இலங்கையானது கொரோனாவின் தாக்கத்திலிருந்து மீண்டாலும் அதன் பின்னர் ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முங்கொடுக்கும் சக்தியைக் கொண்டிருக்கவில்லை என்று பொருளாதார துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கைக்கு வருமானம் கிடைக்கும் அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ள நிலையிலும் உள்நாட்டு உற்பத்திகளை தவிர்த்து வெளிநாடுகளில் தங்கியிருக்கும் பொருளாதார கொள்கைகளை பின்பற்றி வந்தமையால் அடுத்துவரும் காலப்பகுதியில் ஏற்படப்போகும் மோசனமான நிலைமைகளை தவிர்க்கவே முடியாதென்றும் அவர்கள் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர். முழு உலகுமே கொரோனா தொற்றுக்குக்கு இலக்காகி நெருக்கடிகளை சந்தித்துள்ள நிலையில் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை அனைத்து நாடுகளுமே சந்திக்கவுள்ளதாக சர்வதேச பொருளாதார ஆய்வாளர்கள் ...
Read More »கொட்டுமுரசு
கொவிட் -19 கொரோனா வைரஸின் தாக்கமும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணமும்!
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடாக அனைவரும் நெருக்கடிகளை சந்திக்கும் இந்நேரத்தில் கொரோன வைரஸில் இருந்து விடுபடுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவது குறித்தும் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் தமது நிலைப்பாடுகளை முன்வைக்கும் விதத்தில் பாராளுமன்ற பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக கலந்துகொண்ட விவாதம் வியாழக்கிழமை “மந்திரி.எல்கே” வின் முகப்புத்தக பக்கத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் தத்தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். அரசாங்கம் அவசியமில்லை இராணுவம் போதும் என்ற கருத்துக்களை ஏற்றுகொள்ள முடியாது – முன்னாள் பாராளுமன்ற ...
Read More »மதுப்பழக்கத்தை மறக்கடிக்க உதவுமா ஊரடங்கு?
இந்த ஊரடங்கு காலத்தில் மதுப்பழக்கத்தில் சிக்கியோரை மீட்டெடுக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக மதுபிரியர்கள் கடும் திண்டாட்டத்தில் உள்ளனர். இந்தநிலையில் மது குடித்தே ஆகவேண்டும் என்ற வெறியில் வார்னிஷ் மற்றும் ஷேவிங் லோஷன் போன்றவற்றில் குளிர்பானம் கலந்து குடித்து தமிழகத்தில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். சமீபத்தில் பட்டாபிராமில் மது பழக்கத்துக்கு அடிமையான வாலிபர் ஒருவர் மதுபாட்டில் ...
Read More »தடைகளும் உலகளாவிய தொற்றுநோயும்!
மேற்காசிய நாடான ஈரான் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் கடுமையாக போராடிக்கொண்டிரும்கின்ற இந்த நேரத்தில் கூட, அதற்கு எதிரான தடைகளை தளர்த்துவதற்கு மறுத்த அமெரிக்காவின் செயல் மனிதாபிமான நெருக்கடிச் சூழ்நிலை முற்றுமுழுதாக அலட்சியம் செய்வதாக இருக்கிறது. மேற்காசியாவில் ஈரானிய இஸ்லாமிய குடியரசே வைரஸ் தொற்றுநோயினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்ட்டிருக்கும் நாடாகும். ஏற்கெனவே அங்கு 3,739 பேர் மரணமடைந்திருப்பதுடன் 62,589 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் ஈரான் பல முனைகளில் தோற்றுவிட்டது என்பதே உண்மையாகும். வர்த்தக நிறுவனங்கள், மத நிறுவனங்கள் மற்றும் மக்கள் ...
Read More »புதிய பட்டுப்பாதை – கொரோனா – சீனா வேகமாக நகர்கிறது……!
முழு உலகுமே செயலிழந்து ஸ்தம்பிதமடைந்துள்ள ;கொரேனா வைரஸ் குறித்து ஆரம்பத்திலிருந்தே சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒருவருக்கொருவராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர். அதவாது அமெரிக்க இராணுவமே கொரோனா வைரஸை சீனாவில் பரப்பியதாக சீன அரச தலைவர்கள் கடுமையாகவும் வெளிப்படையாகவும் குற்றம் சுமத்தினர். மறுப்புறம் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸை சீன வைரஸ் என அழைத்தது மாத்திரமின்றி திட்டமிட்டு முழு உலகிற்கும் சீனா வைரஸை பரப்பியதாக குற்றம் சுமத்தினார். இந்த இரு தரப்பு சொற் சமரின் ஊடாக இதுவரைக்காலமும் பணிப்போராக இருந்த ...
Read More »கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த்
இலங்கையின் கொரோனாவின் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கின்றபோதும் அடுத்துவரும் காலத்தின் எவ்வாறான நிலைமகள் இருக்கப்போகின்றது என்பதை கணிக்கமுடியாது. எனினும் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வருவது உறுதியாக இருக்கின்றபோதும் அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை வரையறுக்க முடியாது என்று கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய ஆலோசகரும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு பிரிவின் வைத்திய நிபுணருமான ம.உமாகாந்த் வழங்கிய செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்தான நிலைமைகள் எவ்வாறுள்ளன? ...
Read More »கொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது? –
வூஹான் வைத்தியர் விளக்கம் கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலின் தோற்றுவாயாக விளங்கிய மத்திய சீன நகரமான வூஹான் இருமாதகால முடக்கத்திற்குப் பிறகு மெதுமெதுவாக மீண்டு வந்துகொண்டிருக்கிறது. வூஹானிலும், அதை உள்ளடக்கிய ஹூபே ;மாகாணத்திலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக 6 நாட்களுக்கு எவருக்குமே தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கானோருக்குத் தினமும் அந்நகரில் தொற்று ஏற்பட்டுக்கொண்டிருந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இத்தகையதொரு மீட்சிநிலை நினைத்துப் பார்க்க முடியாததாகும் அந்த நகரில் கொவிட் – 19 இற்கு எதிரான போராட்டத்தில் முன்னரங்கத்தில் நின்று செயற்பட்டவர் ...
Read More »சிறு வயதிலேயே காய்ச்சலும் சில வைரஸ்கள் தாக்குவதும் நல்லது… ஏன்?
உலகை உலுக்கிய கொள்ளைநோய்களில் 1918-ல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சலுக்கு வரலாற்றிலேயே முக்கிய இடம் உண்டு. முதலாம் உலகப் போர் முடிவில் அதுவும் தன் பங்குக்குப் பல கோடி உயிர்களைக் காவுவாங்கியது. போர் நடைபெறாத பசிபிக் தீவுகள், ஆர்க்டிக் துருவப் பகுதியின் கிராமங்களில்கூட காய்ச்சல் கோரத் தாண்டவம் ஆடியது. அன்றைய உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினரைக் காய்ச்சல் பீடித்தது. ஐந்து கோடிக்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலில் இறந்தனர். முதலாம் உலகப் போரில் இறந்தவர்களைவிட மூன்று மடங்கு மக்கள் இந்தக் காய்ச்சலில் இறந்தனர். 1918 காய்ச்சலின் முக்கியத்துவம் என்னவென்றால், ...
Read More »புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரசால் மிகப்பெரிய ஆபத்து…
புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரசால் மிகப்பெரிய ஆபத்து என்று உலக மருத்துவ துறை வல்லுனர்கள் அனைவரும் பதில் அளித்துள்ளனர். ‘புகை நமக்கு பகை’, ‘புகை பிடிக்காதீர்கள்’ என்ற விளம்பரம் சிகரெட் பாக்கெட் முதல் திரையரங்கம் வரையில் இடம்பிடிக்கிறது. ஆனால், புகை பிடிப்பதால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீங்கை விளக்கும் இந்த விளம்பரங்கள், இன்று ஒரு நகைச்சுவை மற்றும் கேலிசெய்வதற்கான வசனாமாக மாறிவிட்டது. புகை பிடித்தல் பல வழிகளில் நமது நுரையீரலை பாதிக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. நுரையீரல் தொற்று, ஆஸ்துமாவில் ஆரம்பித்து நுரையீரல் புற்றுநோய் வரையில் ...
Read More »கொரோனா: தீண்டத் தகாதது!
இது தொடு திரை உலகம். ஆனால் இப்பொழுது தொடுகையே பாவம் என்றாகிவிட்டது. ஒருவர் மற்றவரைத் தொட்டால் நோய் தொற்றிக் கொள்ளும் என்ற நிலை. இதனால் மனிதர்கள் ஒவ்வொருவரும் மற்றவரிலிருந்து விலகி நடக்கிறார்கள். வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிறார்கள். பூமி முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஒன்றில் ஊரடங்குச் சட்டம் அல்லது சனங்கள் தாங்களாகவே தங்களை வீடுகளுக்குள் அடைத்துக் கொள்ளும் ஒரு நிலை. நோயில் வாடும் ஒருவருக்கு மருந்து மட்டும் போதாது. அருகிலிருந்து அன்பாக யாராவது கவனிக்க வேண்டும். அருகில் இருப்பவரின் அன்பான அரவணைப்பு நோய் எதிர்ப்பு சக்தியை ...
Read More »
Eelamurasu Australia Online News Portal