ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியின்போது அமெரிக்காவில் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நாசமானதாக வெளியான தகவலின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வோம். ஹைட்ரோகார்பன் எரிவாயு பாதிப்பு பற்றி பல்வேறு விவரங்கள் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்த வரிசையில் அமெரிக்காவில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியில் சுமார் 6,75,000 ஏக்கர் நிலப்பரப்பு முற்றிலும் நாசமாகி, மக்கள் வாழ முடியாத பகுதியானது என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அவ்வாறு பரவிய தகவலில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் அருகில் உள்ள பெலாக்வா என்னும் பகுதியின் ...
Read More »செய்திமுரசு
ரிஷாத், அசாத் சாலிக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
நீதித்துறைக்கு அவமதிப்பினை ஏற்படுத்தும் விதமாக கருத்துரைத்த மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் உள்ளிட்டவர்கள் தொடர்பில் நீதித்துறைசார்ந்த அமைச்சர் ஏன் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்று எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த கேள்வியெழுப்பினார். இன்று சட்டவாட்சிக் கோட்பாடு நடைமுறையில் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் காணப்படுகின்றது. அரசாங்கத்தின் இயலாமையினை மறைப்பதற்கு சட்டத்தின் மீது பழி சுமத்தப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் ...
Read More »பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்! – கனேடிய பிரதமர்
இலங்கையில் அர்த்தமுள்ள வகையில் பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்படுவது அவசியமாகும். பாதிக்கப்பட்டவர்களினால் நம்பக்கூடிய வகையிலான பொறுப்புக் கூறல் பொறிமுறைமை ஒன்றை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என்று கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 26 ஆண்டுகளாக நீடித்து வந்த யுத்தம் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக முடிவுக்கு வந்திருந்தது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் ...
Read More »உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு!
இங்கிலாந்தில் நடக்கும் 12-வது உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்பிருப்பதாக கவுதம் காம்பிர் கணித்துள்ளார். 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. ரவுண்டு ராபின் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது. இந்த நிலையில் உலகக்கோப்பையை வெல்ல ...
Read More »அச்சுறுத்தலில் பிராந்திய பாதுகாப்பு !
மழைவிட்டும் தூவானம் நிற்கவில்லை என்பது போல் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நாளுக்கு நாள் அதன் பிரதிபலிப்புக்கள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. தற்கொலை தாக்குதல்களை அடுத்து பாதுகாப்புத்துறையினரின் உடனடிச் செயற்பாடுகள் மூலம் தாக்குதல் சம்பவங்கள் அடுத்து நிகழாத வகையில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. எனினும் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் சம்பந்தமாக பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது அதிர்ச்சி விடயங்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அந்த விடயங்கள் பரஸ்பரம் உள்நாட்டிலும் பிராந்தியத்திலும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனாலும் தீவிரவாதத்திற்கு எதிராக உள்நாட்டில் நடைபெறும் விசாரணை நடவடிக்கைகள் ...
Read More »வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள்!
உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம். * உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல, தப்பித்தவறி கூட அதே தவறை இன்னொருவருக்கு செய்துவிடக்கூடாது. * யாரையும் இளக்காரமாக பார்க்காதீர்கள். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும். * நமக்கு பிடிக்காதவாரகவே இருந்தாலும் அவரின் சிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு செல்லுங்கள். * மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்புக் ...
Read More »ஈஸ்டர் தாக்குதல்-உயிரிழந்தோருக்கு 119.3 மில்லியன் ரூபா நஷ்டஈடு!
ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகியவற்றில் பலியானவர்களுக்கு அரசாங்கம் இதுவரை 119.3 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக வழங்கியுள்ளது. நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் பலியானவர்களுக்கு 86மில்லியன் ரூபாவும் கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் பலியானவர்களுக்கு 12.1மில்லியன் ரூபாவும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு 21.2மில்லியன் ரூபாவும் நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு சங்ரில்லா ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், தெஹிவளை ட்ரொபிக்கல் இன் ...
Read More »என் அம்மா இறந்தபோது கொடிய மன வலியை அனுபவித்தேன் !
என் அம்மா டயானா இறந்தபோது பிற எந்த வலியை விடவும் கொடிய மன வலியை அனுபவித்தேன் என இளவரசர் வில்லியம் மனம் திறந்து பேசி உள்ளார். இங்கிலாந்து இளவரசி டயானா, தனது 36-வது வயதில் 1997-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 31-ந்திகதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஒட்டு மொத்த மனித குலத்தின் அன்பை ஒருசேரப் பெற்றிருந்த அவரது மரணம், உலக வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைந்தது. இளவரசர் சார்லஸ்சை பிரிந்து வாழ்ந்த நிலையில் அவர் இறந்தது பல்வேறு சர்ச்சைகளை ...
Read More »ஆஸ்திரேலியாவில் ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி!
ஆஸ்திரேலியா தேர்தலில் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆளுங்கட்சி மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தேசிய கூட்டணியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஏற்கனவே பிரதமராக இருந்து வந்த மால்கம் டர்ன்புல் கட்சியினால் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 9 மாதங்களாக ஸ்காட் மோரிசன் பிரதமராக இருந்து வருகிறார். இந்த நிலையில் 151 இடங்களைக் கொண்ட அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு மே மாதம் 18-ந்தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ...
Read More »ஆஸ்திரேலியாவில் தேர்தல்!
ஆஸ்திரேலியாவில் நடந்த பொதுத்தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. எதிர்க்கட்சி ஆட்சியைப் பிடிக்கக்கூடும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தேசிய கூட்டணியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஏற்கனவே பிரதமராக இருந்து வந்த மால்கம் டர்ன்புல் கட்சியினால் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 9 மாதங்களாக ஸ்காட் மோரிசன் பிரதமராக இருந்து வருகிறார். இந்த நிலையில் 151 இடங்களைக் கொண்ட அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு மே மாதம் 18-ந்தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ...
Read More »