யாழ்.திருநெல்வேலிச் சந்தையில் பொங்கல் காலத்தில் வெடி வியாபாரத்திற்காக வருகை தந்திருந்த தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் நல்லூர் பிரதேச சபையினரால் வெளியேற்றப்பட்டனர்.
நல்லூர் சந்தை பூட்டப்பட்டிருக்கும் நிலையில் சந்தையைச் சூழ பலாலி வீதி மற்றும் ஆடியபாதம் வீதிப் பகுதிகளில் பொங்கல் வியாபாரம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தென்னிலங்கையிலிருந்து வந்து யாழ்.மாவட்ட வியாபாரிகளுடன் இணைந்து சில வியாபாரிகள் வெடி மற்றும் பானை வியாபாரம் செய்து வருவதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் காவல் துறையுடன் இணைந்து நடத்திய சோதனையில் 3 நாட்களுக்குள் பீ.சி.ஆர் பரிசோதனை செய்து அதன் அறிக்கை வைத்திருக்காத அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன் அவர்கள் குறித்து பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் பிரதேச சபையால் தகவல் வழங்கப்பட்டது.
Eelamurasu Australia Online News Portal