செய்திமுரசு

யாழில் 58 பேர் உட்பட வடக்கில் மேலும் 74 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 58 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 74 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடம் என்பவற்றில் 853 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 58 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேரும் மன்னார் மாவட்டத்தில் 2 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும் வவுனியா மாவட்டத்தில் ...

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை சேதப்படுத்திய சிங்களப் பேரினவாத அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை சேதப்படுத்திய சிங்களப் பேரினவாத அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்என என மே17 இயக்கம் தெரிவித்துள்ளது மே 17 இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது ஆங்கிலேய காலனியாதிக்க விடுதலைக்கு பிறகான ஒன்றிணைந்த இலங்கை தீவில் ஈழத் தமிழர்கள் ஒடுக்கப்பட்டதன் விளைவாக எழுச்சிபெற்ற தமிழீழ விடுதலை போராட்டத்தை நசுக்க, தனது புவிசார் நலனுக்காக இலங்கை, இந்தியாவுடன் இணைந்த வல்லாதிக்க நாடுகள் 2009 மே மாதம் தமிழர்கள் மீதான இனப்படுகொலையை அரங்கேற்றியது. தமிழீழத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ...

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்றத் தடை உத்தரவு பெற்ற காவல் துறை

முள்ளிவாய்க்காலில் எந்த நிகழ்வும் நடத்தக் கூடாது மக்கள் கூடக் கூடாது பொது இடத்தில் வைத்து எந்த நினைவுகூரக் கூடாது என்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் காவல் துறை  தடை உத்தரவு பெற்றுள்ளனர். அத்துடன் முள்ளிவாய்க் காலில் நினைவேந்தலில் ஈடுபட ஐந்து பேருக்கு எதிராகவும் காவல் துறை   தடை உத்தரவு பெற்றுள்ளனர். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் 18ஆம் திகதி நினைவுகூரப்படவுள்ளது. இந்நிகழ்வை தமிழ் மக்கள் நினைவேந்துவதற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் முல்லைத்தீவு காவல் துறை   நேற்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் தடை ...

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டுள்ளது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவுமுற்றத்தில் காணப்பட்ட நினைவுத்தூபி அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. நடுகல் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட நினைவுக்கல்லும் காணாமல் போயுள்ளது

Read More »

அச்சத்தில் அகதிகள்….குறுகிய காலத்தில் நேர்காணல்

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலணைக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த நிலையில் திடீரென இரண்டு வாரங்களில் நேர்காணல் எனும் அறிவிப்பு ‘போதுமான காலமல்ல’ என அகதிகளின் வழக்கறிஞர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை பரிசீலணை வேகப்படுத்தப்பட்டுள்ளதனால், அந்நாட்டில் பல ஆண்டுகளாக வசித்து வரும் சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட அகதிகள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த பல அகதிகள் ஆஸ்திரேலிய உள்துறையுடனான இந்த நேர்காணல்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் பாதுகாப்புக் கோரியுள்ள இந்த அகதிகள் ...

Read More »

அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் அடைபட்டிருக்கும் ஈழ தமிழ் சிறுமிகளின் கதை!

5 வயதாகும் கோபிகா தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் அடைப்பட்டுக் கழித்து வருகிறார். 2019-ஆம் ஆண்டு கோபிகாவின் குடும்பம் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுற்றிலும் வேலியிடப்பட்ட 24 மணி நேரக் கண்காணிப்பில் உள்ள வளாகத்தில் அவர்கள் அடைக்கப்பட்டனர். கோபிகாவுக்கு நண்பர்கள் வைத்திருக்கும் பெயர் கோபி. அவருக்கு பள்ளி செல்ல அனுமதி உண்டு. ஆனால் காவலர்களின் வேனில்தான் செல்ல வேண்டும். பள்ளி மட்டும்தான் கோபிகாவுக்கு கவலைகளை மறக்கும் மகிழ்ச்சியான இடம். “நம்மை ஏன் அவர்கள் ...

Read More »

மே 18 – இனப்படுகொலை நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால், தமிழ் இனப்படுகொலை 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் ; நினைவு வழமைபோன்று, திட்டமிட்டபடி, இவ்வாண்டும் மே 18 அன்று, கொவிட் 19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் தமிழர் அடக்குமுறைக்கெதிரான எழுச்சிமையம். அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டங்கள் அணுகுமுறை சார்ந்து& பின்னடைவுகளைச் சந்திக்கின்றனவே தவிர, விடுதலை பெறும் வரை ஓய்ந்துவிடுவதில்லை என விடுதலைப் போராட்ட வரலாற்றியல் எமக்குக் கற்பித்திருக்கின்றது . முள்ளிவாய்க்காலும் இதற்கு விதிவிலக்கல்ல ...

Read More »

டிசம்பருக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: ஆஸ்திரேலியா திட்டம்

மற்ற நாடுகளை விட எல்லையை மூடுவதில் சற்றும் தயங்காத ஆஸ்திரேலியா, வயது வந்த அனைவருக்கும் டிசம்பருக்குள் தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றை ஆஸ்திரேலியா வித்தியாசமாக எதிர்கொண்டது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் உலகளவில் பரவியது போது உடனடியாக நாட்டின் எல்லையை மூடியது. மாநிலங்களுக்கு இடையிலும் கடுமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று வெகுவாக குறைந்தது. நாடு தழுவிய கொரோனா தொற்று என்பதை முறியடித்தது. தற்போது உருமாறிய கொரோனா 2-வது அலை, 3-வது அலை ...

Read More »

மே 18ஐ இனப்படுகொலை நாளாகவும் செப நாளாகவும் அனுஷ்டிக்க வட,கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு

வடக்கு – கிழக்கு ஆயர் மன்றத் தால் மே மாதம் 18ஆம் திகதி குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. போரில் பலியானோரை நினைவுகூரும் தினம் என்று குறிப்பிடப்பட்டு வெளியிடப் பட்டுள்ள குறித்த அறிக்கையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கி. நோயல் இம்மானுவேல், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு யோசப் பொன்னையா ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர். அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு:- “மே ...

Read More »

யாழில் 35 பேர் உட்பட வடக்கில் மேலும் 55 பேருக்கு கொவிட்-19 தொற்று

யாழ்ப்பாண மாவட்டத்தில் 35 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் ஆயிரத்து 18 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 35 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேரும், வவுனியா மாவட்டத்தில் 7 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ...

Read More »