கொட்டுமுரசு

காணி அதிகாரத்தை வழங்காத அரசு காணித் துண்டுகளை வழங்கப் போகிறதா?

சில ஆண்டுகளுக்கு முன் வலிகாமம் பகுதியில் பங்குத் தந்தையாக பணிபுரிந்த ஒரு மதகுரு சொன்னார்….. “யாழ்ப்பாணத்தில் அதிகம் தோட்டக் காணிகளைக் கொண்ட ஒரு பிரதேசம் அது. படைத் தரப்பின் ஆக்கிரமிப்புக்குள் அதிகம் தோட்டக் காணிகளை இழந்த ஒரு பிரதேசமும் அது. அப்பிரதேசத்தில் இப்பொழுது விவசாயம் செய்வது அதிகம் முதியவர்களும் நடுத்தர வயதினரும்தான்” என்று. இளவயதினருக்கு விவசாயத்தில் ஆர்வம் இல்லை. அவர்கள் பெருமளவுக்கு முதலில் படிக்கப் போகிறார்கள். ஆனால் படிப்பையும் முடிப்பதில்லை. இடையில் முறித்துக் கொண்டு லீசிங் கொம்பெனிகளில் வாகனங்களை வாங்கி ஓடுகிறார்கள். எல்லாரும் ஒரேயடியாக ...

Read More »

மாவீரர்களின்தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம்

கோத்தபாய அரசின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரை ஆற்றினார். அவரது உரையின் போது சிங்கள எம்.பி.க்கள் பலர் குழப்பமிட்டு உரையை குழப்ப முற்பட்டனர். பேரினவாதிகளின் குழப்பங்களை தாண்டி அவர் ஆற்றிய உரை வருமாறு; “தமிழ் அரசியல் நாட்காட்டியில் மிக முக்கியமானதும் புனிதமானதுமான வாரத்தின் முதல் நாளில் எமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் தேசத்திற்காகவும் போராடி தமது உன்னதமான உயிர்களையே தியாகம் செய்த அந்த உன்னதமானவர்களுக்கு எமது தலைகளை சாய்த்து ...

Read More »

தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்

பெருந் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளை இலங்கை தேசத்தின் சமூக பொருளாதார பிரச்சினையாக அணுகப்படாதவரை அதற்கு உரிய தீர்வினை நாட முடியாது என்கிறார் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா . உரையாடல் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவருடனான உரையாடல்; கேள்வி : ஆயிரம் ரூபா சம்பள விடயத்தை அரசாங்கம் 2021 வரவு செலவு திட்டத்தில் இணைத்து இருப்பது பற்றிய உங்களது கருத்து என்ன ? திலகர்: சாத்தியமில்லாத அறிவிப்புதான் ஆனாலும் வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பினை சாதகமாக்கி தோட்டத் தொழிலாளர்களின் ...

Read More »

உரிமையையும் தார்மீகக் கடமையையும் தடுப்பதுதான் ஜனநாயக சோசலிசக் குடியரசா?

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தம் இன்னுயிரை ஈந்த போராளிகளையும் பொது மக்களையும் நினைவுகூர்வதென்பது தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை உரிமையாகும். அந்த வகையில் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதியன்று தமக்காக மரணித்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பதுதான் ஜனநாயக சோசலிச குடியரசு ஆட்சியா என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு: யுத்தத்தினால் மடிந்து போன மக்களை போராளிகளை நினைவு கூர்வதற்கான ...

Read More »

ஒசாமாபின்லேடனை கொல்வதற்கான நடவடிக்கை

ஜோ பைடன் எச்சரித்தார்- ஹிலாரி ஆதரித்தார் – தனது நூலில் பராக் ஒபாமா ஒசாமாபின்லேடனை கொல்வதற்கான நடவடிக்கை குறித்து ஜோ பைடன் தன்னை எச்சரித்தார் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது நாளை வெளியாகவுள்ள புரொமிஸ்ட் லான்டில் தெரிவித்துள்ளார். நேவி சீல்ஸ் நடவடிக்கை குறித்த கலந்தாலோசனையின் போது ஜோ அந்த நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டாம் என கேட்டுக்கொண்டார் என ஒபாமா எழுதியுள்ளார். 2011 மே மாதம் முதலாம் திகதி ஒபாமா நேவிசீல்ஸ் குழுவை பாக்கிஸ்தான் அனுப்பியிருந்தார். தோல்வியால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகள் குறித்து ...

Read More »

சீனா முன் அமெரிக்கா தோல்வி!

அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக ஜனவரி மாதம் பதவியேற்கவுள்ள நிலையில், ஆசியான் நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு (Regional Comprehensive Economic Partnership) (RCEP) ஒப்பந்தத்தில் 15 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. உலகின் 39சதவீத பொருளாதார கட்டமைப்புகளை இந்த நாடுகள் உள்ளடக்கியுள்ளதால் உலகின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தமாக மலேமெயில் என்ற மலேசிய ஊடகம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் பத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் தென் கொரியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியே ...

Read More »

கமலாவோ விமலாவோ யார் வந்தாலும் ஒரு கட்டமைப்பு வேண்டுமே?

கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் மத்தியில் உற்சாகம் மேலிட்டுள்ளது. அதிலும் சற்று கற்பனை கூடிய சிலர் கமலாவின் பூர்வீகத்தை இந்தியாவில் இருந்து பெயர்த்து எடுத்து மானிப்பாய் வரை கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள். வேறு சிலர் கமலா ஹாரிஸின் அலுவலகப் பிரதானியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் வேரைக் கொண்ட பெண்ணாகிய ரோகிணி லக்ஷ்மி கொஸோக்லு  குறித்தும் பெருமைப்படுவதாகத் தெரிகிறது. இவ்வாறு கமலாவுக்கும் ரோகிணிக்கும் சொந்தம் கொண்டாடி கமலாவின் வருகையால் தமது அரசியல் வாழ்வில் ...

Read More »

ஜோ பைடனை இலங்கை எப்படிச் சமாளிக்கும்?

அமெரிக்கா ஓர் உலகப் பேரரசு. அது தன் எதிர்காலத்தை நூற்றாண்டுக் கணக்கில் அல்லது ஆயிரமாண்டுக் கணக்கில் திட்டமிடும். எனவே அதன் வெளியுறவுக் கொள்கை; பாதுகாப்பு கொள்கை; பொருளாதாரக் கொள்கை போன்றன நூற்றாண்டுக் கணக்கிலேயே திட்டமிடப்படும். இவ்வாறு நூற்றாண்டுக் கணக்கில் திட்டமிடப்படும் ஒரு வெளியுறவுக் கொள்கையை நான்கு ஆண்டுகள் ஜனாதிபதியாக இருக்கும் ஒரு புதிய தலைவர் எடுத்த எடுப்பில் மாற்றிவிட முடியாது. ஆனால் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் அது சாத்தியம். அண்மையில் தெரண ஆங்கில ஊடகத்துக்கு இலங்கையின் வெளிவிவகார செயலரும் ஓய்வுபெற்ற வான்படைப் பிரதானியுமான ...

Read More »

முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்யும் விவகாரம்- ஐநா பிரதிநிதி மகிந்தவிற்கு கடிதம்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கான ஒரே வழி அவர்களின் உடல்களை தகனம் செய்வதே என்ற இலங்கையின் சுகாதாரஅமைச்சின் வழிகாட்டுதல்கள் குறித்து ஐநா கரிசனை வெளியிட்டுள்ளது. ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த கரிசனையை வெளியிட்டுள்ளார். கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கான தற்போதைய தடை வெகுவிரைவில் மறுஆய்விற்கு உட்படுத்தப்படலாம் என ஊடகங்களில் வெளியான அறிக்கைகளை நான் ஆர்வத்துடன் தொடர்ந்து அவதானித்து வருகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். இந்த சூழமைவில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கான ...

Read More »

ஜோ பைடனிற்கு சென்னையுடன் உள்ள தொடர்பு என்ன?

அமெரிக்க தேர்தலிற்கு முன்னர் ஜோ பைடனிற்கும் தமிழகத்திற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து தெரிவித்த கட்டுரையொன்று மீண்டும் பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது.அந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகள் ஜோ பைடனிற்கு இந்தியாவுடன் பூர்வீகத்தொடர்பொன்றுள்ளது.கமலா ஹாரிசிற்கு உள்ளதை போல. இருவரினதும்  பூர்வீகதொடர்புகள் சென்னையில் காணப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 19ம் நூற்றாண்டின் போது வில்லியம் பைடன் கிறிஸ்டொபர் பைடன் சகோதரர்கள் கிழக்கிந்திய கம்பனிக்காக பணியாற்றியிருந்தனர்.இந்தியாவிற்கும் லண்டனிற்கும் இடையிலான கடினமான கடற்பயணத்தினை அவர்கள் மேற்கொண்டிருந்தனர். வில்லியம் சிறுவயதிலேயே மரணித்த போதிலும்,கிறிஸ்டபர் பல கப்பல்களின் தலைமை மாலுமியாக பணியாற்றிய பின்னர் அவ்வேளை செல்வச்செழிப்பு ...

Read More »