ஈஸ்டர் தாக்­குதல்-உயிரிழந்தோருக்கு 119.3 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈடு!

ஈஸ்டர் தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத குண்டுத்தாக்­கு­த­லுக்கு இலக்­கான கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்­டிய புனித செபஸ்­தியார் தேவா­லயம் மற்றும் மட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­லயம் ஆகி­ய­வற்றில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு அர­சாங்கம் இது­வரை 119.3 மில்­லியன் ரூபாவை நஷ்­ட­ஈ­டாக வழங்­கி­யுள்­ளது.

 

நீர்­கொ­ழும்பு, கட்­டு­வாப்­பிட்­டிய தேவா­ல­யத்தில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு 86மில்­லியன் ரூபாவும் கொழும்பு கொச்­சிக்­கடை தேவா­ல­யத்தில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு 12.1மில்­லியன் ரூபாவும் மட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­ல­யத்­துக்கு 21.2மில்­லியன் ரூபாவும் நஷ்­ட­ஈ­டாக வழங்­கப்­பட்­டுள்­ளது.

கொழும்பு சங்­ரில்லா ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்­பெரி ஹோட்டல், தெஹி­வளை ட்ரொபிக்கல் இன் ­ஹோட்டல் ஆகி­ய­வற்றில் குண்­டுத்­தாக்­கு­த­லினால் பலி­யா­ன­வர்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட்­டுள்­ளது. கொழும்பு சங்­ரில்லா ஹோட்­டலில் பலி­யா­ன­வர்­க­ளுக்­காக 2.8 மில்­லியன் ரூபாவும் சினமன் கிராண்ட் ஹோட்­டலில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு 1.4மில்­லியன் ரூபாவும் கிங்ஸ்­பெரி ஹோட்­டலில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு 9இலட்சம் ரூபாவும் தெஹி­வளை ட்ரொபிக்கல் இன் ஹோட்­டலில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு 1.1 மில்­லியன் ரூபாவும் நஷ்­ட­ஈ­டாக வழங்­கப்­பட்­டுள்­ளது.