செய்திமுரசு

சுதந்திர தினமும் தமிழ் மக்களும்- பி.மாணிக்கவாசகம்

நாடு ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்று ஏழு தசாப்தங்களாகின்றன. தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றதாக, 71 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் வெகு கோலாகலமாக கொழும்பில் கொண்டாடப்பட்டிருக்கின்றது. கண்ணைக் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்ட பல்வகை ஊர்திகளும், படையினருடைய அணிவகுப்புக்களும், பாண்ட் வாத்திய அணி நடையும் பார்ப்போரைப் பரவசப்படுத்தியிருந்தன. ஆனால் இந்தப் பரவசம் நாடளாவிய ரீதியில் அனைத்து இலங்கையர்களுக்;கும் ஏற்பட்டிருக்கவில்லை. குறிப்பாக இந்த நாட்டின் பாரம்பரிய வரலாற்றுத் தாயக உரித்துடைய தமிழ் மக்களுக்கு இந்த சுதந்திர தினமும், சுதந்திர தினக் கொண்டாட்டங்களும் பரவசமூட்டுவதாகவோ அல்லது மகிழ்ச்சி ...

Read More »

டெல்லியில் உலகின் ஏழு அதிசயங்கள்!

டெல்லியில் உலகின் அதிசயங்கள் ஏழும் ஒரே இடத்தில் கண்கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சுற்றுலா பயணிகளுக்காக அனைத்து நாட்டின் மக்களையும் வெகுவாக கவர டெல்லியில் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு ஒன்று பார்க் போல் மாற்றியமைக்கப்பட்டு, அங்கு உலகின் ஏழு அதிசயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதில் டெல்லியின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ரியோ டி ஜெனிரோவின் கிறிஸ்து மீட்பர் சிலை, பாரிசின் ஈஃபில் டவர், ரோம் நாட்டின் கொலோசியம், இத்தாலியின் பிசா சாய்ந்த கோபுரம் மற்றும் கிசாவின் பிரமீடு ஆகியவற்றின் வடிவமைப்புகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ...

Read More »

வவுனியா வடக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்!

வவுனியா வடக்கு கச்சல் சமளங்குளத்தில் நடைபெறும் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தையும், பௌத்த மத ஆக்கிரமிப்பையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக வவுனியா மாவட்டச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா மாவட்டத்தின் ஒரு பகுதியான வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவு எல்லைக்குட்பட்ட கச்சல் சமளன்குளம் சீரமைக்கப்படுவதாகவும், அக்குளத்தின் கீழ் உள்ள காணிகள் அப்பிரதேசத்திற்கு வெளியேயிருந்து கொண்டு வந்து குடியேற்றப்படும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அங்கு ...

Read More »

பி.எம்.எஸ்.சார்ள்சை மங்கள எப்படி வருணித்தார் தெரியுமா?

பிரபாகரனுக்கும் அஞ்சாத இரும்புப் பெண் என்று சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பி.எம்.எஸ் சார்ள்சை வர்ணித்துள்ள சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, அவர் மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார். சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து பி.எம்.எஸ்.சார்ள்சை நீக்கி விட்டு, முன்னாள் கடற்படை அதிகாரியை அந்தப் பதவியில்  நியமிக்க சிறிலங்கா அமைச்சரவை கடந்தமாதம் முடிவு செய்தது. இதற்கு எதிராக, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பு மற்றும், சட்டப்படி வேலை செய்யும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனால், சுமார் 10,000 கொள்கலன்கள் சோதனையிடப்படாமல் முடங்கிக் ...

Read More »

அவுஸ்திரேலியாவின் பேர்த் மாநகரில் தமிழ் விழா!

அவுஸ்திரேலியாவின் மேற்கு மாநிலத்தில் உள்ள பேர்த் மாநகரில் இயங்கி வரும் தெற்கு தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த தமிழ் விழா நடைபெற்றது. இந்நிகழ்வு கடந்த 24.11.2018 தெற்கு தமிழ்ப் பாடசாலையால் மிகவும்  சிறப்பாக ஒழுங்மைக்கப்பட்டு நடத்தப்பட்டது. தமிழர்களின் மொழி, கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆடல், பாடல், நாடகம், வில்லுப் பாட்டு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்தப் பாடசாலையில் கல்வி கற்று வரும்  சுமார் 30-க்கும் அதிகமான சிறுவர்கள் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர் என்பது ...

Read More »

10 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியன் பெண்கள் கிரிகெட் அணி!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் சவுத் ஆஸ்திரேலியன் பெண்கள் கிரிக்கெட் அணி 10 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டிவிசன் அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டமொன்றில், தெற்கு ஆஸ்திரேலியன் – நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதின. முதலில் தெற்கு ஆஸ்திரேலியன் அணி பேட்டிங் செய்தது. நியூ சவுத் வேல்ஸ் அணியின் ரோக்சனா வான்-வீனின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தெற்கு ஆஸ்திரேலியன் அணியின் வீராங்கனை வரிசையாக வெளியேறினார்கள். தொடக்க வீராங்கனை பெபி மான்செல் ...

Read More »

மைத்திரியின் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டது!

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தல் நடைபெறவிருந்த வட மாகாணத்துக்கான கிராம சக்தி மக்கள் இயக்க செயற்குழுக் கூட்டமும் கோப்பாயில் நடைபெறவிருந்த கிராம சக்தி மக்கள் இயக்கம் தொடர்பான மக்கள் சந்திப்பும் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளதுடன். சந்திப்பு திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Read More »

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை! மீண்டும் விசாரணைகள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20 ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் காவல் துறை  மா அதிபர் பாரப்படுத்தினார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் ...

Read More »

வடகொரிய தலைவரை வியட்நாமில் சந்திப்பேன்- டிரம்ப்

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உடனான இரண்டாவது சந்திப்பு வியட்நாமில் இம்மாத இறுதியில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி செய்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர்பதற்றம் நிலவியது. குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நீடித்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு ...

Read More »

ஆஸ்திரேலியாவில் வெள்ளம்- தெருக்களில் உலாவந்த முதலைகள்

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளில் இருந்த முதலைகள் வெளியேறி தெருக்களிலும், ரோடுகளிலும், உலாவருகின்றன. ஆஸ்திரேலியாவில் வட கிழக்கு பகுதியில் வரலாறு காணாத பருவ மழை பெய்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக குவின்ஸ் லெண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகள், பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். சிலர் தங்களின் வீட்டு கூரைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து ...

Read More »