ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தனித்தனியாகச் சந்தித்துள்ளார். அத்துடன் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டள்ள மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளார். புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகிய பிரதான இரு விடயங்களை முன்னிலைப்படுத்தி கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன. மேலும் கூட்டமைப்பு நபர்களை முன்லைப்படுத்தவில்லை என்பதோடு அரசியலமைப்பு மீறப்படாது பாராளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இறுக்கமான நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும் மூன்று தரப்பினர்களுடனும் சம்பந்தன் கருத்துக்களை ...
Read More »செய்திமுரசு
என்னை கொல்வதற்கான சதி முயற்சியில் சரத்பொன்சேகா!-மைத்திரி
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கான சதிமுயற்சி காரணமாகவே மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் பொது எதிரணியினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். என்னை கொல்வதற்கான சதி முயற்சிகள் காரணமாகவே நான் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க தீர்மானித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். என்னை கொல்வதற்கான சதி முயற்சிகள் குறித்த விசாரணைகளின் போது முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகாவிற்கு தொடர்புள்ளமை குறித்த விபரங்கள் வெளியாகியிருந்தன எனினும் அரசியல் தலையீடுகள் ...
Read More »பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலருக்கு ஐநா விருது!
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மறைந்த மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜஹாங்கீருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் விருது வழங்கப்பட உள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மனித உரிமை ஆர்வலராக செயல்பட்டவர் அஸ்மா ஜஹாங்கீர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இந்த ஆண்டுக்கான விருதுக்கு பாகிஸ்தானின் மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜஹாங்கீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை தவிர, இந்த விருதுக்கு மேலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தான்சானியா நாட்டை சேர்ந்த ...
Read More »‘படுமோசமான அரசியல் கலாசாரத்திற்குள் நாடு வீழ்ந்துவிட்டது’!
இலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்தபோது தேசிய இனப்பிரச்சனை உட்பட நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற முக்கியமான பிரச்சனைகளுக்கு கருத்தொருமிப்பின் அடிப்படையில் இணக்கபூர்வமான தீர்வுகளைக் காண்பதற்கான அரிதான வாய்ப்பு இது என மக்கள் நம்பினார்கள். அரசாங்கத்தின் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனநாயகத்தை மீட்டெடுத்து புதியதொரு அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிக்கப்போவதாகவும் உறுதியளித்தார்கள். ஆனால், இன்று நாட்டில் தோன்றியிருக்கும் அரசியல் நெருக்கடி முன்னெப்போதையும்விட ...
Read More »அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அகதிகளுக்கு அங்கு கடின வாழ்வு
நவுறு மற்றும் மனுஸ் தடுப்பில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அகதிகள் அங்கு கடின வாழ்வை எதிர்நோக்கியிருப்பதாக அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் கூறியுள்ளார். வேலையை தேடுவது போன்ற அத்தியாவசிய செயற்பாடுகளில் பெரும் சவால்களுக்கு முகம் கொடுப்பதாக நவுறுவிலுள்ள தமது நண்பர்களுக்கு கூறியதாக என்று பீட்டர் டட்டன் மேலும் கூறியுள்ளார். நவுறு தீவிலிருந்து மூன்றாவது நாடொன்றுக்கு சென்று அங்கு குடிமயர்வதற்கு சம்மதித்த நூற்றுக்கணக்கானவர்கள் இதுவரை பல தொகுதிகளாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு படகு ...
Read More »இலங்கையில் அரசியலமைப்பு பின்பற்றப்பட வேண்டும்! – அமெரிக்கா வலியுறுத்தல்
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழல் குறித்து பேசியுள்ள அமெரிக்கா, இலங்கையின் அனைத்து கட்சிகளும், அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் அதிபரான சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அதேவேளை முன்னாள் அதிபர் ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, இலங்கை அரசின் அரசியல் அமைப்பு சட்டத்தில் அதிபர் பிரதமரை பதவிநீக்கம் செய்வதற்கு அதிகாரம் இல்லை என்றும், ராஜபக்சேவை பிரதமராக ...
Read More »ஒரு நாடு; இரண்டு பிரதமர்கள்!
சிறிலங்காவின் பிரதமராக, மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதோடு, நாட்டின் பிரதமராக தானே தொடர்ந்து உள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், அரசியல் பிரச்சினைகள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசமைப்புத் தொடர்பான சிக்கல்கள் எழவுள்ள நிலையில், டுவிட்டர் இணையத்தளத்திலும், இது தொடர்பில் குழப்பம் காணப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ இருவரும், தங்களது டுவிட்டர் கணக்கில், தாங்களே பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
Read More »பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியுள்ளேன்!-மைத்திரி
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். தமக்கு இருக்கும் அதிகாரத்தினை அடிப்படையாகக் கொண்டே பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவித்தால் கடிதத்தை பிரதமர் ரணிலுக்கு அனுப்பிவைத்துள்ளார். நேற்று(26) இரவு பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதையடுத்து ஜனாதிபதி மேற்படி அறிவித்தலை பிரதமர் ரணிலுக்கு அறிவித்துள்ளார்.
Read More »தமிழ் மக்களுக்கும் வீரர் ஒருவர் அவசரமாக தேவைப்படுகின்றார்!
வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் ஏற்கெனவே முடிவுக்கு வந்து, கொழும்பு, மத்திய அரசாங்கத்தின் நேரடிப் பிரதிநிதியான ஆளுநரின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. நாளை தொடக்கம், வடக்கு மாகாணத்திலும் இதே நிலைமை ஆரம்பிக்க உள்ளது. ஆக, அடுத்த வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் வரை, இரண்டு மாகாணங்களும் அந்தந்த மாகாணங்களின் ஆளுநர்களின் ஆளுகைக்குள் அடங்கப் போகின்றன. தமிழர்களது பார்வையில், மாகாண சபை ஆட்சி முறையிலான நடைமுறை பல குறைபாடுகளைத் தன்னகத்தில் கொண்டுள்ளது. இந்த ஆட்சி ...
Read More »விபத்தில் சிக்கிய இலங்கையர்கள்! நடந்த விபரீதம் என்ன?
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் அது தொடர்பான மேலதிக தகவல்களை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் Canberra பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இலங்கை உணவு சமைக்க முயற்சித்த 4 சமையல் கலைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிகழ்வு ஒன்றிற்காக சமைக்க ஆயத்தமாகிய போது ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு காரணமாக சமையல் கலைஞர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 4 பேரும் Canberra வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு 11 மணியளவில் ...
Read More »