கொட்டுமுரசு

சரணடைந்து பத்து வருடங்கள்- பிரான்சிஸ் அடிகளார் எங்கே?

தமிழில் ரஜீபன் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பத்துவருடங்களாகிவிட்டன.தங்கள் குடும்ப உறவுகளையும் நண்பர்களையும் இழந்த ஆயிரக்கணக்கானவர்களிற்கு அவை யுத்தத்தின் கொடுமையை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும் விடயமாக காணப்படுகின்றன. இது  பிரான்சிஸ் அடிகளாரின் கதை —————— மூன்று தாசப்தகாலம் நீடித்த அந்த ஈவிரக்கமற்ற யுத்தம் மே 18 ம் திகதி முடிவிற்கு வந்தது.ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என மதிப்பிடப்படுகின்றது.ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். இது இன அடிப்படையில் இடம்பெற்ற போர்.தமிழ் சிறுபான்மையினத்தவர்கள் மத்தியில் காணப்பட்ட சுதந்திர தேசத்திற்கான விருப்பம், ஆயுத பிரிவினைவாத கிளர்ச்சி குழுவான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ...

Read More »

‘ஐ.எஸ்-இலிருந்து மூவர் அனுப்பிய பணத்தை, படுக்கையறையில் பத்திரமாய் வைத்தேன்!

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் பயிற்சிபெற்ற இலங்கையைச் சேர்ந்த மூவரால், இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட 40 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவென, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்கவின் கவனத்துக்குக் கொண்டுவந்தது. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைவதற்காக, சிரியாவுக்குச் சென்ற முதலாவது இலங்கையர்கள் என்று கருதப்படும் மொஹமட் முஹூசீன் இஷாக் அஹமட், அவரின் சகோதரரான சர்பாஸ் நிலாம் மற்றுமோர் இலங்கையரான மொஹமட் அரூஸ் மொஹமட் சுஹைர் ஆகியோராலேயே அந்தப் பணம் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், ...

Read More »

இன்னலுக்குள்ளாகியிருக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்!

இலங்­கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற கொடூ­ர­மான குண்­டுத்­தாக்­கு­தல்கள் பயங்­க­ரத்­திற்கு எதி­ரான உல­க­ளா­விய போர் தொடர்­பி­லான விவா­தத்தை மீண்டும் மூள வைத்­தி­ருக்­கி­றது. அந்தத் தாக்­கு­தல்­க­ளுக்கு இஸ்­லா­மிய அரசு இயக்கம் உரிமை கோரி­யி­ருக்கும் நிலையில் சிரி­யா­வி­லி­ருந்த இஸ்­லா­மிய அரசின் முன்னாள் இராச்­சி­யத்­துடன் இலங்கைக் குண்­டு­தா­ரி­க­ளுக்கு இருந்த தொடர்­புகள் குறித்து உலகம் பூரா­க­வு­முள்ள கல்­வி­மான்­களும், அதி­கா­ரி­களும் ஆராய்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். குண்­டு­தா­ரி­களில் குறைந்­தது இரு­வ­ரா­வது சிரி­யா­விற்குச் சென்று வந்­தார்­க­ளென்று நம்­பப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் பயங்­க­ர­வாத எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களின் உல­க­ளா­விய பரி­மா­ணங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தற்­போது ...

Read More »

புர்கா தடை என்னும் அக்கினி!

“புர்கா/ நிகாப் இல்லாமல் வெளியே வரவே மாட்டேன்” என்று ஐந்து பெண் மக்களின் தாயொருவர் அடம்பிடித்து அழுதபடி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றார் என்ற செய்தி காது வழியாக நுழைந்தபோது மூளையின் நரம்புத் தொகுதிகளில் ஒரு பெருத்த வலியை உணர்ந்தேன். எமது பெண்களை ஆணாதிக்கம் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் இடம் இதுதான். “பாதுகாப்புக் காரணங்களுக்காக புர்கா/ நிகாப் தடை செய்யப்பட்டுள்ளதனால் பெண்கள் இவற்றை அணிந்து கொண்டு வெளியே வராதீர்கள், வீடுகளிலேயே இருந்துவிடுங்கள்” என்று மிக எளிதாக ஆண்கள் தீர்மானம் இயற்றிவிட்டார்கள். அவர்களுக்குத் தெரியாது புர்கா/ நிகாபை பாதுகாப்புக் ...

Read More »

தற்கொலை குண்டுதாரிகளின் 17 பாதுகாப்பான வீடுகள் முற்றுகை!

இலங்கை தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பான வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா காவல் துறை இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். அந்தவகையில் கொழும்பு, கல்கிசை, பாணந்துறை, கொச்சிக்கடை மற்றும் வத்தளை பகுதிகளிலேயே இந்த வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அதில் கொழும்பில் மட்டும் 3 வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் காவல் துறை விசேட அதிரடி படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுவந்தனர். அந்தவகையில் தற்கொலை குண்டு ...

Read More »

23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி நேபாள வீரர் சாதனை!

நேபாள நாட்டை சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா 23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனையை படைத்தார். நேபாள நாட்டை சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா (வயது 49). இவர் 8 ஆயிரத்து 850 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை 1994-ம் ஆண்டு முதல் ஏறி வருகிறார். 2017-ம் ஆண்டு அபா ஷெர்பா, புர்பா தாஷி ஷெர்பா ஆகிய வீரர்களுடன் எவரெஸ்ட் சிகரத்தை 21-வது முறையாக ஏறி கமி ரிதா ஷெர்பா சாதனையை பகிர்ந்து கொண்டார். மற்ற 2 ...

Read More »

காத்தான்குடியும் தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரானும்!

உள்­நாட்டு போர் நிறைவுகண்டு ஒரு தசாப்­தத்தை சந்­தித்­துள்ள இலங்கை மற்­று­மொரு காரி­ரு­ளுக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளது. உயிர்த்த ஞாயிறு உலகவாழ் கிறிஸ்­த­வர்­களால் கொண்­டா­டப்­ப­டு­கின்ற முக்­கிய பண்­டி­கை­யாகும். அன்­றைய தினத்தில் சற்றும் எதிர்­பா­ர்த்­தி­ராத வகையில் முக்­கிய மூன்று தேவா­ல­யங்கள் மற்றும் நட்­சத்­திர ஹோட்­டல்­களை குறிவைத்து தற்­கொலை தாக்­கு­தல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இந்த தாக்­குதல்கள் அனை­வ­ரையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது மாத்­தி­ர­மல்ல நாட்டில் மீண்டும் அச்சசூழலை உருவாக்­கி­யது.   உலகப் பயங்­க­ர­வாத அமைப்­பாக கரு­தப்­படும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்­பு­பட்ட உள்ளூர் தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பின் செயற்­பாட்­டா­ளர்கள் தான் இலங்­கையில் தொடர் தற்­கொலை ...

Read More »

தேவாலய குண்டுவெடிப்பில் சிவப்பு நிற ஆடையுடன் உலாவியவர் யார்?

அனைத்து விதமான தகவல்களையும் நாட்டுமக்களுக்கு வெளிப்படுத்துவது ஊடகத்துறையின் கடமையும் உரிமையும் ஆகும் . எனினும் சில தகவல்களை வெளியிடும் போது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இலங்கையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைப்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடும்போது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் . அனைத்துவிதமான செய்தி, தகவல்களை வெளியிடுவதற்கு முன்னர் கிடைக்கப்பெற்ற தகவலின் உண்மை தன்மை பற்றி அறிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும். நாம் தெரிவிக்கும் தகவல் சிலவேளைகளில் நிரபராதிகளை சந்தேக நபர்கள் எனும் போர்வையில் காட்டும். ...

Read More »

கோத்தாவதாரம் – என்.சரவணன்

ஈஸ்டர் குண்டுவெடிப்புகளில் அதிக அரசியல் லாபமீட்டக்கூடியவர்கள் மகிந்தவாதிகள் தான். எந்த ஒரு நிலைமையையும் தமக்கு சாதகமாக திசைதிருப்பிக்கொள்ளும் அரசியல் வியூகத்தை வடிவமைப்பதில் இலங்கையில் வல்லவர்களாக இருப்பவர்கள் மகிந்தவாதிகள் தான். ஈஸ்டர் படுகொலையில் அதிக அரசியல் லாபம் ஈட்ட முயற்சித்துக்கொண்டிருப்பவர் கோத்தபாய. அதிக அரசியல் லாபம் அடையக் கூடியவரும் அவர் தான். பிரதான கட்சிகள் இன்னமும் ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதிலும், வெளிப்படையாக பகிரங்கப்படுத்துவதிலும் ராஜதந்திரத்துடன் அணுகுவதாக அக்கட்சிகள் நம்பிக்கொண்டிருக்கின்றன. எதிரி தமது வேட்பாளரை அறிவித்ததும் அதற்குரிய சரியான சதுரங்கக் காயை ...

Read More »

மைத்திரி சீனா பயணமானார்!

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை சீனா நோக்கி பயணமாகியுள்ளார். இன்று காலை 7.35 மணியளவில் யூ. எல். 302 என்ற  ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் சீனா பயணமாகியுள்ளதுடன், ஜனாதிபதியுடன் 27 ​பேர் கொண்ட குழுவொன்றும் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »