செய்திமுரசு

நினைவுகூர்வது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்!

போரில் இறந்தவர்களைத் தூபிகள் அமைத்து அல்லது நிகழ்வுகள் நடத்தி நினைவுகூர்வது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அந்த உரிமைக்கு அனுமதி மறுப்பதற்கும், அதைத் தட்டிப் பறிப்பதற்கும் எவருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. அடிப்படைஉ ரிமையை ம று ப் ப து பெரும் மனித உரிமை மீறலாகும்.இவ்வாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இறுதிப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களின் உறவுகள் நினைவாக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் தூபி இடித்தழிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர்மேற்கண்டவாறு கூறினார். ...

Read More »

தேசிய கீதத்தில் ஒற்றை வார்த்தையை மாற்றிய அவுஸ்திரேலியா! கிடைத்துள்ள கலவையான வரவேற்பு

பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதன்படி நாட்டின் பழங்குடி மக்களையும் பிரதிபலிக்கும் வகையில் ஆஸ்திரேலியா தனது தேசிய கீதத்தில் ஒரு வா ர்த்தையை மாற்றியுள்ளது. புத்தாண்டு தினத்தன்று அவுஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன், “Advance Australia Fair” தேசிய கீதத்தின் இரண்டாவது வரியான “For we are young and free” என்பதை “For we are one and free” என்று மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த மாற்றம் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தது. அவுஸ்திரேலியாவை “பூமியில் மிகவும் வெற்றிகரமான பன்முக கலாச்சார நாடு” ...

Read More »

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது

நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தவிசாளர் ப.மயூரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு, 20 உறுப்பினர்களில் 13 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சியியைச் சேர்ந்த மூன்று ஊறுப்பினர்கள் நடுநிலை வகித்ததுடன், ரெலோவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேபோன்று, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க, இரண்டு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். அத்தோடு, ஈழ மக்கள் ...

Read More »

நிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமான மருத்துவமனை -35 பேர் பலியானதாக தகவல்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர். ஒரு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அதில் இருந்த நோயாளிகள், ஊழியர்களில் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டிட இடிபாடுகளை ...

Read More »

படிப்படியாக பறிபோகும் தமிழர் உரிமைகள்

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்குப்பின் மறுபடியும் இலங்கை இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் மாகாண சபைகளின் மீது கவனம் குவிந்திருக்கிறது. மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக சில தினங்களாக பேசப்படுகின்றது. ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சி இம்மாதத்தோடு ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது. இந்த ஓராண்டுக் காலகட்டத்தில் மாகாண சபைகள் தொடர்பில் ராஜபக்சக்களும் அவர்களுக்கு நெருக்கமான அமைச்சர்களும் தெரிவித்துவரும் கருத்துகளைத் தொகுத்துப் பார்த்தால், அவர்கள் மாகாண சபைக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற ஒரு தோற்றமே கிடைக்கும். அதிபர் பதவியேற்ற புதிதில் இந்தியாவுக்கு விஜயம் ...

Read More »

தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் நல்லூர் பிரதேச சபையினரால் வெளியேற்றப்பட்டனர்

யாழ்.திருநெல்வேலிச் சந்தையில் பொங்கல் காலத்தில் வெடி வியாபாரத்திற்காக வருகை தந்திருந்த தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் நல்லூர் பிரதேச சபையினரால் வெளியேற்றப்பட்டனர். நல்லூர் சந்தை பூட்டப்பட்டிருக்கும் நிலையில் சந்தையைச் சூழ பலாலி வீதி மற்றும் ஆடியபாதம் வீதிப் பகுதிகளில் பொங்கல் வியாபாரம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தென்னிலங்கையிலிருந்து வந்து யாழ்.மாவட்ட வியாபாரிகளுடன் இணைந்து சில வியாபாரிகள் வெடி மற்றும் பானை வியாபாரம் செய்து வருவதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் காவல் துறையுடன் இணைந்து நடத்திய சோதனையில் 3 ...

Read More »

அமெரிக்க வன்முறையின் வரலாறு

கேப்பிட்டலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தூண்டியதைவிட ரத்தக்களரி நிரம்பிய, மிகவும் நாசகாரத்தன்மை கொண்ட பல அத்தியாயங்களைக் கொண்டிருப்பது அமெரிக்க வரலாறு. அமெரிக்காவின் பயங்கரமான கடந்த காலத்தைப் பற்றிய அறியாமையை வரலாற்றாசிரியர்கள் டபிள்யு.ஈ.பி. டுபோய்ஸ், ஜான் ஹோப் ஃப்ராங்க்ளின், ரிச்சர்டு ஹோஃப்ஸ்டேட்டர் போன்றோர் நன்றாக ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த அறியாமை தற்போதைய நிகழ்வுக்குப் பிறகு வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த நாசகாரச் சம்பவமானது வழக்கத்துக்கு மாறான ஒன்றுதான் என்று தொலைக்காட்சியில் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். வேண்டுமென்றே மறக்கும் இந்தச் செயல் – அமெரிக்க அறியாமை என்ற தொன்மத்துடன் சேர்ந்து ...

Read More »

பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அணியில் ஒரு மாற்றம்

பிரிஸ்பென் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர் வில் புகோவ்ஸ்கி காயம் காரணமாக இடம்பெறமாட்டார் என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். பிரிஸ்பேன் கபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது ...

Read More »

1953க்கு பின்னர் அமெரிக்காவில் பெண்ணொருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவின் மரணதண்டனை விதிக்கப்பட்டஒரேயொரு பெண் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. லிசா மொன்ட்கொமேரி என்ற பெண்ணிற்கே அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். இந்தியானாவில் உள்ள சிறையொன்றில் விசஊசி ஏற்றி லிசா மொன்ட்கொமேரிக்கு அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான தடையை நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். குறிப்பிட்ட பெண் சித்தசுவாதீனமற்றவர் சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டவர் என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டுவந்ததன் காரணமாக இந்த விவகாரம் அமெரிக்காவினதும் உலகினதும் கவனத்தை ஈர்த்திருந்தது. லிசா மொன்ட்கொமேரி 2014 இல் கர்ப்பணிப்பெண்ணொருவரை கொலை செய்த பின்னர் அவரது ...

Read More »

ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும்!-சம்பந்தன் எச்சரிக்கை

“இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும். இல்லையேல் இந்த நாடு சர்வதேச அரங்கில் பேராபத்தைச் சந்திக்கும்.” இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்தார். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளிலேயே இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- புதிய அரசமைப்பு உருவாகி தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும். புதிய அரசமைப்பு நிறைவேறா விட்டால் நாட்டில் அமைதி, சமாதானம், சுபீட்சம் எதுவும் ஏற்படாது. ஆனபடியால் ...

Read More »