செய்திமுரசு

“நீர்த்திரை” நூல் வெளியீட்டு விழா

ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான சௌந்தரி கணேசன் எழுதிய கவிதைத் தொகுதி “நீர்த்திரையும்” ஆசி கந்தராஜா எழுதிய “கறுத்தக் கொழும்பான்”, “கீதையடி நீயெனக்கு” ஆகிய நூல்களின் அறிமுகமும் நேற்றுஞாயிற்றுக் கிழமை மாலை கோம்புஸ் ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்பலரும்கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பாக்கினர். தொகுப்பாளினி சோனா பிறின்ஸ் அகவணக்கத்துடன் அரங்கத்தில் உள்ளவர்களை வரவேற்றார். அதைத்தொடர்ந்து நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர் மங்கல விளக்கேற்ற அபர்ணா ஹரன் தமிழ்த்தாய் வாழ்த்திசைக்க செல்வி விஐயாள் விஜே அவுஸ்திரேலிய தேசியகீதம் பாடி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள். திரு திருநந்தகுமார் தனது தலைமை உரையில் ...

Read More »

கரவாக காரியமாற்றுவது மடமை! வெளிப்படையாக உரிமைகளை கேளுங்கள்!! – விக்கினேஷ்வரன் அழைப்பு

“நாங்கள் யாவரும் சகோதரர்கள்; எமக்குள் நல்லெண்ணம் மலரட்டும்; சுமூகமான உறவுகள் உருவாகட்டும்” என்றெல்லாம் மேடைகளில் ஏறிக் கூறிவிட்டுப் போரின் போது யுத்தக் குற்றமிழைத்த இராணுவத்தினரைத் தொடர்ந்து எம்மண்ணில் ஆக்கிரமிப்புப் படையாக இருந்து ஆள விடுவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததொன்று என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். இணுவில் இந்துக் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவும் புதிய கட்டடத் திறப்பு விழாவும் கையளிப்பு விழாவும் கல்லூரி முன்றலில் அமரர் நா. கணேசபிள்ளை அரங்கில் நேற்று நடைபெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ...

Read More »

வித்தியாக்களைப் பாதுகாப்பது எப்படி? – நிலாந்தன்

அண்மையில் நினைவு கூரலுக்கான உரிமை என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரோடு மரிஷா எனப்படும் மற்றொரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வந்திருந்தார். அன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களோடு நிகழ்ந்த ஓர் சந்திப்பின் போது மரிஷா கேட்டார் “படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பாக அதிகரித்த அக்கறையைக் காட்டும் தமிழ்த் தரப்பானது தனது சமூகத்திற்குள்; வாழும் குற்றவாளிகளால் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகளையிட்டு ஏன் அந்தளவிற்கு அக்கறைப்படுவதில்லை என்று?” அவருடைய கேள்வி ...

Read More »

களமருத்துவப் போராளி திரு.தர்மரத்தினம் (வாமன்) ஆற்றிய உரை

லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் ஆறாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்த நெருக்கடியான தருணங்களிலும் இறுதிவரை ஈழத்தில் மருத்துவப் பணியாற்றிய களமருத்துவப்போராளி் திரு.தர்மரத்தினம் (வாமன்) ஆற்றிய உரை.

Read More »

“ச(ன்)னத்தின் சுவடுகள்” மற்றும் “நாங்களும் மனிதர்களே” வெளியீட்டு நிகழ்வு

ச(ன்)னத்தின் சுவடுகள் , மற்றும் நாங்களும் மனிதர்களே என்ற இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு 10 – 05 – 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில், உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. தமிழர்களின் வலிசுமந்த காலத்தின் பதிவாக, மாலை 4.20 மணிக்கு யாழ் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்ற  இந்நிகழ்வில், 200 இற்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இளையசமூக செயற்பாட்டாளர் கௌசிக் மற்றும் காந்திமதி ஆகியோர் நிகழ்வை நிறைவாக தொகுத்தளித்தனர். மாலை 4.20 மணிக்கு யாழ் நிகழ்வு  மண்டபத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில், முதல் நிகழ்வாக தாயக விடுதலைப் ...

Read More »

விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதம் என சொல்கிறது கூட்டமைப்பு – கயேந்திரகுமார் (காணொளி)

இன்று தமிழர்களுக்கான உரிய தீர்வு என்னவென்ற விடயத்திலும் அதனை முன்னெடுப்பவர்கள் யார் என்றவகையிலும் மக்களிற்கு விளங்கப்படுத்தவேண்டிய தேவையுள்ளது. வடமராட்சியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் சார்பில் நடைபெற்ற மேதின பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கயேந்திரகுமார் பொன்னம்பல் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது. இன்று இனப்பிரச்சனை என்று சொல்லுகின்றோம். அதற்கான தீர்வு என்ன? இலங்கைத்தீpவில் சிங்களமக்களுக்கு எவ்வாறு சிறப்பான கலை கலாச்சாரம் உள்ளதோ அதேபோல தமிழ்மக்களும் சிறப்பான கலை கலாச்சாரத்தை கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் சிங்களவர்களின் மொழியை கலாச்சாரத்தை மதிப்பதுபோல அவர்களும் எமது மொழியை கலாச்சாரத்தை மதிக்கவேண்டும். ...

Read More »

வடக்கு மக்களாலே என்னில் மாற்றம் ஏற்பட்டது: மக்களின் எண்ணத்தை செயற்படுத்துகிறேன்: முதல்வர் விக்கி

வடக்கு மக்களுடன் வாழ்ந்து வருவதன் காரணமாகவே எனக்குள் மாற்றம் ஏற்பட்டது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் பிராந்திய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இனப்படு கொலைத் தீர்மானத்தை நிறை வேற்றியமை, இராணுவ வெளியேற்றம் குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பியமை, 13ஆம் திருத்தச்சட்டம் இனப் பிரச்சினைக்கு தீர்வல்ல எனச் சுட்டிக்காட்டியமை உள்ளிட்ட பல கருத்துக்களால் அண்மைய காலத்தில் இலங்கை அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சி. வி. விக்கினேஸ்வரன் மீது சர்வதேச அளவில் கவனம் ஏற்பட்டுள்ளது. வடக்கில் ...

Read More »

Two Nation One Country – தமிழரசுக்கட்சி விளக்கம்!

தந்தை செல்வநாயகம் அவர்களின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழரசு கட்சியால் அனுப்பிவைக்கப்பட்ட கட்டுரை: தமிழரசுக்கட்சியின் மதிப்பார்ந்த தலைவனாக விளங்கிய தந்தை செல்வநாயகம் அவர்களது சிரார்த்த தினத்தையொட்டி இந்த விடயத்தை ஆராய்வது காலப் பொருத்தமானது எனக் கருதப்படுகிறது. தமிழ்பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் ‘தமிழ்த் தேசிய இனம்’ என்ற வார்த்தைப் பிரயோகம், தமிழரசுக்கட்சியின் அங்குரார்ப்பண நாளில் இருந்தே பாவனையிலிருந்து வருகின்றது. 18.12.1949அன்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் முதலாவது கூட்டத்தில் கட்சியின் அமைப்புத் தீர்மானத்தை பிரேரித்துப் பேசிய தந்தை செல்வநாயகம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ”நாட்டின் ஒற்றுமைக்குப் ...

Read More »

அவுஸ்திரேலியா மெல்பேணில் “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – 2015” நினைவு நிகழ்வுகள்

அவுஸ்திரேலியா மெல்பேணில் “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – 2015” நினைவு நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை 19 – 04 – 2015 அன்று எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. மெல்பேணில் ஹைடில்பேர்க் இல் அமைந்துள்ள சென்ற்.ஜோன்ஸ் நிகழ்ச்சி மண்டபத்தில் சரியாக மாலை 6 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வு ஆரம்பமாகியது. அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் திரு. குணரட்ணம் அவர்களும், தமிழீழத் தேசியக்கொடியை நாடுகடந்த தமிழீழ அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு மாணிக்கவாசகர் அவர்களும், ஏற்றியதைத் தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்களுக்கான ஈகச்சுடரேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. ...

Read More »