செய்திமுரசு

இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பிரஜை ஆஸி.யில் கைது!

இலங்கையைச் சேர்ந்த 25 வயதுடைய முஸ்லிம் இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.   இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவரை கைதுசெய்துள்ளதாகவும் அந் நாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

Read More »

அவர் பேசிய விதமே, இது தான் அவரின் கடைசி பேச்சு என்பதை எனக்கு உணர்த்தியது !

அவுஸ்திரேலியாவில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காதலன், இறப்பதற்கு முன்னால் காதலிடம் பேசிய விடயம் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. மைக்கேல் ஓவென்ஸ் (23) என்பரின் தோழியாக இருந்தவர் ரோசி. மைக்கேலின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் மைக்கேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருடன் ரோசியும் உடனிருந்த நிலையில் திடீரென அவரிடம் மனம் விட்டு பேசினார் மைக்கேல். ரோசியை தீவிரமாக காதலிப்பதாகவும், தன்னை திருமணம் ...

Read More »

பதவி விலகினார் ஆறுமுகன்! அனுஷியா, ஜீவனுக்கு புதிய பதவி!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பதவியலிருந்து ஆறுமுகன் தொண்டாமல் விலகியுள்ளார். இலங்கை தொழிலளார் காங்கிரஸின் நிர்வாக சபை மற்றும் தேசிய சபையின் ஒன்றுகூடல் இன்று காலை ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கொழும்பில் உள்ள இ.தொ.கா தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போதே தேசிய சபை மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களினால் இந்த நிர்வாகம் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை காலமும் காங்கிரஸின் பொது செயலாளர் மற்றும் தலைவராக பதவி வகித்த ஆறுமுகன் தொண்டமான், இன்றிலிருந்து தலைவராக மட்டும் செயற்படவுள்ளார். அத்தோடு, பொது செயலாளராக அனுஷியா சிவராஜாவும், ...

Read More »

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடக்கு கிழக்கில் போராட்டங்கள்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், வடக்கு கிழக்கில் இருவேறு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்திலும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அம்பாறையிலும் இருவேறு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர். அத்தோடு, இம்முறை சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமைசார் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள வாகன தொடரணி நேற்று முன்தினம் கொழும்பில் தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது. இன்று குறித்த பேரணி யாழ்ப்பாணம் சென்றடையவுள்ளதோடு, அங்கு மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யுத்த காலத்திலும் ...

Read More »

அமெரிக்க அரசாங்கத்தின் ஆலோசகர் பதவி விலகுகின்றார்!

வெள்ளை மாளிகையில் அரசின் ஆலோசகராக பணிபுரிந்து வரும் டான் மெக்கான் விரைவில் வெளியேறவுள்ளார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெறவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடையவும் ரஷியா நேரடியாக தலையிட்டது என்ற புகார் எழுந்தது. இது தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையிலான குழுவின் சிறப்பு விசாரணை நடைபெற்று வருகிறது. நேர்மையான அதிகாரி என்ற பெயர் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் குடியேற வருபவர்களை புறநகர் பகுதிகளை நோக்கி அனுப்புவதற்கு ஏதுவான சட்டம்!

ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறுபவர்களை regional areas-புறநகர் பகுதிகளில் குடியமர்த்தும்வகையிலான சட்டமுன்வடிவு நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது புதிய அமைச்சரவை முன் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடத்தில் மாத்திரம் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடிவரவாளர்களில் 87 சதவீதமானவர்களுக்கும் அதிகமானவர்கள் மெல்பேர்ன் மற்றும் சிட்னி நகர் பிரதேசங்களை அண்டியே தங்களது இருப்பிடங்களை தெரிவு செய்திருக்கிறார்கள் என்று தரவுகள் மூலம் தெரியவந்திருப்பதாக குடிவரவு அமைச்சு தெரிவித்திருந்தது. எனவே ஆஸ்திரேலியாவின் பிரதான நகரங்களை அண்டிய பகுதிகளில் புதிய குடிவரவாளர்கள் பெருமளவில் குடியேறுவதால் ஏற்பட்டுள்ள சனத்தொகை வளர்ச்சியை ...

Read More »

சமூக வாழ்க்கையில் ஆழ ஊடுருவியுள்ள இராணுவம்!

முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந்து விளக்கமறியலில் வைத்திருக்க முடியாது என கூறிய யாழ் மேல் நீதிமன்றம் ஐந்து சந்தேக நபர்களுக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கியிருக்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்த ஐந்து பேரையும் கிளிநொச்சி நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது. ஒன்பது மாதங்களாக விளக்கமறியலில் இருந்து வரும் இவர்களைப் பிணையில் விட வேண்டும் எனக்கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவைப் பரிசீலனை செய்து, இரு ...

Read More »

பூநகரியில் வெடிமருந்துடன் 2 பேர் கைது!

பூநகரியில் வெடிமருந்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூநகரி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 9. மணியளவில் பூநகரி சோதனை சாவடியில் சந்தேகத்தின் பெயரில் காவல் துறையினர்  மேற்கொண்ட சோதனையின் போது வாகனம் ஒன்றிலிருந்து 1 கிலோ 80 கிரேம் நிறையுடைய வெடி மருந்து காவல் துறையினர் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வெடிமருந்து கடத்தல் தொடர்பில் இரு சந்தேகநபர்களை காவல் துறையினர்  கைது செய்துள்ளதோடு. குறித்த இருவரும் தேராவில் மற்றும் வலைப்பாடு பகுதிகளைச் சேர்ந்தவர்கள என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

அட்மிரல் ரவிந்திர விஜயகுணரத்னவை கைது செய்ய உத்தரவு!

நேவி சம்பத் என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சி என்பவரே, வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வதற்கு முயற்சித்தாரெனக் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதுகாப்பு பணியாளர்களின் பிரதானி, அட்மிரல் ரவிந்திர விஜயகுணரத்னவை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு (சி.ஐ.டீ), நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More »

விக்னேஸ்வரனை முன்வைத்து சம்பந்தன் எடுக்க வேண்டிய முடிவு!

இரா. சம்பந்தனின் அரசியல் அணுகுமுறை என்பது, எப்போதுமே பரபரப்புகளுக்கு அப்பாலானது; மிகமிக நிதானமானது. எந்த விடயத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று, அவர் கையாண்டது கிடையாது. அதுதான் அவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக்கியது. பெரிய சேதாரங்கள் இன்றி, கூட்டமைப்பை இன்றளவும் கட்டிக்காத்தும் வருகிறது. ஆனால், இந்த அணுகுமுறையே சம்பந்தனை, இப்போது பாரிய சிக்கலுக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது. 2015 பொதுத் தேர்தல் காலத்தில், கூட்டமைப்புக்கு எதிராக, சி.வி. விக்னேஸ்வரன் முன்னெடுத்த நடவடிக்கைகள், சம்பந்தனை அதிகளவு கோவப்படுத்தியது. அதை அவர் ஓரளவுக்கு வெளிப்படுத்தவும் செய்தார். எனினும், எந்தவொரு கட்டத்திலும் ...

Read More »