ஒரு தனிப்பட்ட உரையாடலின்போது ஒரு ராஜதந்திரி என்னிடம் சொன்னார் உங்களுடைய நாட்டில் மிக அடிமட்டம் வரையிலும் இறங்கி வேலை செய்யும் ஒரு சுகாதாரக் கட்டமைப்பு உண்டு.வீடுவீடாக வந்து நுளம்புப் பெருக்கத்திற்கான வாய்ப்புக்கள் உண்டா இல்லையா என்பதனை நுணுக்கமாக ஆராய்கிறார்கள்.இது ஒரு முன்னேற்றகரமான சுகாதாரச் செய்முறை என்று. உண்மைதான் இலங்கைத்தீவின் சுகாதார வைத்திய அதிகாரி (MOH)கட்டமைப்பு என்பது தனித்தன்மை மிக்கதாக வர்ணிக்கப்படுகிறது.மிகக் குறைந்த செலவில் மிகக் கூடுதலான வினைத்திறனோடு செயற்படும் ஒரு பொதுச் சுகாதார கட்டமைப்பாக அது போற்றப்படுகிறது.பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத்துறையில் பரவிய கொழுக்கிப் ...
Read More »செய்திமுரசு
போரால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு உலக நாடுகள் உதவுமா?
ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அங்கிருந்து வெளியேறத் தவித்துக்கொண்டிருக் கிறார்கள். சில நாடுகள் ஆப்கானியர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளபோதிலும், சில நாடுகள் தங்கள் முடிவைத் தள்ளிப்போடவும் அகதிகளுக்கான தங்களது திட்டங்களை விஸ்தரிக்க விரும்பாமலும் உள்ளன. ரஷ்யாவும் ஆஸ்திரியாவும் ஆப்கன் அகதிகளை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன. இதற்கிடையில், ஆப்கன் குடிமக்கள், காபூல் சர்வதேச விமான நிலையத்துக்கான சாலைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். எனினும், நாட்டைவிட்டு வெளியேறும் வாய்ப்பு கிடைக்குமா என்ற கவலையோடு இன்னமும் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் விமான ...
Read More »யாழில் 39 வயது பெண் உட்பட இருவர் கொரோனாவால் பலி
யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை மேலும் இருவர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்தனர். இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 220ஆக உயர்வடைந் துள்ளது.
Read More »மட்டக்களப்பில் கடந்த ஒரு வாரத்தில் 36 பேர் உயிரிழப்பு:மருத்துவர் மயூரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வால் 36 பேர் உயிரிழந்துள்ளதுடன்,மாவட்டத்தில் இதுவரை 193 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, கடந்த 24 மணித்தியாலமான நேற்று வியாழக் கிழமை காலை 10 மணி வரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மாவட்டத்தில் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு ...
Read More »பாட புத்தகங்களில் அதிபர் ஜின்பிங்கின் அரசியல் சித்தாந்தம் அறிமுகம்
புதிய பாடத்திட்டத்தின்படி, தொடக்கப்பள்ளிகள், சீன கம்யூனிஸ்டு கட்சி மற்றும் சோசலிசம் மீதான அன்பை வளர்ப்பதில் கவனம் செலுத்தும். சீனாவின் அதிபர் ஜின்பிங் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் நிறுவனர் மாவோ சேதுங்கிற்கு பிறகு மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக அறியப்படுகிறார். தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவியில் நீடிக்கும் ஜின்பிங் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் சமீப ஆண்டுகளாக ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியை மேலும் வலுப்படுத்தவும், எதிர்காலத்திலும் இந்தக் கட்சியின் அதிகாரத்தை நிலை நாட்டவும் பல்வேறு நடவடிக்கைகளை ...
Read More »ஆஸ்ரேலியாவில் முதல் முதலில் வீதிக்கு தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது
ஆஸ்ரேலியா மெல்பேர்ணில் வீதி ஒன்றுக்கு தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. குறித்த வீதி புகழ்பெற்ற கவிஞரான கவிக்கோ ரகுமானை மதிப்பளிக்கும் வகையில் கவிக்கோ வீதி (Kavikko Street) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வீதி மெல்ட்டன் (Melton) எனும் பகுதியிலுள்ள குருன்ஜங் (Kurunjang) வட்டாரத்தில் அமைந்துள்ளது. குறித்த வீதிக்குத் தமிழ் பெயர் வருவவதற்கு அப்பகுதியில் எம்.ஏ.முஸ்தபா என்பராவார். இப்பகுதியில் பெருமளவு நிலங்கள் முஸ்தபாவுக்குச் சொந்தமானவை. அதனால் அவர் அப்பகுதியில் அமைந்த வீதிக்கு தமிழ் பெயர் ஒன்றை வைப்பதற்குத் தீர்மானித்து அரசாங்கத்திடம் விண்ணப்பித்திருந்தார். அதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் ...
Read More »ஆஸ்திரேலியாவில் ஆப்கானியர்கள் நிரந்தரமாக வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள்
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்து தற்போது தற்காலிக பாதுகாப்பு விசாக்களில் உள்ள எவருக்கும் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமை வழங்கப்படாது என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்திருக்கிறார். “இந்த விவகாரத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு கொள்கைகள் எதுவும் மாறவில்லை என்ற தெளிவான செய்தியை ஆட்கடத்தல்காரர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்,” என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் குறிப்பிட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய அரசு வட்டார தகவல்கள் படி, தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் கீழ் 4,500 ஆப்கானியர்கள் ஆஸ்திரேலியாவில் தற்போது வசித்து வருகின்றனர்.
Read More »ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா, இல்லையா?
தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா, இல்லையா என்பது குறித்து வெள்ளிக்கிழமை(27) அறிக்கை வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலணியின் கூட்டத்திற்குப் பிறகு, 30 ஆம் திகதிக்குப் பிறகு பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்கலாமா வேண்டாமா என்பது முடிவு செய்யப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார். பொதுமக்கள் சுகாதார நெறிமுறைகளை அதுபோல் சுகாதார பழக்கவழக்கங்களை 100 வீதம் பின்பற்றவில்லை எனவும் அவர் தெரிவித்தார். மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் புதிய நோயாளிகள் தோன்றுவதைத் தடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அசேல ...
Read More »பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக குழு
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்கான குழுவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியமித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் அவர்களின் விடுதலை பிணை வழங்குவது மற்றும் விசாரணைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கும் ஆலோசனை குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். ஆலோசனை குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி அசோக்க சில்வா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்,
Read More »மங்கள சமரவீர காலமானார்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணமடைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 65 ஆகும்.
Read More »
Eelamurasu Australia Online News Portal