Omicron தொற்றுக்குள்ளான ஒருவர் கான்பராவிலுள்ள பள்ளி ஒன்றுக்கு சென்றிருந்தநிலையில் குறித்த பள்ளியுடன் தொடர்புடையதாக சுமார் 180 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் Omicron தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. குயின்ஸ்லாந்தில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அத்தியாவசியமற்ற வணிக இடங்களுக்குச் செல்ல டிசம்பர் 17 முதல் தடை விதிக்கப்படும். Gold Coast-இல் கோவிட் தொற்றுக்கண்ட ஒருவர் அங்குள்ள முதியோர் பராமரிப்பு இல்லமொன்றுடன் தொடர்புடையவர் என குயின்ஸ்லாந்து சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் குறிப்பிட்ட முதியோர் பராமரிப்பு இல்லத்தில் இதுவரை வேறு எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. ...
Read More »செய்திமுரசு
குசினிக் குண்டு
காஸ் சிலிண்டர் வெடிப்பது என்பது தமிழ்ப் பத்திரிகைகளுக்கு புதியது அல்ல. இந்தியாவில் சீதனம் கேட்டு பெண்களைக் கொன்றுவிட்டு அப்பெண் சிலிண்டர் வெடித்து இறந்துவிட்டார் என்று கூறி பெண்ணின் கணவரும் அவருடைய உறவினர்களும் தப்ப முயற்சிக்கும் சம்பவங்கள் தொடர்பில் பல செய்திகளை நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறோம்.ஒரு கொலையை சமையலறை விபத்தாக உருமறைப்பு செய்வது என்பது குடும்ப வன்முறைகளில் மிகக் குரூரமான ஒன்று. சீதனப்படுகொலை என்று வர்ணிக்கத்தக்க காஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் நமது நாட்டில் அனேகமாக இல்லை. எனினும் தமிழ் வாசகர்கள் படித்த சிலிண்டர் வெடிப்பு ...
Read More »சிரியா துறைமுகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
சிரியாவில் பெரும்பாலான இறக்குமதிகள் நடைபெற்று வரும் மிக முக்கிய துறைமுகத்தில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. சிரியா நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு படைகளும், கிளர்ச்சியாளர்களும் சண்டையிட்டு வருகிறார்கள். இதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிரியா மீது இஸ்ரேல் நாடும் அடிக்கடி தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிரியாவில் உள்ள துறைமுகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் கடற்கரை நகரமான லதா கியாவில் உள்ள ...
Read More »மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேசங்களில் புதிதாக 23,803ஏக்கர் காணிகளை வனவளத் திணைக்களம் அபகரிக்க முயற்சி
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே 32,110ஏக்கர் காணிகளை வனவளத்திணைக்களம் அபகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வனவளத்திணைக்கள அதிகாரி எஸ்.ஜி.சுனில் ரஞ்சித், காடுபேணல் சட்டத்தின்கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் மற்றும், மாந்தை கிழக்கு பிரதேசங்களில் தம்மால் புதிதாக ஒதுக்கக் காடுகளாக 23,803ஏக்கர் காணிகள் அடையாளம்காணப்பட்டுள்ளதாகவும், எனவே அவ்வாறு ஒதுக்கக் காடுகளாக அடையாளம் கணப்பட்டுள்ள குறித்த காணிகளை தமக்கு விடுவித்துத் தரவேண்டுமென, முல்லைத்தீவு மாவட்டசெயலர் கதிர்காமுத்தம்பி விமலநாதனை எழுத்துமூலம் கோரியுள்ளதாகவும் தெரியவருவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். எனவே வனவளத் திணைக்களத்தின் தொடர்ச்சியான இந்த ...
Read More »யாழில் கரையொதுங்கும் சடலங்கள் தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தப்படுத்துங்கள்
யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாண கரையோரங்களில் கடந்த வாரம் ஆறு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இது தொடர்பில் எந்த விதமான தகவல்களும் வெளிவரவில்லை. அதனால்காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவராத நிலையில் இந்த சடலங்கள் கரை ஒதுங்குகின்றன. கடற்கரைகளில் சடலங்கள் ஒதுங்கி ...
Read More »‘மனிதாபிமானம் எங்கே?’
மனிதாபிமானம் எங்கே?’ ‘நாங்கள் உங்களை போன்ற மனிதர்கள் இல்லையா?’ – ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகளை தொடர்ந்து சிறைப்படுத்தி வைத்துள்ள ஆஸ்திரேலிய அரசு, தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மெல்பேர்னில் உள்ள பார்க் ஹோட்டலிலும் அகதிகளை தடுத்து வைத்திருக்கிறது. இந்த அகதிகளை விடுவிக்கக்கோரி டிசம்பர் 10, மனித உரிமைகள் தினத்தன்று அந்த ஹோட்டலுக்கு எதிரே போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Read More »புதிய குற்றச்சாட்டு வழக்கு: ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை
தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி அந்நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது. அப்போது முதல் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ...
Read More »பிரியந்தவின் உடற்பாகங்கள் தாங்கிய பேழை ஏற்றப்பட்டது
பாகிஸ்தானில் கொடூரமாக அடித்து தீமூட்டி படுகொலைச்செய்யப்பட்ட இலங்கை பொறியிலாளரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல், இன்று மாலை 5 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்படும் பாகிஸ்தான் லாகூரியிலிருந்து புறப்படும் யு.எல்.186 என்ற இலக்கத்தைக் கொண்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தின் மூலமாக அவரது உடற்பாகங்கள் தாங்கிய பேழை எடுத்துவரப்படவுள்ளது. அந்தபேழை, இலங்கை அதிகாரிகளிடம் பாகிஸ்தானில் வைத்து கையளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்.
Read More »பேராயர் மல்கம் ரஞ்சித் கண்டனம்
பாகிஸ்தானின் சியால்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் மறைவுக்கு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இரங்கல் தெரிவித்ததுடன், கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற கொலைக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்தார். மதம் என்ற போர்வையில் இழைக்கப்படும் இதுபோன்ற கொடூரமான, குற்றச்செயல்களால் ஏற்படும் அவலங்களை தடுத்து நிறுத்த அனைத்து நாடுகளின் தலைவர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என தனது இரங்கல் செய்தியில் பேராயர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கொலைக்கு எதிராக பாகிஸ்தான் தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
Read More »பாகிஸ்தானில் இலங்கைக்கு எதிராக நடந்த 2வது வன்முறை; இந்தியாவுக்கான பாடம்!
பாகிஸ்தானின் சியால்கோட் தொழிற்சாலையில் இலங்கை ஊழியர் ஒருவர் கடவுள் நிந்தனை செய்ததாகக் கூறி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானின், சிவில் சமூகம், அரசியல்வாதிகள் மற்றும் இராணுவத்தினரிடமிருந்து கடுமையான எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், அங்கே இது போன்ற சம்பவம் நடைபெறுவது இது முதல் முறையா என்றால் இல்லை. இலங்கை, கொழும்பு அருகே உள்ள கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளரும் இரண்டு குழந்தைகளின் தந்தையுமான பிரியந்த தியவதன குமார, வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கான கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். பின்னர், அவருடைய உடலை எரித்தனர். அவருடைய தொழிற்சாலையில் பணிபுரிந்த சில ...
Read More »