செய்திமுரசு

யாழில் தொடரும் குள்ளர்களின் அட்டகாசம்!

யாழ்ப்பாணம், அராலி மேற்குப் பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டு வேலிக்கு நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு தீ மூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்கே தீ மூட்டப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக அராலிப் பிரதேசங்களில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாகவும், அவர்கள் இரவு வேளைகளில் வீடுகளுக்குக் கற்களால் எறிவதாகவும் வீட்டு யன்னல்கள் மற்றும் கதவுகளைத் தட்டுவதாகவும் அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்குத் தீ மூட்டப்பட்டுள்ளதுடன், அயலிலுள்ள அவரது தம்பியின் ...

Read More »

வரலாற்று சாதனை படைத்த அப்பிள்!

அப்பிள் நிறுவன பங்குகள் 207.05 டாலர்கள் அளவில் அதகரித்ததைத் தொடர்ந்து அப்பிள் இன்க் நிறுவன மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர்களை கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பிள் இன்க் நிறுவன மதிப்பு முதல் முறையாக ஒரு லட்சம் கோடி டாலர்களை கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் ஐபோன் விற்பனை மூலம் இத்தகைய இலக்கை எட்டியிருக்கிறது. அப்பிள் நிறுவன பங்குகள் 2.8 சதவிகிதம் அதிகரித்து 207.05 டாலர்களில் நிறைவுற்றது. அந்நிறுவனத்தின் ஜூன் மாதம் வரையிலான காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ...

Read More »

இம்ரான் கான் (IMRAN KHAN) என்னும் ஆளுமையின் வளர்ச்சியில் கற்கக்கூடிய சில பாடங்கள்!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஆவணி மாதம் 11ம் திகதி பதவி ஏற்கவிருக்கும் இம்ரான் கான் தொடர்பான சில குறிப்புகளுடன் இந்த பதிவு அமையவிருக்கிறது. 1952ம் ஆண்டு ஜப்பசி மாதம் 05ம் திகதி லாகூரில் பிறந்த இம்ரான் கான், 1971ம் ஆண்டு பாகிஸ்தான் அணி சார்பாக பேர்மிங்கத்தில் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் ஆரம்பித்து, 1992ம் ஆண்டு இங்கிலாந்துக்கெதிரான ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்துடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையினை நிறைவு செய்து கொண்டார். இந்த இடைப்பட்ட 21 வருட காலத்தில் சகலதுறை ஆட்டக்காரராக, 88 டெஸ்ட், ...

Read More »

சிறிலங்காவிற்கு சீனா கைகொடுக்கும்!

இந்து சமுத்திரத்தில் பொருளாதாரம் மற்றும் நிதி கேந்திர நிலையமாக மாறும் சிறிலங்காவின்  எதிர்பார்ப்புகளுக்கு, ஆளுங்க்சியான கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அந்நாட்டு மக்கள் பூரண ஆதரவை தருவார்களென சீன கம்யூனிஸ் கட்சியின் சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் க்வா யேஜு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கால் ஆரம்பிக்கப்பட்ட பட்டையும் பாதையும்” ​வேலைத்திட்டத்தின் இதற்கான வாய்ப்புகள் கிடைப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சீன பிரதியமைச்சர் யேஜு, அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று (02) சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் ...

Read More »

கணிதத்திற்கு ‘நோபல் பரிசு’ வென்றுள்ள ஆஸ்திரேலியத் தமிழர்!

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கணிதத் துறையில் சாதனை புரிந்தவர்கள் மற்றும் புதிய சிந்தனைகளை வளர்ப்பவர்கள் என்று கருதப்படும் 40 வயதிலும் குறைந்தவர்களுக்கு வழங்கப்படும் “Fields Medal” விருது, கணிதத்திற்கான ‘நோபல் பரிசு’ என்று பரவலாக அறியப்படுகிறது. இந்த விருது இரண்டு முதல் நான்கு கணித மேதைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த வருடம், இந்த விருது நால்வருக்கு வழங்கப்படுகிறது. அதில், 16 வயதிலேயே மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அக்‌ஷய் வெங்கடேஷ் என்ற பேராசிரியரும் ஒருவர். தற்போது 36 வயதான பேராசிரியர் அக்‌ஷய் வெங்கடேஷ் அமெரிக்காவின் ...

Read More »

முல்லைத்தீவில் கடற்தொழில் நீரியல் வள திணக்களம் முற்றுகை!

முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்துக்குள் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் அத்துமீறி நுழைந்தமையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது . சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மீனவர்கள் அத்துமீறி கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்துக்குள் தற்போது புகுந்துள்ளனர். காவல் துறை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிவருகின்ற நிலையில், மேலதிக காவல் துறையினர் அருகிலுள்ள காவல் துறை நிலையங்களில் இருந்து வரவழைத்து கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Read More »

“நல்லாட்சி்” அரசாங்கம் நாட்டை இராணுவ மயமாக்குகிறது’! -மஹிந்த ராஜபக்ஷ

நல்லாட்சி அரசங்கம், நாட்டை இராணுவ மயமாக்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சட்டம் மற்றும் ஒழுங்கை அமுல்படுத்தில் நல்லாட்சி அரசாங்கம் தோல்விக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸாருக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்களை இராணுவத்தினருக்கு தற்போதைய அரசாங்கம் கையளித்திருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கண்டறிதல் மற்றும் மனித கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றை இராணுவத்தினர் செய்துவருவது ஆச்சரியமளிக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »

உலகம் முழுவதும் பறக்கும் இந்தியப் பெண்கள்!

“நீயே உந்தன் சிறகு, வானமாக மாறு, உயரமாக பற நாளைக்கு அல்ல, இன்றைக்கே, உயரமாக பற” மேற்கண்ட வரிகளை பாடிக்கொண்டே 23 வயதாகும் கீதர் மிஸ்கிட்டா, 21 வயதாகும் அரோஹி பண்டிட் ஆகிய இரண்டு இளம்பெண்களும் விமானத்தில் உலகை வலம்வரும் தங்களது பயணத்தை பஞ்சாபிலுள்ள பாட்டியாலா விமான தளத்திலிருந்து கடந்த ஞாற்றுக்கிழமை தொடங்கியுள்ளனர். பொதுவாக தரையிலிருந்து வானத்தை பார்க்கும்போது மக்கள் விண்மீன் கூட்டத்தை பற்றி நினைப்பார்கள். ஆனால், இந்த இரண்டு இளம்பெண்களும் தலைகீழாக அதாவது, வானத்திலிருந்து பூமியை அதுவும் 100 நாட்களில் பார்ப்பதற்கு புறப்பட்டுள்ளார்கள். ...

Read More »

ஆஸ்திரேலியாவில் மாரத்தான் போட்டியில் பதக்கம் வென்ற நாய்!

ஆஸ்திரேலியாவில் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட நாய் பதக்கம் வென்று அனைவரின் மனதையும் கவர்ந்தது. ஆஸ்திரேலியாவில் கால்கூர்லி நகரில் மராத்தான் போட்டி நடைபெற்றது. அதில் 21 கி.மீ. தூரம் (13 மைல்) ஓட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டி தொடங்கியதும் அனைவரும் ஒடினார்கள். அவர்களுடன் சேர்ந்த ஒரு நாயும் ஓடியது. போட்டியாளர்களுடன் அந்த நாய் இறுதிவரை ஓடி முடித்தது. எனவே, அந்த நாய்க்கு பதக்கம் வழங்கப்பட்டது. அந்த நாயின் பெயர் ஸ்டார்மி. கருப்பும், பிரவுன் நிறமும் கொண்ட அந்த நாய் ...

Read More »

மாற்றுத் தலைமையும் முதலமைச்சர் பதவியும்…. !

வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது மில்லியன் டொலர் பெறுமதி மிக்க கேள்வியாக எழுந்துள்ளது. தமிழ்த்தரப்பு அரசியல் ஓர் அரசியல் சுழலுக்குள் சிக்கி ஒரு தள்ளாட்டமான நிலைமைக்கு ஆளாகியிருப்பதே இதற்குக் காரணமாகும். உள்ளுராட்சித் தேர்தலுக்கு அடுத்தபடியாக நடைபெற வேண்டிய மாகாணசபைத் தேர்தல், இந்த வருட இறுதிக்குள் நடத்தப்படுமா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. அந்தத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல் திணைக்களம் தயாராக இருக்கின்ற போதிலும், அரச பங்காளிக்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும், சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில்; எழுந்துள்ள முரண்பாடுகளும், மகிந்த ராஜபக்சவின் மீள் எழுச்சிக்குரிய ...

Read More »