செய்திமுரசு

சிறிலங்கா தம்பதியை நாடுகடத்துகிறது அவுஸ்ரேலியா!

அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமை கோரிய சிறிலங்கா தம்பதியினர் நாடு கடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எரங்க ரணசிங்க ஆராச்சிகே என்ற சிறிலங்காவைச் சேர்ந்தவரின் குடும்பமே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தம்பதியினர் எதிர்வரும் 26 ஆம் திகதி நாடு கடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் குறித்த தம்பதியினர் அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றுக்கொள்வதற்காக பாரியளவில் நிதி செலவிட்டுள்ளதாகவும், இருப்பினும் அவை எவ்வித பலனையும் கொடுக்கவில்லையெனவும் கூறப்படுகிறது..

Read More »

ரோகித் சர்மா 5-வது இடத்துக்கு முன்னேற்றம்!

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 296 ரன்கள் குவித்த இந்திய வீரர் ரோகித் சர்மா (790 புள்ளிகள்) 4 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர்கள், ஆல்-ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கப்டன் விராட்கோலி (877 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 296 ரன்கள் குவித்த இந்திய வீரர் ரோகித் சர்மா (790 ...

Read More »

மெல்பேர்ன் அணிக்கு வெற்றி!

சிட்னி ANZ அரங்கில் NRL premiership இறுதிச்சுற்று நேற்று இடம்பெற்றது. இந்த ஆட்டத்தில் Melbourne Storm அணி North Queensland Cowboys அணியினை வென்றுள்ளது. 34-6 என்ற கணக்கில் வென்று வெற்றிக் கனியை எட்டிப்பிடித்து கோப்பையை தனதாக்கிக் கொண்டுள்ளது.

Read More »

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான 3 டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி செப்டம்பர் மாதம் 17-ம் திகதி இந்தியா வந்தது. ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றியது. இந்நிலையில் டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக் மற்றும் ஷிகர் தவான் ...

Read More »

மனுஸ் தீவு தடுப்புமுகாமிலிருந்து ஈழ தமிழர் ஒருவர் தற்கொலை!

மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில், ஈழ தமிழர் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என்று பபுவா நியூகினியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலையில் 32 வயதுடைய ஈழ தமிழரான ஆண் ஒருவர், மருத்துவமனையில் மரணமானார் என்று பபுவா நியூகினியா காவல்துறை தலைவர் டொமினிக் ககாஸ், உறுதிப்படுத்தியுள்ளார். இவர் லொரென்கு மருத்துவமனையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்று அகதிகள் நடவடிக்கை கூட்டணியைச் சேர்ந்த இயன் ரின்ரோல் தெரிவித்துள்ளார். மருத்துவமனையின் சமையல் கூடம் அருகே இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனுஸ் ...

Read More »

அவுஸ்ரேலியா: புற்றுநோய் இருப்பதாக கதைவிட்ட வலைப்பதிவருக்கு அபராதம்

உடல்நலம் குறித்து இணையத்தில் பதிவிடும், அவுஸ்ரேலிய வலைப்பதிவர் பெல் கிப்சனுக்கு, தனக்கு புற்றுநோய் உள்ளதாக தவறான தகவல்களை அளித்து, வாசகர்களை ஏமாற்றியதற்காக 3,22,000 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 25 வயதாகும் பெல் கிப்சன், இயற்கை மருத்துவத்தின் மூலம், புற்றுநோயில் இருந்து குணமடைந்ததாகக் கூறியதைத் தொடர்ந்து, அவுஸ்ரேலியாவில் மிகவும் பிரபலமானார். வெற்றிகரமாக ஒரு செயலியையும், உணவுப் பழக்கம் குறித்த புத்தகத்தையும் வெளியிட்ட அவர், பின்பு தனது நோய் குறித்து பொய் கூறியதாக ஒப்புக்கொண்டார். கடந்த மார்ச் மாதம், நுகர்வோர் சட்டத்தில் 5 விதிமீறல்களை அவர் செய்துள்ளதாக ...

Read More »

இந்தியா – அவுஸ்திரேலியா மோதும் 5-வது ஒருநாள் கிரிக்கெட் நாளை

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில்  (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவுள்ளது. ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டித் தொடரில் இதுவரை நடந்த 4 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் 26 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்திலும், இந்தூரில் நடந்த 3-வது ...

Read More »

அவுஸ்திரேலியாவுக்கு அதிரடி எச்சரிக்கை கொடுத்த அமெரிக்கா!

வடகொரியாவின் தாக்குதலிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு அவுஸ்திரேலியா தனது ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த தகவலை அமெரிக்கா பென்டகனிலுள்ள அணுஆயுத மற்றும் ஏவுகணை எதிர்ப்புப்பொறிமுறை குறித்த முன்னாள் உயர் அதிகாரி Dr Brad Roberts கூறியுள்ளார். அத்துடன் அவுஸ்திரேலியா மீது வடகொரியாவின் ஏவுகணை எப்போது வேண்டுமானாலும் தாக்கக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »

அவுஸ்ரேலியா செல்லும் இங்கிலாந்து அணியுடன் பென் ஸ்டோக்ஸ் செல்லமாட்டார்!

ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா செல்லும் இங்கிலாந்து அணியுடன் பென் ஸ்டோக்ஸ் செல்லமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளார். ஆக்ரோஷமாக விளையாடும் பென் ஸ்டோக்ஸ், மைதானத்திற்கு வெளியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதுண்டு. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய பின்னர், நள்ளிரவு கிளப் சென்றார். பின்னர் அங்குள்ள நபர் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் காவல் துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அதன்பின் ...

Read More »

மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகதீபம் கலைமாலைநிகழ்வு 2017

பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர்க்கந்தன் ஆலய முன்றலில் நீர்கூட அருந்தாது பன்னிருநாட்கள் சாகும்வரை உண்ணாநோன்பிருந்து 26-09-1987 அன்று ஈகைச்சாதவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் முப்பதாவது ஆண்டு நினைவு தினமும் தியாகதீப கலைமாலை நிகழ்வும் 30-09-2017 சனிக்கிழமையன்று மாலை 6.00மணிமுதல் 8.00மணிவரையும் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரத்தில் சென்யூட்ஸ் மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 26-09-2001 அன்று சிறிலங்காப் படைகளின் ஆழஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கேணல் சங்கர் அவர்களையும் 25-08-2002 ...

Read More »