16 வயது சிறுமிக்கு எச்.ஐ.வி நோய்த்தொற்றினை பரப்பிய நபர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் பாலியல் உறவின் மூலம் எச்.ஐ.வி நோய்த்தொற்றினை குறித்த நபர் பரப்பியுள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த 37 வயதான நூர் பஞ்ச்ஷிரி என்பவரே இந்த காரியத்தை செய்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் 16 வயதுடைய சிறுமி மற்றும் அவருடைய 14 வயது தோழியுடன் விளையாடி கொண்டிருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த 16 வயது சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் உறவு வைத்துள்ளார். ...
Read More »செய்திமுரசு
திருகோணமலையில் உயிரிழந்த அவுஸ்திரேலியர்!
திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புராமலை தீவு பகுதியில் அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த வயோதிபரொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியா – சிட்னி நகரைச் சேர்ந்த ஜோன் ஹோல்டர் (70 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த அவுஸ்திரேலியர் குச்சவெளி பகுதியில் ஹோட்டலில் தங்கியிருந்தவேளை புராமலை தீவு பகுதிக்கு குளிக்கச் சென்றுள்ளதாகவும் அதே நேரத்தில் நெஞ்சில் வலி ஏற்பட்டுள்ளதாகவும் அதனையடுத்து நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதனையடுத்து நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி ...
Read More »நியூசிலாந்து தாக்குதலில் உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர் திருமணம்!
நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களின்போது, உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்களுள் ஒருவருக்கு கடந்த வியாழன் அன்று திருமணம் நடந்தது. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த 15-ம் தேதி தொழுகை நடைபெற்றபோது, பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 50 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடந்தபோது, அந்த மசூதிக்கு வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் சென்றனர். உள்ளே துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், கிரிக்கெட் வீரர்களை அதிகாரிகள் அவசரமாக வெளியே அழைத்து வந்தனர். வேகவேகமாக அருகில் இருந்த ...
Read More »கார்பன் பரிசோதனை அறிக்கையை விட மேலதிகமான ஆய்வுகளையும் செய்ய முடியும்!-சாலிய பீரிஸ்
மன்னார் மனித புதை குழி தொடர்பாக தற்போதைய கார்பன் பரிசோதனை அறிக்கையினை மட்டும் வைத்துக்கொண்டு கால வரையரையினை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை இல்லை.மேலதிகமான ஆய்வுகளையும் செய்ய முடியும் என காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார். மன்னார் மனித புதை குழி தொடர்பாகவும்,கார்பன் பரிசோதனை அறிக்கை தொடர்பாகவும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளை இன்று வெள்ளிக்கிழமை (22) மாலை 2 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் சந்தித்த பின் ...
Read More »அவுஸ்திரேலியாவில் கரையொதுங்கிய அபூர்வ விலங்கினம்!
பெருங்கடல் சூரியமீன் ஒன்று தென் அவுஸ்திரேலியக் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. அந்த மீனின் படங்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. கரையொதுங்கிய மீன் முதலில் மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அது ocean sunfish வகையைச் சேர்ந்தது என்று நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளனர். 1.8 மீட்டர் நீளமுள்ள அந்த மீன், அடிலேய்ட் நகருக்கு 80 கிலோமீட்டர் தெற்கே உள்ள கூரொங் (Coorong) தேசியப் பூங்காவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதலில் மீனை மிதக்கும் மரத்துண்டு என்று நினைத்ததாகக் கூறினார் அதனைக் கண்டுபிடித்தவரின் துணைவி லினெட் கிரஸிலாக். தமது துணைவர் ஸ்டீவன் ...
Read More »கூட்டமைப்பு தலைமைகள் இரட்டை வேடம்! -சிவசக்தி ஆனந்தன்
தமிழ் மக்களால் அண்மைய நாட்களில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் தமிழரசு கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்கின்றமை அவர்களின் இரட்டை முகத்தையே வெளிப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்றையதினம் அவரது அலுவலகத்தில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மனித உரிமை பேரவையில் 30:1 தீர்மானம் முன்வைக்கபட்ட போது அது சர்வதேச விசாரணையா? உள்நாட்டு விசாரணையா? என்று சொற்களில் தொங்கி கொண்டிருக்காமல் அதன் உள்ளடக்கத்தையே பார்க்க வேண்டும் என்று சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார். தற்போது புதுக்கதை ஒன்றை ...
Read More »குழந்தை நட்சத்திரங்கள் சித்ரவதை- வளர்ப்பு தாய் கைது!
அமெரிக்காவில் யூடியூப் சேனலில் சரியாக நடிக்க வேண்டும் என்பதற்காக தத்தெடுத்த குழந்தைகளை சித்ரவதை செய்த வளர்ப்பு தாய் கைது செய்யப்பட்டுள்ளார். உலகளவில் தற்போது இருக்கும் இணையதள வசதிகள் கொண்டு, யார் வேண்டுமென்றாலும் பிரபலம் ஆகலாம் என்றாகிவிட்டது. யூடியூப் எனும் இணையதளம் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஸ்மார்ட்போன் மூலம் பல முறைகளில் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பிரபலங்களாக மாற்றி வருகின்றனர். அவ்வகையில் உருவாக்கப்பட்டது தான் ‘ஃபெண்டாஸ்டிக் அட்வெஞ்சர்ஸ்’ எனும் யூடியூப் சேனல். இதனை மச்செல் ஹாக்னி(48) எனும் பெண் உருவாக்கியுள்ளார். ...
Read More »வடமாகாணமும் கல்வி நெருக்கடியும்!
வடமாகாணத்தின் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பதாக, வடமாகாண ஆளுநர் அண்மையில் தெரிவித்திருந்தார். இது, பலவிதமான எதிர்வினைகளைத் தோற்றுவித்திருக்கிறது. ஒருபுறம் இதை வரவேற்று, வடமாகாணத்தின் கல்வி அபிவிருத்திக்கு இது அவசியமானது என்ற கருத்துகளும் மறுபுறம் மாகாண அரசின் அதிகாரத்தின் கீழ்வரும் கல்வித்துறையை, மத்திய அரசின் கீழே கொண்டு வருகின்ற இந்நடவடிக்கையானது அதிகாரப் பரவலாக்கலுக்கு எதிரான இனவாதத் திட்டம் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது. இவ்விடத்தில், ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய சில விடயங்கள் உள்ளன. முதலாவது, வடமாகாணம் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாகாணமாக உள்ளது. க.பொ.த ...
Read More »சிறிலங்காவை விட்டு புறப்பட்ட அவுஸ்ரேலிய கடற்படை கப்பல்கள் !
அவுஸ்ரேலிய கடற்படையின் டயமன்டீனா மற்றும் லீவுன் போர் கப்பல்கள் நேற்று நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது. நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, மட்டக்களப்புக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மூழ்கிய கப்பல் தொடர்பான ஆரம்பகட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கடந்த 11 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த இக் கப்பல்கள் பிரகு கடந்த 17 ஆம் திகதி நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இக் கப்பல் இலங்கையில் இருந்த ...
Read More »11 இளைஞர்களும்; கரன்னாகொடவும்!
சட்டத்தை மதிக்கும் சமூகத்தைக் கொண்டே, ஒரு நாட்டின் நாகரிகம் மதிப்பிடப்படுகிறது. நாட்டிலுள்ள அனைவரும், சட்டத்துக்கு உட்பட்டவர்களே தவிர, அதற்கு அப்பாற்பட்டவர்களென எவரும் இல்லை. சட்டம், அனைவருக்கும் பொதுவாக இருக்கும் வரையிலும் நடைமுறைப்படுத்தப்படும் வரையிலும், நாடு தொடர்ந்தும் முன்னேறிக்கொண்டே இருக்கும். இருப்பினும், எமது நாட்டைப் பொறுத்தவரையில், ஆங்காங்கே காட்டுச் சட்டங்களே அதிகாரம் செய்கின்றன. இதனால் தான், யுத்தம், பாதால உலகக் கோஷ்டியினரின் நடவடிக்கைகள், போதைப்பொருள் வியாபாரங்கள் எனப் பல பிரச்சினைகளை, இலங்கை சந்தித்தது, இன்னும் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. இதனால், மனித உயிர்களுக்கு மதிப்பின்றிப் போயுள்ளது. இது, ...
Read More »