நாட்டில் வன்முறைகளும், காடைத்தனங்களும், அடாவடியான செயற்பாடுகளும் அதிகரித்திருப்பதாகப் பலரும் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, சாதாரண மக்களுடைய நாளாந்த பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதே, இதற்குக் காரணம். சாதாரண குடிமக்கள் மட்டுமல்லாமல், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொலிசாரின் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றதே என்ற ஒரு குரலும் எழுந்திருக்கின்றது. நல்லாட்சி புரிகின்ற அரசாங்கத்தின் கீழ் இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்கின்றதா என்ற ஏக்கம் கலந்த கேள்வி வியப்போடு வினவப்படுகின்றது. சட்டம் ஒழுங்கு சீராக நடைமுறைப்படுத்தப்படுவதே உண்மையில் நல்லாட்சி அரசாங்கத்திற்குரிய இலட்சணமாகும். அந்த வகையில் தற்போதுள்ள நிலைமையை ...
Read More »செய்திமுரசு
மக்களுக்காக அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்ததில் நான் பெருமை கொள்கின்றேன்!-விஜயகலா
அமைச்சர் விஜயகலா தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபாலா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருக்கு நேற்று(5) அனுப்பி வைத்தார். இதுகுறித்து விஜயகலா தனது முகநூல் பக்கத்தில் மக்களின் துன்பங்களை பொறுத்துக்கொள்ள முடியாமையினாலேயே குரல் கொடுத்தேன் மக்களுக்காகவே பதவி துறந்தேன். வடக்கில் மக்களின் துன்பங்களை துயரங்களை வெளிக்கொணரும் வகையிலேயே நான் கருத்துத் தெரிவித்திருந்தேன். அத்தகைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியும் மக்களுக்காகவும் எனது அமைச்சுப் பதவிலியிருந்து இராஜினாமாச் செய்துள்ளேன். வடக்கில் குறிப்பாக யாழ்.குடாநாட்டில் வன்முறைகளும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன. ஆறு வயதுச் சிறுமி ...
Read More »அமைச்சுப் பதவியிலிருந்து விலக விஜயகலா தீர்மானம்!
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சுப்பதவியில் இருந்து தற்காலிகமாக விலகத் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தான் தனது தவறை உணர்வதாகவும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரீதியில் தமது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் நான் எனது தவறை ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஏனெனில் நான் பெற்றுக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்கு அமைய நான் தெரிவித்த கருத்து முரணானது விடுதலைப்புலிகள் அமைப்பு தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. எனக்கு கட்சித் தலைவரோ அல்லது அரசாங்கமோ அறிவிக்க முன்னர் இது குறித்து ...
Read More »நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்தி: ரணில் நாடாளுமன்றத்தில் விசேட உரை !
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இவ்வுரையில், நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி அறிக்கை பற்றியும், ஹம்பாந்தோட்டை திட்டம் பற்றியும் விசேட கூற்றொன்றை வெளியிட்டு உரையாற்றவுள்ளமை குறிப்பிடதக்கது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தி தொடர்பாகவே மேற்படி உரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இவ்வுரையில், நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி அறிக்கை பற்றியும், ஹம்பாந்தோட்டை திட்டம் பற்றியும் விசேட கூற்றொன்றை வெளியிட்டு ...
Read More »சீனாவில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளவரை விடுவிக்க ஐ.நா. வலியுறுத்தல்!
நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலரின் மனைவியை வீட்டுச் சிறையில் இருந்து உடனடியாக விடுதலை செய்யுமாறு சீன அரசை ஐ.நா. மனித உரிமை முகமை வலியுறுத்தியுள்ளது. சீனாவில் ஜனநாயகம் தொடர்பான ‘சார்ட்டெர் 8’ என்ற நூலை கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியிட்ட காரணத்துக்காக அந்நாட்டின் பிரபல எழுத்தாளரான லியு சியாபோ (61), என்பவருக்கு சீன அரசு 11 வருட சிறைத் தண்டனை விதித்தது. கடந்த 2010-ம் ஆண்டு அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனால் சீனாவுக்கும் நோபல் பரிசை அளித்துவரும் நார்வே நாட்டுக்கும் ...
Read More »அவுஸ்திரேலியாவில் புதிய சலுகை வழங்கும் திட்டம்!
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், Energy Compare இணையத்தளத்துக்கு செல்பவர்களுக்கு, ஐம்பது டொலர்களை வழங்கும் திட்டம் இந்த மாதம் முதல் ஆரம்பமாகிறது. வீட்டு மின்சாரம் மற்றும் எரிவாயு பயன்பாடுகளை இணையத்தளத்தின் (https://compare.switchon.vic.gov.au) ஊடாக ஒப்பீடு செய்துகொள்ளும் முறையை பயனாளர்களிடம் அறிமுகப்படுத்துவதில் அரசு நாட்டம் காட்டுகிறது. இதனை ஊக்குவிக்கும் முகமாகவே விக்டோரிய அரசாங்கம் Energy Compare இணையத்தளத்துக்கு செல்பவர்களுக்கு 50 டொலர்களை வழங்கவுள்ளது. ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையில் Energy Compare இணையத்தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு 50 டொலர் சன்மானம் வழங்கப்படுகிறது. இதேவேளை இந்த புதிய இனாம் ...
Read More »நல்ல மாற்றத்தை ஏற்படுத்த யாரால் முடியும்?
ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்குவது சாதாரண காரியமல்ல. இதில் முக்கியமானது, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது. `நம் ஒவ்வொருவராலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’ – நம்பிக்கையோடு சொல்லியிருக்கிறார் அமெரிக்க அரசியல்வாதியும் மேரிலேண்டின் செனட்டராகவும் பணியாற்றிய பார்பரா மிகுல்ஸ்கி (Barbara Mikulski). வீடு, அலுவலகம், சமூகம்… எதுவாகவும் இருக்கட்டும்… ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்குவது சாதாரண காரியமல்ல. இதில் முக்கியமானது, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது. அதற்கு முதலில், `நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை வேண்டும்; விடா முயற்சி வேண்டும்; எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் வேண்டும். இதற்கெல்லாம் ...
Read More »கோத்தபாயா அடுத்த சனாதிபதியா?
இலங்கையில் அடுத்த சனாதிபதி தேர்தல் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால் தேர்தல் களத்தில் இறங்க இப்போதே ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. இதில் மூன்று பேர்களது பெயர்கள் அடிபடுகின்றன. இப்போதுள்ள சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மீண்டும் போட்டியிடுவார் என்று அவரது கட்சியில் உள்ள அமைச்சர்கள் சொல்கிறார்கள். அதே போல் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் சிலர் பிரதமர் இரணில் விக்கிரமசிங்காதான் தங்கள் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் என உறுதிபடக் கூறுகிறார்கள். இந்த இருவரைத் தவிர மூன்றாவதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் முன்னாள் சனாதிபதி மகிந்த ...
Read More »மகிந்தவுக்கு நியுயோர்க் டைம்ஸ் நாளிதழ் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!
தம்மால் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏதேனும் சிக்கல் இருப்பின் தமது நாளிதழின் சிரேஷ்ட ஆசிரியர்களை தொடர்புகொள்ளுமாறு நியுயோர்க் டைம்ஸ் நாளிதழ் அறிவித்துள்ளது. அந்த ஊடக நிறுவனத்தனால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் இலங்கையில் இருக்கும் தமது செய்தியாளர்களை அச்சுறுத்த வேண்டாம் என நியுயோர்க் டைம்ஸ் நாளிதழ் கோரியுள்ளது. மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்றினால் ஊடக சந்திப்பொன்றில் தமது ஊடகவியலாளர்கள் வெளிப்படையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
Read More »விஜயகலாவை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்குக!
விஜயகலாவின் இராஜாங்க அமைச்சர் பதவியை தற்காலிகமாக நீக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் கோரிக்கை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை அவரை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை , இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தில் அரசியலமைப்போ அல்லது தற்போதைய சட்டமோ மீறப்பட்டிருக்குமாயின் அது குறித்து ஆராய்ந்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு சபாநாயகர் அறிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் ...
Read More »