நியூயார்க்கில் உள்ள ஐபிஎம் தாம்சன் வாட்சன் ஆய்வு மையத்தில் பணியாற்றும் டாக்டர் ராஜிவ் ஜோஷி என்பவருக்கு ஆண்டின் சிறந்த கண்டுப்பிடிப்பாளர் என்ற மதிப்பு மிக்க விருது வழங்கப்பட்டுள்ளது. அதாவது டாக்டர் ஜோஷியின் மின்னணு தொழிற்துறையின் முன்னேற்றத்துக்கு உகந்த செயல்பாட்டுக்காகவும் செயற்கை நுண்ணறிவுத் திறன்களுக்காகவும் ஜோஷிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சுமார் 250 காப்புரிமைக்குட்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார் ஜோஷி. இதனால் நியூயார்க்கின் மதிப்பு மிக்க அறிவுசார் சொத்துரிமைச் சட்டக் கூட்டமைப்பு இவருக்கு மெய்நிகர் விருது வழங்கும் விழாவில் இந்த விருதை வழங்கி கவுரவித்தது. டாக்டர் ...
Read More »செய்திமுரசு
நிலநடுக்கத்திலும் அசராமல் நேர்காணலை முடித்த நியூசிலாந்து பிரதமர்
நியூசிலாந்தில் நிலநடுக்கம் குறுக்கிட்டபோதிலும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அசராமல் தனது தொலைக்காட்சி நேர்காணலை நிறைவு செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் இன்று பாராளுமன்றத்தில் இருந்தபடி, தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்று பேசினார். அப்போது திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அவருக்கு பின்னால் இருந்த திரை மற்றும் பொருட்கள் அதிர்ந்தன. எனினும் ஜெசிந்தா பதற்றப்படாமல் தொடர்ந்து தனது நேர்காணலை தொடர்ந்தார். தனக்கு பின்னால் இருக்கும் பொருட்கள் அசைவதைப் பார்த்தும் அச்சம் இன்றி, முகத்தில் புன்னகையுடன் பேசிய அவர், ‘இங்கு நாம் லேசான நிலநடுக்கத்தை ...
Read More »ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் வகையில் 1,905 பேருக்கு பயண விலக்கு
கொரோனா காரணமாக ஆஸ்திரேலிய அரசு விதித்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டினால், கடந்த மூன்று மாத காலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள், ஆஸ்திரேலியா விசா பெற்றவர்கள் வெளிநாடுகளில் சிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இந்த காலத்தில் 1,905 பேர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் வகையில் பயண விலக்கு வழங்கப்பட்டுள்ளது. 253 பேர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய எல்லைப்படையின் கணக்குப்படி, இதில் 801 பேருக்கு கருணையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், அந்த அடிப்படையில் விண்ணப்பித்த 195 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, ஆஸ்திரேலிய செனட் விசாரணையில் பேசியிருந்த ...
Read More »யாழில் தாக்குதலுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பலை சேர்ந்த மூவர் கூரிய ஆயுதங்களுடன் கைது
வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் காவல் துறையினரிடம் தெரிவித்தனர். உடுவில் அம்பலவாணர் வீதி, காலி கோவிலடியில் வைத்து இன்று ( 25) திங்கட்கிழமை மாலை மூவரும் கைது செய்யப்பட்டடதாக பொலிஸார் கூறினர். சம்பந்தப்பட்ட இடத்தில் பெருமளவு கூரிய ஆயுதங்களுடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிலர் நடமாடுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சுன்னாகம் காவல் துறை நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான அணியினரால் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ...
Read More »வடக்கு ஆளுநராக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க?
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நியமிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அந்த பதவியில் உள்ள திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தேர்தல் காலம் வரைதான் அவர் பதவியில் இருப்பார் என்றும், தேர்தலின் பின்னர் அவர் சுயவிருப்பின் பெயரில் ஓய்வு பெறவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அண்மையில் திருமதி சாள்ஸ் தனக்கு மூன்று மாத ஓய்வு வேண்டும் என்று கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Read More »ஒரு நிகழ்வு-இரு அளவுகோல்கள்
இலங்கையில் பெரும்பான்மையாகவுள்ள பௌத்தர்கள் அங்குள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களிடம் அரக்கத்தனமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்` ;—முள்ளிவாய்க்கால் நினைவு உரை 2020 இல்—ஹோஸே மனுவேல் ராமோஸ் ஹோர்டா—1996 ஆம் ஆண்டுக்கான நோபல் சமாதானப் பரிசு பெற்றவர். கால்பந்து உட்பட கோல்கள் அடித்து விளையாடும் ஆட்டங்கள் தொடர்பில் ஒரு சொலவடை உண்டு ;நமக்கு ஒத்துவரவில்லை என்றால் கோல் போஸ்ட்டுகளை தள்ளிவை என்பதாகும். அதாவது தமது தேவைக்கேற்ற வகையில் அளவுகோலை மாற்றிக் கொள்வது. அடுத்தவர்கள் எதையாவது முறையாகச் செய்ய முன்வந்தால், அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அவர்கள் ...
Read More »கிழக்கில் தொல்லியல் ஆய்வு… சிங்கள பௌத்த நாடாக மாற்றத் திட்டம்!
கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் என்ற போர்வையில் கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்களின் காணிகளை முற்று முழுதாக அபகரித்து இந்த இலங்கைத் தீவை சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி விசேட செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளார். எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால் தமிழர்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார். அவர் மட்டக்களப்பிலுள்ள அவரது வீட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்தார். கிழக்கு ...
Read More »யாழில் காவல் துறை உப பரிசோதகர் மீது வாள் வெட்டு
ஊரடங்கு வேளையில் இரண்டு தரப்புகளுக்கு இடையே மோதல் இடம்பெறுவதை அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காங்கேசன்துறை உபகாவல் துறை பரிசோதகர் வாள் வெட்டுக்கு இலக்காகி கையில் வெட்டுக் காயங்களுடன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றது. சங்கானையைச் சேர்ந்த உப காவல் துறை பரிசோதகரே (வயது 35) வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார். கீரிமலைப் பகுதியில் இரண்டு தரப்புகளுக்கு இடையே மோதல் இடம்பெறுவதாக காங்கேசன்துறை காவல் துறைக்கு அறிவிக்கப்பட்டது. அது தொடர்பில் விசாரணை நடத்த உப ...
Read More »யாழ்ப்பாணத்தில் இராணுவம் மீது தாக்குதல் – மூவர் கைது!
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்கள் கோப்பாய் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் காவலரணில் நின்ற இராணுவத்தினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் என்றும் கோப்பாய் காவல் துறையினர் தெரிவித்தனர். அவர்கள் கோப்பாய், அனலைதீவு மற்றும் சங்கானைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். மூவர் மீதும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், யாழ்ப்பாணம் ...
Read More »சமூக விலகலைக் கடைப்பிடித்து வளைகுடா நாடுகளில் இன்று ரமலான்
புனித ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நோன்புக் காலம் முடிந்து வானில் பிறை காணப்பட்டதையடுத்து வளைகுடா நாடுகள் அனைத்திலும் இன்று புனித ரமலான் பண்டிகை தீவிரமான சமூக விலகலைக் கடைப்பிடித்துக் கொண்டாடப்படுகிறது. வளைகுடா நாடுகளில் இருக்கும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள், இந்தியர்கள் அனைவரும் உற்சாகமாக ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் திகதி முதல் ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில் நோன்புக் காலம் முடிந்து நேற்று பிறை தென்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதாக வளைகுடா நாடுகளின் ஆட்சியாளர்கள் மக்களுக்கு அறிவித்து, வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ...
Read More »