உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன் எனப்படும் மு.மனோகர் இன்று திலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை நடத்தினால் நாளை ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிரிச்சான் துயிலும் இல்லங்களை அந்தந்தப் பிரதேச சபைகள் பொறுப்பெடுப்பதை தவிர்க்க முடியாமல் போகும். இந்த இரு சபைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழுள்ளன என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 15 ஆம் நாள் நடைபெற்ற நிகழ்வுகள் வேதனையளிக்கின்றன. ...
Read More »செய்திமுரசு
மறுக்கப்படும் உரிமைகள் – பி.மாணிக்கவாசகம்
மொழியுரிமையும், காணி உரிமையும் மறுக்கப்படுவது, இனப்பிரச்சினையின் அடிநாதமாகத் திகழ்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்கள் ஆளும் தரப்பினரால் அடக்கி ஒடுக்கப்பட்டதன் விளைவாகவே இனப்பிரச்சினை உருவாகியது. உரிமைகள் மறுக்கப்படுவதைத் தட்டிக் கேட்டும் பலன் கிடைக்காத காரணத்தினாலேயே போராட்டங்கள் தலையெடுத்தன. உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்கள் பல்வேறு வழிகளில் திசைதிருப்பப்பட்டு, அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன. அதிகார வலுவுடன் கூடிய சட்;ட ரீதியான அடக்குமுறைகள் ஒருபக்கமாகவும், குழுக்களின் ஊடாக வன்முறைகளைப் பயன்படுத்தி மறைமுகமான அச்சுறுத்தல்களுடன் கூடிய அடக்குமுறைகள் மற்றுமொரு பக்கமாகவும் காலம் காலமாக தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்கு ...
Read More »தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் மீது தாக்குதல்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி மீசாலை மேற்கிலுள்ள இந்த அலுவலகத்தின் மீது நேற்றிரவு 11 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- நேற்று இரவு 11 மணியளவில் மேற்படி கட்சியின் அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவொன்று கட்சியின் பெயர் பலகையை அடித்து சேதப்படுத்தியுள்ளது. இதன்போது கட்சியின் வயதான உறுப்பினர் ஒருவர் அந்த அலுவலகத்திற்குள் இருந்துள்ளார். ஆனாலும் பலர் புகுந்து சத்தத்துடன் அடித்து சேதப்படுத்தியமையால் ...
Read More »படையினரின் பாலியல் சித்திரவதைகள் தொடர்கின்றன!-சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அறிக்கை
இலங்கையில் தமிழர்கள் அரச படையினரால் பாலியல் ரீதியிலான சித்திரவதைகளிற்கு உள்ளாவது தொடர்கின்றது என மனித உரிமை ஆர்வலர் யஸ்மின் சூக்காவின் அமைப்பான சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் தனது புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஜெனீவாவில் இடம்பெற்றும்வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் ஐடிஜேபீ அமைப்பு இந்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த நான்கு வருடகாலமாக குறிப்பிட்ட அமைப்பினால் சேகரிக்கப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து ஐடிஜேபீ அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட அமைப்பு யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் தமிழ் மக்கள் படையினரால் ...
Read More »மோடிக்கு இம்ரான் கான் கடிதம்!
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என இந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதி உள்ளார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் பேச்சுவார்த்தைகள் முடங்கியது. இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், ...
Read More »ஸ்ரோபெரி பழத்தில் ஊசியை மறைத்து வைப்பவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
ஸ்ரோபெரி பழத்தில் மெல்லிய ஊசியை மறைத்து வைப்பது தீவிரவாதச் செயல் எனவும் இந்தச் செயலைச் செய்பவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வகை செய்யப்படும் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் (Scott Morrison) எச்சரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவில் விற்பனையாகும் ஸ்ரோபெரி பழங்களில் மெல்லிய ஊசியை நுழைத்து விற்கப்படுவதாகவும் இவற்றினை வாங்கி உண்ட சிலருக்கு தொண்டையிலும், வயிற்றிலும் ஊசி சிக்கி பெரும் விமைங்கள் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, ஸ்ரோபெரி பழம் சாப்பிடும்போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை ...
Read More »அவுஸ்திரேலியாவில் கைதான இளைஞனுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை இளைஞருக்கு ஆதரவாக கொழும்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் தொடர்பில் விரைவான நீதி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. சிட்னியில் பயங்கரவாதக் குற்றச்சாட்டில் இலங்கை பிரஜையான மொஹமட் நிசாம்டீன் என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான திட்ட ஆவணங்கள் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. குறித்த நபருக்கும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என சிட்னி புலனாய்வு ...
Read More »விக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல்!
தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய கட்டம், ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ என்கிற அளவில் சுருங்கி நிற்கிறது. அவர்களின் நாளாந்த நடவடிக்கைகள், உரைகள், அறிக்கைகள் சார்ந்துதான் அரசியல் இயக்கமும், ஊடக இயக்கமும் நிகழ்ந்து வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்கால நம்பிக்கைகளாக, ஆக்கபூர்வமான சக்திகளாகத் தம்மைக் கருதும் தரப்புகளும் கூட, இருவரில் ஒருவரின் துணைக்குழுவாக மாத்திரமே தற்போது இயங்கி வருகின்றன. சுய அடையாளத்தோடு எழுந்து வருவது சார்ந்தோ, நம்பிக்கைகளை ஏற்படுத்துவது சார்ந்தோ, எந்தவொரு தரப்பும் கடந்த பத்து வருடங்களில் வெற்றி பெற்றிருக்கவில்லை. இந்த நிலையில் நின்றுகொண்டுதான், ...
Read More »சாவகச்சேரி நிதி நிறுவனம் ஒன்றில் கொள்ளை!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பெருமளவு பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த தனியார் நிதி நிறுவனத்தில் இன்று(19) காலை 8.30 மணிக்கு சுமார் 18 லட்சத்து 91 ஆயிரத்து 21 ரூபா பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று காலை வழமைபோல நிதி நிறுவனத்தை திறந்த பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துள்ளனர். இதன்போது வாளோடு உள்நுழைந்த கொள்ளையர் அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளார். உடனடியாக சாவகச்சேரி காவல் துறைக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ...
Read More »ரவீந்திர விஜேகுணரட்ன சிறிலங்கா திரும்பியுள்ளார்!
சி.ஜ.டி விசாரணையை எதிர்கொண்டிருந்த வேளையில் மெக்சிக்கோவிற்கு கடந்த வாரம் சென்றதன் மூலம் சர்ச்சைகளை ஏற்படுத்திய முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரட்ன சிறிலங்கா திரும்பியுள்ளார். கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் முக்கிய குற்றவாளி என கருதப்படும் நபரிற்கு அடைக்கலம் கொடுத்தார் என முப்படைகளின் பிரதானி சி.ஐ.டி.யினரால் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரிடமிருந்து வாக்குமூலமொன்றை பெறுவதற்காக அவரிற்கு சி.ஐ.டி.யினர் அழைப்பு விடுத்திருந்த வேளை அவர் மெக்சிக்கோ சென்றமை பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலும் முப்படைகளின் பிரதானியை கைதுசெய்வது தொடர்பாக அரசாங்கத்திற்குள் இரு வேறு கருத்துக்கள் நிலவுவதும் ...
Read More »