யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்கள் கோப்பாய் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் காவலரணில் நின்ற இராணுவத்தினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் என்றும் கோப்பாய் காவல் துறையினர் தெரிவித்தனர்.
அவர்கள் கோப்பாய், அனலைதீவு மற்றும் சங்கானைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். மூவர் மீதும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.
Eelamurasu Australia Online News Portal