செய்திமுரசு

கோத்தாபய இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பில் மர்மம் நிறைந்துள்ளது!

முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பிரதேசத்தில் அமைந்துள்ள கோத்தாபய இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பில் மர்மம் நிறைந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவிக்கையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 4ஆம் நாள் வட்டுவாகல் மற்றும் வெள்ளான் முள்ளிவாய்க்கால் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய 271.62 ஏக்கர் நிலப்பரப்பு காணி எடுத்தல் சட்டத்தின்கீழ், அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலகவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இந்த நிலப்பரப்பானது, ஒரு பகிரங்கத் தேவைக்காக காணி எடுத்தல் ...

Read More »

8 வீரர்களை அவுட் ஆக்கிய விக்கெட் கீப்பர்.அவுஸ்ரேலிய வீரர் சாதனை

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தோல்விகளையே சந்தித்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர் உள்ளூரில் நடந்த போட்டி ஒன்றில் உலக சாதனை செய்துள்ளார். அவர் ஒரே போட்டியில் எட்டு விக்கெட்டுக்களை ஸ்டெப்பிங் மற்றும் கேட்ச் மூலம்  அவுட் ஆக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற நியூ சவுத் வேல்ஸ் – ஆஸ்திரேலியா லெவன் அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் குவித்தது. 333 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ...

Read More »

புதிய விதிமுறையை பயன்படுத்தாத அவுஸ்ரேலியா

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஐ.சி.சி.யின் புதிய விதிமுறையை பயன்படுத்தாமல்அவுஸ்ரேலிய அணி சரிவை சந்தித்தது தெரியவந்துள்ளது. இந்தியா – அவுஸ்ரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நேற்று ராஞ்சியில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த அவுஸ்ரேலியா 18.4 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால் அவுஸ்ரேலியாவின் இன்னிங்ஸ் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது. அதன்பின் இந்தியாவிற்கு 6 ஓவரில் 48 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா 1 விக்கெட்டை மட்டுமே இழந்து ...

Read More »

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு தபால் தலைகள் அவுஸ்ரேலியாவில் வெளியீடு!

தீபாவளியை முன்னிட்டு Australia Post நிறுவனம் சிறப்பு முத்திரைகள் (தபால் தலைகளை) வெளியிடுகின்றது. பல்வேறுபட்ட கலாச்சாரப் பின்னணி கொண்ட மக்கள் அவுஸ்திரேலியாவில் வாழுகின்றனர். இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை அடையாளப்படுத்தும் முத்திரைகளை வெளியிடுவதில் தாம் பெருமையடைவதாக Australia Post-இன் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஒரு டொலர் Red heart முத்திரையுடன், கைகளில் தீபமேந்தியவாறு காணப்படும் சிறப்பு முத்திரைகள் வெளியிடப்படவுள்ளது. குறித்த தபால் தலைகள் எதிர்வரும் ஒக்டோபர் 17ம் திகதி முதல் வெளியாகுமென கூறப்பட்டுள்ளது. இப்புதிய முத்திரைகளை இணையம் மற்றும் தபால் ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட சில தபால் ...

Read More »

சட்டவிரோதமாக வைத்திருந்த 51 ஆயிரம் துப்பாக்கிகள் ஒப்படைப்பு!

அவுஸ்ரேலியாவில் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தானாக முன்வந்து அவற்றை ஒப்படைத்தால் தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கப்படும் என அவுஸ்திரேலியப் பிரதமர் Malcolm Turnbull தெரிவித்தார். அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வாறான அறிவுப்பு வெளியானது. இந்த அறிவிப்பினை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே அவுஸ்திரேலியப் பிரதமர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கான காலக்கெடு நேற்று (வெள்ளிக்கிழமை) முடிவடைந்துள்ளது. இந் நிலையில், இதுவரை சட்டவிரோதமாக வைத்திருந்த 51 ஆயிரம் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் Malcolm Turnbull தெரிவித்துள்ளார்.

Read More »

அவுஸ்ரேலியாவில் அதானி நிறுவனத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

அவுஸ்ரேலியாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அதானியின் நிறுவனமானதுஅவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்நாட்டிலேயே மிகப்பெரிய சுரங்கமாக அமைய உள்ள இந்த சுரங்கத்திற்கு அவுஸ்ரேலியா அரசு கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் வழங்கியது. அதானியின் நிலக்கரி சுரங்கக் கட்டுமானத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட போதே வடக்கு ஆஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நிலக்கரி சுரங்கத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என்று குற்றம் ...

Read More »

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா-அவுஸ்ரேலியா இன்று மோதல்

இந்தியா-அவுஸ்ரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. இந்தியா-அவுஸ்ரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலிய  கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-அவுஸ்ரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ...

Read More »

அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் நோக்கில் இருந்த 28 இலங்கையர் நாடு கடத்தப்பட்டனர்!

சட்டவிரோதமான முறையில், அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் நோக்கில், இந்தோனேசியாவில் தங்கியிருந்தபோது கைதுசெய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் 28பேரும் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.  

Read More »

அவுஸ்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹாஸ்டிங்ஸ் ஓய்வு!

அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜான் ஹாஸ்டிங்ஸ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 31 வயதாகும் ஹாஸ்டிங்ஸ் 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவுஸ்ரேலியாவின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். அதேமாதம் டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். 2012-ம் ஆண்டு பெர்த்தில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான ஹாஸ்டிங்ஸ்க்கு அதுதான் முதலும் கடைசியுமான டெஸ்ட் ஆகும். தற்போது டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டும் கவனம் செலுத்துவதற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய ஒருநாள் ...

Read More »

அவுஸ்ரேலிய சாரதிகள் கவனத்திற்கு!

அவுஸ்ரேலியாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய ஆலோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சிட்னி, மெல்பேர்ன் வாகன சாரதிகளிடம் Traffic congestion charge எனப்படும் கட்டணத்தை வசூலிப்பதன் மூலம், போக்குவரத்து நெரிசலைக் கட்டுக்குள் கொண்டுவரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளைப்போல, போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும் நேரத்தில் (Peak hours), இதற்குரிய சிறிய கட்டணத்தை வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சிறப்பாக இருக்குமென Grattan Institute என்ற அமைப்பு கூறியுள்ளது.

Read More »