ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரேரணையிலிருந்து மாத்திரமே இலங்கை அரசாங்கம் விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மனித உரிமைகள் பேரவைகள் பேரவையிலிருந்து முழுமையாக விலகத் தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த பிரேரணையிலிருந்து விடுபட்டாலும், மனித உரிமைகள் அமைப்பிலிருந்து விலக தீர்மானிக்கவில்லை என்றும், அந்த ஆணைக்குழுவுக்குள் ஒரு நாடு என்ற வகையில் சிறிலங்கா தொடர்ச்சியாக நீடிக்கும் என்றார்.
அத்தோடு, அந்த அமைப்பிலிருந்து சிறிலங்காவுக்கு அவசியமான விவகாரங்களின் போது இணைந்து செயற்படுவதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றார்.
Eelamurasu Australia Online News Portal