பொது மக்களது அன்றாட வாழ்க்கை ஓட்டத்துக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தியிருப்பினும் அதை பொருத்துக் கொள்ளும் நிலையில்தான் நாட்டு மக்கள் உள்ளனர். எனினும் அந்த நிலை நாளுக்கு நாள் மிக மோசமான நிலைக்கு மாற்றமடைந்து செல்வதை ...
Read More »அரசமைப்பின் முகப்புரை: ஒரு பேசப்படாத வரலாறு
கடந்த 2020-ல் இந்திய அரசமைப்புச் சட்டம் தொடர்பாக வெளிவந்த நூல்களுள் ஆகாஷ் சிங் ரத்தோர் எழுதிய ‘அம்பேத்கர்’ஸ் ப்ரியாம்பில்’ பரவலான கவனத்தைப் பெற்றது. ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒரு ரகசிய வரலாறு’ என்று தனது புத்தகத்துக்குத் துணைத்தலைப்பு இட்டிருந்தார் ஆகாஷ். அரசமைப்பின் திறவுகோல் என்று வர்ணிக்கப்படுவது அதன் முகப்புரை. ஜவாஹர்லால் நேருவால் முன்மொழியப்பட்ட குறிக்கோள் தீர்மானமே அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையாக அமைந்தது என்று கூறப்படுகிறது. முகப்புரை உருவாக்கத்தில் அரசமைப்புச் சட்ட ஆலோசகர் பி.என்.ராவ், அரசமைப்புச் சட்ட அவை உறுப்பினர்கள் ஆகியோரின் பங்களிப்புகளைக் குறித்து கேள்விகளை ...
Read More »நினைவேந்தல் அங்கிகாரங்கள்!
நினைவேந்தல் (Memorialisation) என்பது, பலவிதமான செயல்முறைகள் ஊடான கூட்டு நினைவூட்டலின் பல்வேறு வடிவங்களைக் குறிக்கிறது. இது நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நினைவுகளை முன்னிறுத்தும் முக்கிய இடங்கள், கடந்த காலத்தை எதிர்கொள்ளக்கூடிய முக்கியமான தளங்களைக் குறிக்கிறது. உலகெங்கிலும் வன்கொடுமை, சித்திரவதை, இனப்படுகொலை ஆகிய சம்பவங்களும் அவை நடந்தேறிய இடங்களும் மனிதப் புதைகுழித் தளங்களும் பிற ஒத்த இடங்களும், பொது நினைவுச் சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளன. 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் மனித அவலங்களுள் ஒன்றான ‘ஹோலகோஸ்ட்’ நடந்தேறிய நாஸிக்களின் அன்றைய சித்திரவதை முகாம்கள், இன்று நினைவேந்தல் ஸ்தலங்களாக மாறியுள்ளன. ...
Read More »
Eelamurasu Australia Online News Portal