சர்வஜன வாக்கெடுப்பை கோருவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும் அந்த வாக்கெடுப்பை வைத்து பாராளுமன்றத்தினைக் கலைப்பதற்கான சட்ட ஏற்பாடு எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல் வரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு கேள்வி:- பாராளுமன்றம் கலைக்கப்படுவதாகவும் பொதுத்தேர்தல் ஜனவரியில் நடக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலை அடுத்து கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் நடந்தது என்ன? பதில்:- தேர்தல்கள் ஆணைக்குழுவில் தவிசாளர் உட்பட மூன்று உறுப்பினர்கள் உள்ளார்கள். எம்மூன்று ...
Read More »செய்திமுரசு
அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் கைது!
சட்டவிரோதமாக ஆபத்தான படகு வழி மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் 489 கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களைத் தடுக்கும் திட்டத்தினை அவுஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2013ல் முதல் நடைமுறையில் உள்ள கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கையின் கீழ் படகு வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்றவர்கள் தடுக்கப்பட்டனர். இவ்வாறு தடுக்கும் விதமாக எடுக்கப்பட்ட 78 நடவடிக்கைகளில் 2,525 புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் ஓகஸ்ட் மாதம் வரை எடுக்கப்பட்ட 10 நடவடிக்கைகளில் 297 பேர் தடுக்கப்பட்டுள்ளதாக ...
Read More »சபரிமலைக்கு செல்ல இவ்வளவு ஆர்வம் ஏன்?-தஸ்லிமா நஸ்ரின்
சபரி மலைக்கு செல்வதற்கு பெண் ஆர்வலர்கள் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்? என்று வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கேள்வி எழுப்பியுள்ளார் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் திகதி ஐப்பசி ...
Read More »ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது தென் ஆப்பிரிக்க அணி!
மோரிஸ், இங்கிடி ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால், கோல்ட் கோஸ்ட் நகரில் இன்று நடந்த டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்க அணி. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியின் தோல்வி தொடர்கிறது. ஏற்கெனவே கடைசி 3 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த ஆஸ்திரேலிய அணி 4-வதாக இந்தப் போட்டியிலும் தோற்றுள்ளது. ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி தனது கடைசி 6 போட்டிகளிலும் தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மட்டுமல்லாது பந்துவீச்சும் மிக மோசமாக அமைந்துள்ளது. அடுத்த வாரம் இந்திய ...
Read More »புதிய அரசாங்கத்தை என்னால் விரைவில் அமைக்க முடியும்!
புதிய அரசாங்கத்தை என்னால் விரைவில் அமைக்க முடியும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளதால் மீண்டுமொரு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எங்களிடம் போதிய உறுப்பினர்கள் உள்ளனர் எங்களால் தொடர்ந்து செயற்பட முடியும் இதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு அரசியல் ஸ்திரதன்மை அவசியம் என குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க வலிமையான அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் அரசியல் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதே எனது நோக்கம் ...
Read More »“என்னை பலவந்தமாகவும் முறையற்ற விதத்திலும் பதவி நீக்க முடியாது”!
“என்னை பலவந்தமாகவும் முறையற்ற விதத்திலும் பதவி நீக்க முடியாது” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வீரகெட்டியவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Read More »இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்!
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. புரோவிடென்சியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தங்கள் பிரிவில் இடம் பிடித்துள்ள ...
Read More »சவுதி இளவரசர் உத்தரவுப்படியே கஷோகி கொல்லப்பட்டார்!
துருக்கி நாட்டு தூதரகத்தில் மயக்க மருந்து கொடுத்து வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் படுகொலைக்கு சவுதி இளவரசர் மீது அமெரிக்க உளவுப்படை குற்றம்சாட்டியுள்ளது. சவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்தவாறு சவுதி அரசுக்கு எதிராக கட்டுரைகளையும், செய்திகளையும் வெளியிட்டு வந்தார். இந்நிலையில், சமீபத்தில் தாய்நாட்டுக்கு சென்று திருமணம் செய்துகொள்ள தீர்மானித்த ஜமால் கஷோகி, தேவையான சில ஆவணங்களை பெறுவதற்காக துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா நாட்டு ...
Read More »சிறிசேன மீதான சர்வதேச நெருக்குதல் தொடரவேண்டும்!
இலங்கையில் தீவிரமடைந்திருக்கும் அரசியல் நெருக்கடியை அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு இசைவாகவும் ஜனநாயக விழுமியங்களின் வழியிலும் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று சர்வதேச சமூகம் பிரயோகித்துவருகின்ற நெருக்குதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தடுமாறவைத்திருக்கிறது.அந்த நெருக்குதல் தொடரவேண்டும் என்று லண்டன் கார்டியன் பத்திரிகை வலியுறுத்தியிருக்கிறது. ‘ஜனாதிபதி எதிர் பிரதமர் ‘ என்ற தலைப்பில் நேற்று வெள்ளிக்கிழமை கார்டியன் தீட்டியிருக்கும் ஆசிரிய தலையங்கத்தில் ‘இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் இடம்பெறுகின்ற மோதல்கள் வீதிகளுக்கும் பரவக்கூடும் அல்லது நெருக்கடியில் தலையீடுசெய்யுமாறு பாதுகாப்புப் படைகள் தூண்டப்படக்கூடும் என்ற அச்சத்தையும் சிலர் வெளியிட்டிருக்கிறார்கள். இலங்கை இராணுவத்துக்கும் பொலிஸுக்கும் ...
Read More »கஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை!
கஜா புயலின் எதிரொலியானது மன்னார் மாவட்டத்தில் தொடர் மழையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பெரும் அச்சத்தை எற்படுத்தியிருந்த கஜா புயல் ஆனது நேற்று நள்ளிரவுடன் கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் விடுக்கப்பட்ட அறிவுறுத்தளின் படி ‘கஜா’ புயலானது மன்னார் மாவட்டத்தின் ஊடக காற்றின் திசை காரணமாக கடந்து செல்லும் எனவும் சில நேரங்களில் புயலின் தாக்கம் வழைமையை விட அதிகமாக காணப்படும் எனவும் அதனால் மன்னார் மாவட்ட மக்களை தயார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அத்துடன் மன்னார் மாவட்ட அரசங்க அதிபர் ...
Read More »