செய்திமுரசு

ஹைட்ரோகார்பன் அகழ்வால் அழிந்த அமெரிக்க நிலப்பரப்பு!

ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியின்போது அமெரிக்காவில் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நாசமானதாக வெளியான தகவலின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வோம். ஹைட்ரோகார்பன் எரிவாயு பாதிப்பு பற்றி பல்வேறு விவரங்கள் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்த வரிசையில் அமெரிக்காவில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியில் சுமார் 6,75,000 ஏக்கர் நிலப்பரப்பு முற்றிலும் நாசமாகி, மக்கள் வாழ முடியாத பகுதியானது என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அவ்வாறு பரவிய தகவலில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் அருகில் உள்ள பெலாக்வா என்னும் பகுதியின்  ...

Read More »

ரிஷாத், அசாத் சாலிக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

நீதித்­து­றைக்கு அவ­ம­திப்­பினை ஏற்­ப­டுத்தும் வித­மாக கருத்­து­ரைத்த மேல்­மா­காண சபை ஆளுநர் அசாத் சாலி மற்றும்   அமைச்சர்  ரிஷாத் பதி­யூதீன் உள்­ளிட்­ட­வர்கள் தொடர்பில் நீதித்­து­றை­சார்ந்த  அமைச்சர் ஏன் இது­வ­ரையில் எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை என்று  எதி­ர­ணியின்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுசில் பிரே­ம­ஜ­யந்த  கேள்­வி­யெ­ழுப்­பினார்.   இன்று சட்­ட­வாட்சிக் கோட்­பாடு  நடை­மு­றையில்  செயற்­ப­டு­கின்­றதா என்ற  சந்­தேகம் காணப்­ப­டு­கின்­றது.  அர­சாங்­கத்தின்   இய­லா­மை­யினை   மறைப்­ப­தற்கு     சட்­டத்தின் மீது    பழி  சுமத்­தப்­ப­டு­கின்­றது    என்றும் அவர் குறிப்­பிட்டார். எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில்  நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் ...

Read More »

பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்! – கனே­டிய பிர­தமர்

இலங்­கையில் அர்த்­த­முள்ள வகையில் பொறுப்­புக்­கூறல்  பொறி­முறை உரு­வாக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளினால் நம்­பக்­கூ­டிய வகை­யி­லான பொறுப்புக் கூறல் பொறி­மு­றைமை ஒன்றை இலங்கை அர­சாங்கம் அமுல்­ப­டுத்த வேண்டும்  என்று  கனே­டிய பிர­தமர் ஜஸ்ரின் ட்ரூடோ வலி­யு­றுத்­தி­யுள்ளார்.   இலங்­கையில் யுத்தம் நிறை­வ­டைந்து பத்து ஆண்­டுகள் பூர்த்­தி­யா­வ­தனை முன்­னிட்டு வெளி­யிட்­டுள்ள காணொளி ஒன்­றி­லேயே கனே­டிய பிர­தமர் ஜஸ்ரின் ட்ரூடோ இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 26 ஆண்­டு­க­ளாக நீடித்து வந்த யுத்தம் பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக முடி­வுக்கு வந்­தி­ருந்­தது. முள்­ளி­வாய்க்­காலில் இறு­திக்­கட்ட யுத்­தத்தின் போதும் அதற்கு முன்­னரும் ...

Read More »

உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு!

இங்கிலாந்தில் நடக்கும் 12-வது உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்பிருப்பதாக கவுதம் காம்பிர் கணித்துள்ளார். 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. ரவுண்டு ராபின் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது. இந்த நிலையில் உலகக்கோப்பையை வெல்ல ...

Read More »

அச்சுறுத்தலில் பிராந்திய பாதுகாப்பு !

மழைவிட்டும் தூவானம் நிற்கவில்லை என்பது போல் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நாளுக்கு நாள் அதன் பிரதிபலிப்புக்கள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. தற்கொலை தாக்குதல்களை அடுத்து பாதுகாப்புத்துறையினரின் உடனடிச் செயற்பாடுகள் மூலம் தாக்குதல் சம்பவங்கள் அடுத்து நிகழாத வகையில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. எனினும் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் சம்பந்தமாக பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது அதிர்ச்சி விடயங்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அந்த விடயங்கள் பரஸ்பரம் உள்நாட்டிலும் பிராந்தியத்திலும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனாலும் தீவிரவாதத்திற்கு எதிராக உள்நாட்டில் நடைபெறும் விசாரணை நடவடிக்கைகள் ...

Read More »

வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள்!

உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம். * உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல, தப்பித்தவறி கூட அதே தவறை இன்னொருவருக்கு செய்துவிடக்கூடாது. * யாரையும் இளக்காரமாக பார்க்காதீர்கள். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும். * நமக்கு பிடிக்காதவாரகவே இருந்தாலும் அவரின் சிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு செல்லுங்கள். * மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்புக் ...

Read More »

ஈஸ்டர் தாக்­குதல்-உயிரிழந்தோருக்கு 119.3 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈடு!

ஈஸ்டர் தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத குண்டுத்தாக்­கு­த­லுக்கு இலக்­கான கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்­டிய புனித செபஸ்­தியார் தேவா­லயம் மற்றும் மட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­லயம் ஆகி­ய­வற்றில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு அர­சாங்கம் இது­வரை 119.3 மில்­லியன் ரூபாவை நஷ்­ட­ஈ­டாக வழங்­கி­யுள்­ளது.   நீர்­கொ­ழும்பு, கட்­டு­வாப்­பிட்­டிய தேவா­ல­யத்தில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு 86மில்­லியன் ரூபாவும் கொழும்பு கொச்­சிக்­கடை தேவா­ல­யத்தில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு 12.1மில்­லியன் ரூபாவும் மட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­ல­யத்­துக்கு 21.2மில்­லியன் ரூபாவும் நஷ்­ட­ஈ­டாக வழங்­கப்­பட்­டுள்­ளது. கொழும்பு சங்­ரில்லா ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்­பெரி ஹோட்டல், தெஹி­வளை ட்ரொபிக்கல் இன் ...

Read More »

என் அம்மா இறந்தபோது கொடிய மன வலியை அனுபவித்தேன் !

என் அம்மா டயானா இறந்தபோது பிற எந்த வலியை விடவும் கொடிய மன வலியை அனுபவித்தேன் என இளவரசர் வில்லியம் மனம் திறந்து பேசி உள்ளார். இங்கிலாந்து இளவரசி டயானா, தனது 36-வது வயதில் 1997-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 31-ந்திகதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஒட்டு மொத்த மனித குலத்தின் அன்பை ஒருசேரப் பெற்றிருந்த அவரது மரணம், உலக வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைந்தது. இளவரசர் சார்லஸ்சை பிரிந்து வாழ்ந்த நிலையில் அவர் இறந்தது பல்வேறு சர்ச்சைகளை ...

Read More »

ஆஸ்திரேலியாவில் ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி!

ஆஸ்திரேலியா தேர்தலில் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆளுங்கட்சி மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தேசிய கூட்டணியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஏற்கனவே பிரதமராக இருந்து வந்த மால்கம் டர்ன்புல் கட்சியினால் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 9 மாதங்களாக ஸ்காட் மோரிசன் பிரதமராக இருந்து வருகிறார். இந்த நிலையில் 151 இடங்களைக் கொண்ட அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு மே மாதம் 18-ந்தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் தேர்தல்!

ஆஸ்திரேலியாவில் நடந்த பொதுத்தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. எதிர்க்கட்சி ஆட்சியைப் பிடிக்கக்கூடும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தேசிய கூட்டணியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஏற்கனவே பிரதமராக இருந்து வந்த மால்கம் டர்ன்புல் கட்சியினால் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 9 மாதங்களாக ஸ்காட் மோரிசன் பிரதமராக இருந்து வருகிறார். இந்த நிலையில் 151 இடங்களைக் கொண்ட அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு மே மாதம் 18-ந்தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ...

Read More »