சிறிலங்கா படையினருக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச தலையீடு அவசியம் இல்லை என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பின்னர் அவர்களின் கேள்விகளிற்கு பதிலளிக்கையில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் 2015 இல் பதவியேற்ற பின்னர் ஜனநாயகத்தை மீள ஏற்படுத்தியுள்ளது நீதித்துறை உட்பட பொது ஸ்தாபனங்களின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது நல்லிணக்கம் உட்பட யுத்தம் சம்பந்தமான விடயங்களிற்கு பெருமளவிற்கு தீர்வை கண்டுள்ளது எனவும் சிறிலங்கா ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ...
Read More »செய்திமுரசு
யாழ்.பல்கலை மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவனி!
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவனியை ஆரம்பித்து உள்ளனர். யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் குறித்த நடைபயணத்தை ஆரம்பித்து உள்ளனர். அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய், அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல அது ஓர் அரசியல் விவகாரம். எனவே அரசியல் கைதிகளின் அரசியலை பயங்கரவாதமாக பார்க்குமோர் சட்டக்கட்டமைப்புக்குள் நின்று அதை சட்ட விவகாரமாக அணுக கூடாது. மாறாக அதனை அரசியல் ...
Read More »சேலைக்கு வழங்கப்படுகின்ற பிணை காவிக்கு இல்லை!-சுதந்த தேரர்
நாட்டில் பொட்டு வைத்தவர்களுக்கும், சேலை அணிந்தவர்களுக்கும் தனியாக தொழிற்படுகின்ற சட்டம் காவியுடை அணிந்தவர்களுக்கு வேறொரு வகையில் செயற்படுகின்றது. நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படக் காரணமாக இருந்த புலிகள் மீண்டும் வரவேண்டும் எனப் பகிரங்கமாகக் கோரிய சேலை அணிந்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற பிணை நாட்டினதும், சிங்கள பௌத்தர்களினதும் உரிமைகளுக்கான குரல்கொடுத்த கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்படாதது ஏன் என சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் கேள்வி எழுப்பினார். ராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபலசேனா அமைப்பின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...
Read More »ஈழப்போரில் இறந்த அம்மாவிடம் பால் குடித்த ராகிணி… இப்போது எப்படி இருக்கிறாள்?
இலங்கையில் 2008-09-ம் ஆண்டுகளில் நடந்த போரில் கொல்லப்பட்டவர்கள் ஏராளம். உடல் உறுப்புகளை, உறவுகளை, உடைமைகளை இழந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சம். போர் நடந்து 10 ஆண்டுகள் ஆனபோதும், அந்தத் துயரத்தின் வலியைச் சுமந்துவாழ்பவர்களின் நிலையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. போர் நடந்துகொண்டிருந்தபோது, அங்கிருந்து வந்த காட்சிகள் நம் மனத்தை உலுக்கி தீபச்செல்வன்எடுத்தன; வற்றாத கண்ணீரை வரச்செய்தன; மாபெரும் குற்றஉணர்ச்சிக்குள் தள்ளின. அதிலும், தாய் மாண்டது தெரியாமல், அவள் மார்பில் பால் குடிக்கும் 8 மாதக் குழந்தையின் புகைப்படம், இதுபோன்ற நிலை உலகின் எந்தக் குழந்தைக்கும் ...
Read More »அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினார் நவாஸ் !
ஊழல் வழக்கில் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நவாஸ் ஷெரீப் மீண்டும் தனது அரசியல் நடவடிக்கைகளை நேற்று தொடங்கினார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித்தலைவருமான நவாஸ் ஷெரீப், பனாமா பேப்பர் ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்றார். சுமார் 2 மாதங்கள் சிறையில் இருந்த அவர் மனைவியின் மரணத்துக்காக பரோலில் வந்தார். பின்னர் அவருக்கு கடந்த மாதம் 19-ந் திகதி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. முன்னதாக தனது மனைவியின் உடல் நலக்குறைவு மற்றும் சிறைத்தண்டனை ...
Read More »ஆபத்தான நிலையில் மேத்யூ ஹேடன்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது, மிகப்பெரிய விபத்தில் சிக்கியுள்ளார். அவரின் கழுத்து, தலை, முதுகு தண்டுவடம் ஆகிய பகுதிகளில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவதுபோல், புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராமில் அவர் பகிர்ந்துள்ளார். ஆனால், அலைச்சறுக்கு விளையாட்டில் இருந்து போது, ஹேடன் விபத்தில் சிக்கியுள்ளார். மிகப்பெரிய ஆபத்தில் இருந்து நான் தப்பித்தேன் என்று மட்டும் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஹேடன், குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்க குயின்ஸ்லாந்து நகரத்துக்குச் சென்றுள்ளார். அப்போது இந்த விபத்து நடந்திருக்கலாம் ...
Read More »விஜயகலா மகேஸ்வரனுக்கு பிணை! வெளிநாடு செல்லத் தடை!
குற்றத் தடுப்புப் பிரிவுப் காவல் துறையால் இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும் எனக் கருத்து வெளியிட்டிருந்த விஜயகலா மகேஸ்வரனை அது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக காவல் துறை திட்டமிட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார். அதன் பிரகாரம் தமது சட்டத்தரணிகளுடன் ...
Read More »கடும் மழையின் மத்தியிலும் மன்னாரில் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்கின்றது!
மன்னாரில் தொடர்சியாக மழை பெய்து வருகின்ற நிலையிலும் திட்ட மிட்ட வகையில் மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலைய வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் புதிய விற்பனை நிலையத்துக்கான கட்டுமான பணி இடம் பெற்ற போது குறித்த வளாக பகுதியில் அகழ்வு செய்யப்பட்ட மண்ணில் இருந்து மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தொடர்ந்து குறித்த வளாகப் பகுதியில் தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் ...
Read More »சிவபூமி சிங்கள பூமியாகுமா?
ஈழத்தில் உள்ள பஞ்ச ஈச்சரங்களையும் புனித பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது. மிகவும் காலம் தாழ்த்தி நிறைவேற்றப்பட்டபோதும், இந்த தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பஞ்ச ஈச்சரங்கள் மாத்திரமின்றி ஈழத்தின் வடக்கு கிழக்கில் உள்ள பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் பலவற்றையும் புனித பிரதேசங்களாக பாதுகாக்க வேண்டிய ஒரு நெருக்கடியான காலம் ஏற்பட்டுள்ளது. ஈழத் தமிழ் மக்களைப்போலவே, அவர்களின் கடவுகள்களும் இன அழிப்புக்கும் இடப்பெயர்வுக்கும் நில இழப்புக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். ஈழத்தின் சைவ ...
Read More »சீன தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்!
சீன தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார் என இண்டர்போல் தெரிவித்துள்ளது. பிரான்சை தலைமையிடமாக கொண்டு இண்டர்போல் எனப்படும் சர்வதேச குற்ற நடவடிக்கைகள் தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் சீன தலைவராக மெங் ஹாங்வே இருந்து வருகிறார். கடந்த செப்டம்பர் முதல் மெங்க் ஹாங்வேயை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாககாவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மெங் ஹாங்வே செப்டம்பர் 29-ம் திகதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது முதல் அவரை காணவில்லை என தகவல் ...
Read More »