· அவுஸ்ரேலியா உலகில் ஆறாவது பெரிய நாடு.
·அவுஸ்ரேலியாவில் உள்ள ஆடுகளின் எண்ணிக்கை சுமார் 150 மில்லியன். ஆனால் மக்கள்தொகையோ சுமார் 23 மில்லியன் மட்டுமே.
· அவுஸ்ரேலியாவில் 45,000 ஆண்டுக்கு முன்பிருந்து மனிதர்கள் வாழ்ந்துவருவதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
· சுமார் 750 ஊர்வன வகைகள் அவுஸ்ரேலியாவில் மட்டுமே உள்ளன.
· பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய இரண்டாவது நாடு அவுஸ்ரேலியா (முதல் நாடு நியூஸிலந்து)
· உலகிலேயே ஆக அதிகமாக சூதாட்டத்துக்குச் செலவிடுபவர்களில் ஆஸ்திரேலியர்களும் அடங்குவர்.
· உலகின் ஆக நீளமான வேலி (சுமார் 5,600 கிலோமீட்டர்) அவுஸ்ரேலியாவில் உள்ளது.
· கங்காருக்களும், எமூ பறவையும் பின்பக்கமாக நடக்க முடியாதவை. அதனால் அவை அவுஸ்ரேலிய அரசாங்கச் சின்னத்தில் இடம்பெற்றுள்ளன.
· அவுஸ்ரேலியாவில் 10,000க்கும் அதிகமான கடற்கரைகள் உள்ளன.
· அவுஸ்ரேலியாவில் Mt Disappointment என்பது ஒரு மலையின் பெயர்.
· “Selfie” எனும் சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் அவுஸ்ரேலியர்கள் என்று கூறப்படுகிறது.