செய்திமுரசு

தவறுதலாக இடம்பெற்ற சூட்டு சம்பவத்தில் நடிகர் உயிரிழந்துள்ளார்

அவுஸ்ரேலியாவின்  பிரிஸ்பேன் நகரத்தில் நடிகர் ஒருவர் இசை வீடியோ படப்பிடிப்பின் போது தவறுதலாக இடம்பெற்ற சூட்டு சம்பவத்தில்  உயிரிழந்துள்ளார். 28 வயதான Johann Ofner என்ற குறித்த  நடிகர் அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேர்ண் நகரத்தில் ஈகிள் வீதியில் உள்ள      Brooklyn Standard bar   என்ற மதுபானசாலையில் இடம்பெற்ற படப்பிடிப்பின் போது மார்பு பகுதியில்  ஏற்பட்ட காயம் காரணமாக  உயிரிழந்தார்     குயின்ஸ்லாந்து  காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். நேற்று  உ ள்ளுர் நேரப்படி பிற்பகல் 2மணிக்கு இடம்பெற்ற படப்பிடிப்பின் போது பல துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன என  நகர ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – ஆன்டி முர்ரே, கெர்பர் அதிர்ச்சி தோல்வி

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டங்களில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே, வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), 50-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரர் மிஸ்ச்சா ஸ்வேரேவை சந்தித்தார். விம்பிள்டன் மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான ஆன்டி ...

Read More »

குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் சிறீலங்கா கையெழுத்திடவேண்டும்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாதொழிக்குமாறும், அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் சிறீலங்கா கையெழுத்திடவேண்டுமெனவும் ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மென்டஸ் வலியுறுத்தியுள்ளார். சித்திரவதைகள் மற்றும் ஏனைய கொடூரமான, மனிதமாபிமானமற்ற, அல்லது இழிவுபடுத்தும் நடவடிக்கைகள், தண்டனைகள் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளரான, ஜுவான் மென்டஸ் சிறீலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் நாள் தொடக்கம் மே மாதம் 7ஆம் நாள் வரை சிறீலங்காவின் பல பகுதிகளுக்கு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். ...

Read More »

மெல்போர்ன் – பாதசாரிகளை மோதிய கார்!

அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகர மத்திய வட்டாரத்தில்,கடந்த 20ஆம் திகதி  பாதசாரிகளைக் கார் ஒன்று மோதியதில் மூவர் இறந்துள்ளனர். பலர் காயமடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

Read More »

ஆச்சரியமுட்டும் அவுஸ்ரேலியா!

· அவுஸ்ரேலியா உலகில் ஆறாவது பெரிய நாடு. ·அவுஸ்ரேலியாவில் உள்ள ஆடுகளின் எண்ணிக்கை சுமார் 150 மில்லியன். ஆனால் மக்கள்தொகையோ சுமார் 23 மில்லியன் மட்டுமே. · அவுஸ்ரேலியாவில் 45,000 ஆண்டுக்கு முன்பிருந்து மனிதர்கள் வாழ்ந்துவருவதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. · சுமார் 750 ஊர்வன வகைகள் அவுஸ்ரேலியாவில் மட்டுமே உள்ளன. · பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய இரண்டாவது நாடு அவுஸ்ரேலியா (முதல் நாடு நியூஸிலந்து) · உலகிலேயே ஆக அதிகமாக சூதாட்டத்துக்குச் செலவிடுபவர்களில் ஆஸ்திரேலியர்களும் அடங்குவர். · உலகின் ஆக நீளமான வேலி ...

Read More »

MH 370 தேடல் கப்பல் அவுஸ்ரேலியா திரும்புகிறது!

மலேசியா எர்லைண்ஸ் நிறுவனத்தின் காணாமல்போன MH 370 விமானத்தின் தேடல் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களில் ஒன்று மீண்டும் அவுஸ்ரேலியா திரும்புகிறது. Fugro-Equator எனும் அந்தக் கப்பலை வரவேற்க அவுஸ்ரேலிய, மலேசியப் போக்குவரத்து அமைச்சர்கள் Fremantle நகரத் துரைமுகத்துக்குச் செல்ல தயாராக இருக்கின்றனர். இந்தியப் பெருங்கடலின் சுமார் இருபதாயிரம் சதுரகிலோமீட்டர் பரப்பளவில் தேடல் பணி நடந்தது. கடந்த வாரம் மாயமாகக் காணாமற்போன விமானத்துக்கான தேடல் பணிகள் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. எனினும் விமானம் விழுந்த இடம் குறித்த புதிய ஆதாரங்கள் கிடைத்தால் தேடல் பணி மீண்டும் ...

Read More »

அரசியலிலிருந்து ஒதுங்குமாறு மகிந்தவிற்கு அழுத்தம்!

சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவை அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு இரண்டு பிரதான நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாடுகளின் தூதரகங்களினால் இவ்வழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், அயல் நாடுகளின் புலனாய்வாளர்களும் இந்த அழுத்தத்தைப் பிரயோகித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் கூட்டு எதிர்க் கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களைச் சந்தித்து தனித்தனியாக இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாகவும் சிங்கள நாளிதள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு நாளுக்குநாள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், அவரது கௌரவத்தைக் காக்கும் ...

Read More »

அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் சிட்னியில் இன்று நடக்கிறது. அவுஸ்ரேலியா -பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டியில் ஆடாத பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலி அணிக்கு திரும்புகிறார். 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் அவுஸ்ரேலிய அணி இந்த போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றி விடும். எனவே அந்த அணியினர் தொடரை கைப்பற்ற ...

Read More »

உலகம் முழுவதும் டிரம்புக்கு எதிராக பெண்கள் போராட்டம்

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்புக்கு எதிராக உலகம் முழுவதும் பெண்கள் போராட்டம் நடத்தினர். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்பதற்கு முன்பே எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன. டிரம்ப் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து இருந்ததாக தேர்தல் பிரசாரத்தின் போது கூறப்பட்டது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் அவர் பதவி ஏற்ற பிறகு அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் நேற்று பெண்கள் போராட்டம் நடத்தினர். டிரம்ப் ஆட்சியில் பெண்களின் உரிமைகளுக்கு ...

Read More »

எழுக தமிழ் பேரணி! கிழக்கு மாகாணத்தில்! பெப்ரவரி 10ஆம் நாள்!

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 28ஆம் நாள் நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணி நிகழ்வானது பெப்ரவரி மாதம் 10ஆம் நாளுக்கு பிற்போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளையும் அன்றாட ஒடுக்குமுறைகளையும் மக்கள்ஒன்றுதிரண்டு வெளிப்படுத்தும் ஜனநாயக எழுச்சியான எழுகதமிழ் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில்ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தினத்தில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் எதிர்வரும் மாசி மாதம்முழுநிலவு நாளாகிய 10 ம் திகதி, வெள்ளிக்கிழமைக்கு  (10/02/2017) பிற்போடப்பட்டிருக்கின்றது என்பதை தாழ்மையுடன் அறியத்தருகின்றோம். அரசாங்கமானது ...

Read More »