விக்னேஸ்வரன் கட்சி தொடங்கிய போதே அவர் இரு முனை எதிர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு முனை கூட்டமைப்பு. மறுமுனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி.அவர் அண்மையில் தனது தலைமையில் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கியதை தொடர்ந்து அந்த எதிர்ப்பு மேலும் தீவிரமாகியுள்ளது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பை விடவும் மக்கள் முன்னணியின் எதிர்ப்பே விக்னேஸ்வரனைக் கூடுதலாக நிதானமிழக்க செய்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது. மக்கள் முன்னணி அவர் மீதான எதிர்ப்பை இரண்டு தளங்களில் நிகழ்த்துகிறது. ஒரு தளத்தில் அவர்கள் விக்னேஸ்வரனின் கோட்பாட்டுத் ...
Read More »செய்திமுரசு
‘ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’!
ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என்ற தலைப்பில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்ட நிரூபர்கள் சீனாவை விட்டு வெளியேற்றப்பட்டனர். சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியா, ஈரான், இத்தாலி, மலேசியா, இந்தியா என உலகின் 25க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் பலியானோரின் எண்ணிக்கை 2,663 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 77 ...
Read More »‘ரணிலை சி.ஐ.டி விசாரிக்கும்’
அடுத்த வாரத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சி.ஐ.டியினர் அழைத்து விசாரணைகளை முன்னெடுப்பார்களென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்ததோடு, தன்னைக் கொலை செய்வதற்கு முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் இணைந்து சூழ்ச்சி செய்த விவகாரம் தொடர்பில் தன்னால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென்றார்.
Read More »மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகமாட்டோம்!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரேரணையிலிருந்து மாத்திரமே இலங்கை அரசாங்கம் விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மனித உரிமைகள் பேரவைகள் பேரவையிலிருந்து முழுமையாக விலகத் தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவித்தார். சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த பிரேரணையிலிருந்து விடுபட்டாலும், மனித உரிமைகள் அமைப்பிலிருந்து விலக தீர்மானிக்கவில்லை என்றும், அந்த ஆணைக்குழுவுக்குள் ஒரு நாடு என்ற வகையில் சிறிலங்கா தொடர்ச்சியாக ...
Read More »தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம்!
ஊழல் மோசடியாளர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம் என்று ‘ மார்ச் 12 ‘ அமைப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு தேர்தலின் போது வேட்பாளரொருவருக்கான செலவுக்கான வரையறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்திப்பு தொடர்பில் மார்ச் 12 அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது : பொதுத் தேர்தலில் ஊழல் மோசடிகளற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக பொறுத்தமானவர்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு ; ‘ மார்ச் 12 ‘ அமைப்பு அனைத்து ...
Read More »டெல்லியில் டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தை!
டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் உயர்மட்டக் குழுவினரும் வந்துள்ளனர். இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை டிரம்ப் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், ...
Read More »தெற்காசிய பிராந்திய ஒருமைப்பாடு எதில் தங்கியிருக்கிறது?
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (சார்க்) மிகவும் உயர்ந்த மட்டங்களில் முழுமையாக செயற்படுகின்ற ஒரு அமைப்பாக மாறுவதிலேயே பொருளாதார ரீதியிலும் பாதுகாப்பு விவகாரங்களிலும் பிராந்திய ஒருமைப்பாடு வெற்றிகரமானதாக அமைய முடியும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தென்னிந்திய நகரமான பெங்களுருவில் ஞாயிறன்று தெரிவித்தார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்ததையடுத்து 2017 காத்மண்டு சார்க் உச்சிமாநாடு ஒத்தி வைக்கப்பட்டமை இந்தப் பிராந்திய அiமைப்பை ஒரு ஸ்தம்பித நிலைக்கு கொண்டு வந்து விட்டது என்று கூறிய விக்கிரமசிங்க பிராந்திய நாடுகள் கேந்திர முக்கியத்துவ ரீதியிலும் ...
Read More »கைதுசெய்யப்பட்ட 41 இளைஞர்கள் விடுவிப்பு!
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட 41 இளைஞர்களும் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என சுன்னாகம் காவல் துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்றிரவு 10 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 41 இளைஞர்களும் இன்று அதிகாலை ஒரு மணியளவில் விடுவிக்கப்பட்டனர். இராணுவத்துக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து 41 பேரும் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் நீதிமன்ற வழக்குகள் உள்ளனவா? பிடியாணை உள்ளனவா? என்பது பெரும் குற்றப் பிரிவு ...
Read More »பகிடிவதை விசாரணை அறிக்கை!
யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களால் பகிடிவதை புரியப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் கண்டறியப்பட்ட விடயங்கள் அறிக்கை ஒன்றின் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையின் முழு வடிவம் வருமாறு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களால் பகிடிவதை புரியப்பட்டது என்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கும் விளக்கம் பின்வருமாறு; யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட சிரேஷ்ட மாணவர்களால் அப்பீட ...
Read More »சீனாவுக்கு சென்றோருக்கு நியூஸிலாந்துக்கு வரத் தடை!
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நியூஸிலாந்து தனது நாட்டுக்கான பயணக் கட்டுப்பாடுகளை மேலும் எட்டு நாட்களுக்கு நீடித்து வைத்துள்ளது. அதன்படி கடந்த 14 நாட்களில் சீனாவின் பிரதான நிலப்பகுதிகளுக்கு சென்ற அனைத்து வெளிநாட்டினக்கும் நாட்டுக்குள் உள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் சீனாவுக்கு பயணித்த நியூஸிலாந்துக் பிரஜைகளுக்கு நாட்டுக்கு வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் நாட்டுக்கு வரும் அவர்களை இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தி வைத்திய பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிககை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அந் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal