அவுஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் சிறிலங்காவிற்கு பல்லிகளை போன்ற அபூர்வ உயிரினங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த உயிரினங்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரினங்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அவுஸ்திரேலியாவில் இருந்து சில பொதிகள் விமானம் மூலம் சிறிலங்காவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன. அந்த பொதியில் விலாசம் எழுதப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த பொதியை பெற்றுக்கொள்ள வருமாறு பொதியில் இருந்த விலாசத்திற்கு அறிவித்த போதும் அதனை ...
Read More »செய்திமுரசு
சிங்கப்பூர் தமிழ் மந்திரிக்கு வடகொரிய அதிபர் நன்றி!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சிங்கபூர் தமிழ் மந்திரிக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் நன்றி தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உடனான சிங்கப்பூர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. சீனாவுக்கு பின்னர் வட கொரிய ஜனாதிபதியின் 2-வது வெளிநாட்டு பயணம் இதுவாகும். இந்த மாநாடு வெற்றிகரமாக நிகழ சிங்கப்பூர் வெளி விவகாரத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் முக்கிய காரணமாக இருந்தார். இந்திய வம்சாவளி ...
Read More »நுண்கடன் நிறுவனத்துக்கு எதிராக செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!
முல்லைத்தீவு நகரில் இயங்கும் நுண் கடன் வழங்கும் நிறுவன ஊழியர் ஒருவரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திர ஊடகவியலாளராக தொழிற்படும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (14) முல்லைத்தீவு நகரில் நுண் கடன் திட்டங்களுக்கு எதிராகவும் நுண் நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும் அதனால் பாதிக்கபட்ட பெண்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இந்தநிலையில் குறித்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை முல்லைத்தீவு நகரில் இயங்கும் பிரபல நுண்நிதிநிறுவன ஊழியர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டதாக போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த ...
Read More »அபாயகரமான வெடிபொருட்கள் ஸார்ப் நிறுவனத்தால் அகற்றப்பட்டு அழிக்கபட்டது!
கிளிநொச்சி மாவட்டத்தில் பளைப்பகுதியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 மே மாதம்; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் நான்கு இலட்சத்து தொண்ணூற்றொராயிரத்து முந்நூற்று தொண்ணூற்றெட்டு சதுரமீற்றர் பரப்பளவில் (491,398sqm ) இருந்து ஜந்தாயிரத்து இருநூற்று பதினான்கு(5214) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ...
Read More »தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை ஒப்படைக்க ஆஸ்திரேலியா அரசு சம்மதம்
திருப்பனந்தாள், சீர்காழி, மயிலாடுதுறை உள்பட தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டுள்ள மேலும் 7 சிலைகள் மீட்கப்பட இருக்கிறது. இந்த சிலைகளை ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு சம்மதம் தெரிவித்து உள்ளது. தமிழக கோவில்களில் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்திச்சென்று விற்பனை செய்யப்பட்ட சாமி சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் மீட்டு வருகிறார்கள். ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச்செல்லப்பட்ட 3 சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது மேலும் 7 சாமி சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டிருப்பது ...
Read More »தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல!-சுவிற்சர்லாந்து நீதிமன்றம்
14. 06. 2018 இன்று சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்து தீர்பளித்தது. விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்பளித்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு என சுமத்தப்பட்ட குற்றமும் தவறென நீதிமன்றம் தீர்ப்பளித்து. உலக தமிழ்ர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC)யை ஒரு குற்றவியல் அமைப்பாகக் கருதுவதில்லை என தீர்ப்பளித்துள்ளது. விசாரணையில் 13 செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நிபந்தனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என பெடரல் ...
Read More »ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை!
பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் ஆறு மாதங்களில் கழிக்கும் வகையில் ஓராண்டுகால கடூழிய சிறை தண்டனை விதித்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவிற்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றத்திக்காக, பொதுபல சேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேருக்கு தண்டனை வழங்கும் வழக்கு விசாரணை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. நீண்ட விசாரணைகளின் பின்னர், இந்த வழக்கில் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக கடந்த மே மாதம் 24ம் திகதி நீதிமன்றால் அறிவிக்கப்பட்டார். அத்துடன் ...
Read More »பாறைகளுக்கு நடுவே குளித்த ஒருவர் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்!
அவுஸ்திரேலியாவில் பாறைகளுக்கு நடுவே குளித்த ஒருவர் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியா கடல் பகுதியில் நண்பர்கள் இருவர் குளித்து கொண்டிருந்தனர். அவர்கள் இருந்த பகுதி பாறை என்பதால் அதனுள் பாய்ந்து செல்லும் அலை மீண்டும் வாரிச் சுருட்டி கடலுக்குள் செல்லும். அதில் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் அலையால் இழுக்கப்பட்டு மீண்டும் பாறைப் பகுதிக்கு வந்துவிட்டார். அடுத்த அலையின் போது மற்றொரு நண்பர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. காணாமல் போனவரைத் தேடும் பணியில் காவல் துறையினர் , கடலோர ...
Read More »கூட்டமைப்பு கூட இன அழிப்பு என்பதனை ஏற்க மறுத்து விட்டது!
இலங்கைத்தீவில் இடம்பெற்ற இன அழிப்பு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புச்சபை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் பிரேரிக்கப்பட்ட தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளிட்ட கட்சிகள் கால அவசாகசம் கேட்டு பிரேரணையை ஏற்க மறுத்துள்ளன. குறித்த பிரேரணையில் இன அழிப்பு என்ற சொற்பதம் காணப்படுவதால் அதனை ஏற்க மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. வலிகாமம் தெற்கு ...
Read More »வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பை உறுதி செய்ய மூன்று நாடுகள்!
வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பினை உறுதிப்படுத்துவதற்காக அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து செயல்பட உள்ளன. அணு ஆயுத சோதனைகள் மற்றும் ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை அதிகரித்து வந்த வடகொரியா, தற்போது சமாதானத்தையும் அமைதியையும் விரும்புகிறது. முதற்கட்டமாக அணு ஆயுத சோதனை மையத்தை அழித்தது. அத்துடன் அணு ஆயுத திட்டங்களையும் கைவிட தயாராக உள்ளது. இதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இருவரும் சிங்கப்பூர் சந்திப்பின்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அப்போது தங்களிடம் ...
Read More »