நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலையில் அனைவரும் நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் தொடர்பில் பேசுகின்றார்களே தவிர, மக்களின் ஜனநாயகம் குறித்து எவரும் பேசவில்லை என அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் ஊடாக இதுவரை காலமும் தமிழ் மக்களின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டதில்லை. தற்போதைய அரசியல் குழப்பநிலையினால் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளாகிய அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், காணி உரிமை பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு போன்றவையே தமிழர்களின் உண்மையான பிரச்சினைகளாகும். இவற்றுக்கான ...
Read More »செய்திமுரசு
அவுஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து!
அவுஸ்திரேலியாவில் நோய்த்தாக்கம் ஒன்று எந்நேரமும் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. Thunderstorm ஆஸ்துமா எனப்படும் கொடிய ஆஸ்துமா நோய்த்தாக்கமே இவ்வாறு ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகரித்துவரும் வெப்பநிலையோடு காற்றில் மகரந்த துணிக்கைகளின் செறிவும் கூடும்போது குளிர்காற்றும் சேர்ந்துகொண்டால் இந்த நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. ஏற்கனவே பல சுகாதார அமைப்புக்கள் அங்கு வாழும் மக்களுக்கு அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது அவுஸ்திரேலியா முழுவதும் சீரற்ற காலநிலையும் காற்றும் அதிகரித்துவருகின்றது. இது thunderstorm ஆஸ்துமா தாக்குதலை மீண்டும் ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. காலநிலை மாற்றங்களினால் ஏற்படுகின்ற சுமார் இரண்டாயிரம் ...
Read More »ஐ.நா.சபையில் ஹமாஸ் போராளிகளை கண்டித்து தீர்மானம்!
இஸ்ரேல்-பாலஸ்தீனம் எல்லைப்பகுதியான காசாவில் ஆதிக்கம் செலுத்திவரும் ஹமாஸ் போராளிகளை கண்டித்து ஐ.நா.சபையில் கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா நடுநிலை வகித்தது. பாலஸ்தீன எல்லையோரம் உள்ள காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் நாட்டு ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. ஹமாஸ் போராளிகள் அவ்வப்போது இஸ்ரேல் பகுதிக்குள் ஏவுகணைகளை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவத்தினரை கொல்லும் முயற்சியில் ஈடுபட்டதாக ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் எல்லையில் கொல்லப்படுகின்றனர். இந்நிலையில், ஹமாஸ் உள்ளிட்ட போராளிகள் குழுக்களை ...
Read More »நாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைகள் 12 இல் ஆரம்பம்!
நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் சபையில் இடம்பெற்ற மோதல் மற்றும் குழப்பகர சம்பவங்கள் குறித்து விசாரிக்க சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான குழு தமது விசாரணை நகர்வுகளை எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 14,15,16 ஆம் திகதிகளில் சபையில் இடம்பெற்ற கலகலப்பு மற்றும் தாக்குதல்கள் சம்பவங்களில் நாசமாக்கப்பட்ட அரச உடைமைகள் மற்றும் சொத்துக்கள் சேத விபரம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை அன்றைய தினமே விசாரணை குழுவிடம் ...
Read More »தமிழர் பகுதிகளில் புத்தர் இருந்தாரா?
தமிழர்களின் பூர்வீக நிலப் பகுதிகளான வடக்கும் கிழக்கும், மிகவேகமாக பௌத்தமயப்பட்டு வருகின்றன. இலங்கையில் தீவிர அரசியல் கலப்புக்குள்ளாகிவிட்ட பௌத்த தத்துவமும் அதன் துறவிகளும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் தரப்பினரும், இதனை முன்னின்று செய்கின்றனர்; வழிநடத்துகின்றனர். இந்த நடவடிக்கைகள் குறித்து யார் கேள்வி எழுப்பினாலும், “இவ்விடங்களிலெல்லாம் முன்பொரு காலத்தில் பௌத்தம் இருந்தது. புத்தர் விஜயம் செய்தார்” என்கிற மாதிரியான வரலாற்றுக் “கதைகளை” அவிழ்த்துவிடுகின்றனர். இந்தக் கதையவிழ்ப்புகளின் அடிப்படையில்தான், வடக்கிலும் கிழக்கிலும், நாளாந்தம் பௌத்த விகாரைகள் முளைத்துக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு வடக்கையும் கிழக்கையும் பௌத்தமயப்படுத்துவதற்கு, பெரும்பான்மையினர் கொடுக்கும் விளக்கம் ...
Read More »பொட்டம்மான் தற்கொலை குண்டை வெடிக்கவைத்து இறந்துவிட்டாராம்! -சரத் பொன்சேகா சொல்கிறார்!
மே 19 ஆம் திகதி காலை நத்திக்கடலில் கிழக்க பகுதியில் பிரபாகரனின் மகன் சார்ள்ஸின் படையணியுடனேயே மோதல் இடம்பெற்றது அதன்போது வடக்கு கடற்கரைக்குசென்று ஐந்துபேருடன் பாய்ந்துசெல்வதற்கு பிரபாரகன் முயற்சித்தார். அங்கு பொட்டுஅம்மானும் இருந்துள்ளார். அவ்வேளையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் – பொட்டுஅம்மான் தற்கொலை குண்டை வெடிக்கவைத்து இறந்துவிட்டார் என போரின் இறுதிகட்டத்தில் இராணுவத்தளபதியாக செயற்பட்ட பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேக்கா தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்று (06) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ” பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக கருணா ...
Read More »முன்னாள் போராளிகள் மீண்டும் ஒரு அச்ச நிலையில்!- சிவமோகன்
முன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாகவே பார்க்கின்றேன்.வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இன்று வவுனியாவில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் பிரத்தியேக காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பில் முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலமை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாகவே பார்க்கின்றேன். இதைத்தான் நான் கூறியிருக்கின்றேன் சர்வதேசத்திலிருந்து எங்களது போராட்ட தமிழர்களின் விடுதலை நோக்கிய ...
Read More »மெல்போர்னில் உதயமான 2வது சர்வதேச விமான நிலையம்!
மெல்போர்னின் இரண்டாவது விமானநிலையமான Avalon, நேற்று (05) உத்தியோகப்பூர்வமாக தனது சர்வதேச விமானசேவையை ஆரம்பித்தது. Avalon விமான நிலையத்தில் இன்று காலை 8.20 மணியளவில் முதலாவது சர்வதேச விமானம் பயணிகளுடன் வந்திறங்கியமை குறிப்பிடத்தக்கது. மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட AirAsia X Flight D7218 என்ற விமானம் Avalon விமானநிலையத்தில் வந்திறங்கிய முதலாவது சர்வதேச விமானம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இன்று (புதன்கிழமை) முதல் சர்வதேச விமான நிலையமாக இயங்கவுள்ள Avalon விமான நிலையமூடாக முதலாண்டில் 50 ஆயிரம் பயணிகள் தமது பயணங்களை மேற்கொள்வார்கள் எனக் ...
Read More »அந்தமானில் அமெரிக்கர் கொலைக்கு காரணம் என்ன?
ஜான் ஆலன், திட்டமிடப்பட்ட சாகச பயணமாக அங்கு சென்றிருந்தது, பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தேசிய பழங்குடியினர் ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் கூறியுள்ளார். அந்தமானில் சென்டினல் பழங்குடியினரால் ஜான் ஆலன் என்ற அமெரிக்க வாலிபர் சமீபத்தில் கொல்லப்பட்டார். அவர் மத பிரசாரம் செய்ய சென்றபோது கொல்லப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில், ஜான் ஆலன், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சாகச பயணமாக அங்கு சென்றிருந்தது, பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தேசிய பழங்குடியினர் ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் கூறியுள்ளார். இருப்பினும், தொடர்ந்து விசாரணை ...
Read More »பொன்சேகா,பூஜித் ஆகியோர் பிரதான சூத்திரதாரிகள்!
சிறிலங்கா ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சதித்திட்டத்தின் பின்னாள் ரணில் விக்ரமசிங்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய பிரதான சூத்திரதாரிகள் இருக்கின்றனர்” என நாமல் குமார தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்படுத்தி மேற்கண்டவாறு நாமல் குமார தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட நாமல் குமார, “இவ் வருடம் கடந்த ஒகஸ்ட் மாதம் 16ஆம் திகதி மட்டில் நான் பொலிஸ் மா அதிபரை சந்திக்க சென்றிருந்தேன். அப்போது ...
Read More »