அடுத்தது தேர்தல்தான் என்று, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளை ஆரம்பித்திருக்கின்றன. அது வசை பாடல் காதையாகவே இருக்கிறது. நாம் என்ன திட்டம் வைத்திருக்கிறோம், எதைச் செய்வோம், எமது கட்சி வெற்றி பெற்றால், ஆட்சியமைத்தால் எதையெதை எல்லாம் மக்கள் அடைந்து கொள்வார்கள் என்று சொல்வதற்கும், விளக்கமளிப்பதற்கும் அப்பால், மற்றைய கட்சிகளைப் பற்றி விமர்சிப்பதையே தொழிலாகப் பல கட்சிகள் கொண்டிருக்கின்றன. தாம் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்திலும் இவ்வாறான வசைபாடல்கள் நடைபெறுவது வழமைதான். நாட்டின் அடிப்படைப் பிரச்சினையான இனநெருக்கடிக்கான நிரந்தரத் தீர்வு தேவை என்றிருக்கும் நிலையில், இலங்கையின் அரசியலுக்கு ...
Read More »செய்திமுரசு
சஹ்ரானின் உத்தரவின் கீழ் புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்டது!
மாவனெல்லை நகரை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் அடித்து சேதமாக்கப்பட்ட சம்பவங்களானது, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமின் உத்தரவுக்கு அமையவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. நேற்று மாவனெல்லை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தது. இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு நேற்று முற்பகல் மாவனெல்லை நீதிவான் உப்புல் ராஜகருணா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே , குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பிரதான விசாரணை அதிகாரியான சி.ஐ.டி.யின் விஷேட ...
Read More »எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்க முடியாது!
ஓமன் வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம், என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஓமன் வளைகுடா பகுதியில் நார்வே மற்றும் சிங்கப்பூருக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது மர்மமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த மே மாதம் சவுதிக்கு சொந்தமான 2 எண்ணெய் கப்பல்கள் உட்பட நான்கு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் உலகளவில் எண்ணெய் விலை கிடுகிடுவென ...
Read More »சஹ்ரான் மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டார்! – ஹிஹ்புல்லாஹ்
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது நான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தேன். அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டிருந் தார் என்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தார். ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு அழைக்கபட்ட ஹிஸ்புல்லாஹ் இதனைக் குறிப்பிட்டார், அவரது சாட்சியத்தின் முழு விபரம் வருமாறு: கேள்வி:- ...
Read More »தற்கொலைதாரியின் சடலத்தை புதைக்க முடியாமல் திண்டாட்டம்!
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட தற்கொலையாளி மொஹமட் நாசார் மொஹமட் ஆசாத்தின் சடலத்தை தமது பிரதேசங்களில் புதைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணமாக காவல் துறை சடலத்தை அடக்கம் செய்ய முடியாது நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். கடந்த 21 ஆம் திகதி இடம் பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதியான காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் நாசார் மொஹமட் ஆசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்கள் மரபணு பரிசோதனையில் அவருடையது என உறுதிப்படுத்தப்பட்டது இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ...
Read More »டிரோன்களை செயலிழக்கச் செய்யும் புதிய நவீன ரக துப்பாக்கி !
ஆஸ்திரேலியாவில் டிரோன்களை செயலிழக்கச் செய்யும் புதிய நவீன ரக துப்பாக்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உரிய அனுமதியின்றி பறக்கவிடப்படும் டிரோன்களை செயலிழக்கச் செய்யும் வகையில் ஆஸ்திரேலிய இராணுவம் புதிய துப்பாக்கியினை உருவாக்கியுள்ளது. இந்த துப்பாக்கி குண்டுகளுக்கு பதில் கதிர் வீச்சுகளை பயன்படுத்துகிறது. தடை செய்யப்பட்ட இடங்களை படம்பிடிப்பது, சிறிய ரக குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்துவது என டிரோன்களின் பயன்பாடு தவறான வழிக்கு மாற்றப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தவே இந்த கதிர்வீச்சு துப்பாக்கிகள் ஆஸ்திரேலிய இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி மூலம் 10 ஆயிரம் அடி தூரத்தில் ...
Read More »மெல்பேர்னில் வீட்டு முன்பணத்தில் மோசடி மோசடி செய்த தம்பதி!
மெல்பேர்ன் வீடு கட்டுவதற்காக வாடிக்கையாளர்கள் செலுத்திய முன்பணத்தில் மோசடி செய்த தம்பதியினருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. இவர்கள் இருவரும் 2015 ஆம் ஆண்டு முதல் இந்த மோசடிக்குற்றத்தை மேற்கொண்டுவந்துள்ளனர். நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதையடுத்து கணவனுக்கு மூன்று வருட சிறையும் மனைவிக்கு 20 மாத சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. வீடு விற்பனை முகவரான Nguyen, வீட்டுத்தரகு வர்த்தகத்தில் தனது கணவன் Ngo-ஐயும் பங்குதாரராக இணைத்து பணியாற்றியிருந்தார். இவர்களின் ஊடாக வாடிக்கையாளர்கள் வீடு கட்டுவதற்கு வைப்புச்செய்த பணத்தை இன்னொரு வங்கிக்கணக்கிற்கு மாற்றிக்கொண்டனர். இதன் மூலம் இந்த மோசடியை செய்திருக்கிறார்கள் என்றும் ...
Read More »கோடி அற்புதர் அந்தோனியாரின் கோலாகலமற்ற திருவிழா!
இன்றைய திருவிழா திருப்பலி காலை 10 மணிக்கு, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படும் ஜூன் மாதம் 13ஆம் திகதி என்றாலே கொழும்பு கொச்சிக்கடைவாழ் மக்களின் மனதில் குதூகலம் குடிகொண்டு விடும். ஆம், அன்றுதான் கொச்சிக்கடை புனித அந்தோனியாருக்குத் திருவிழா எடுக்கும் நாள்; கோலாகலம் நிறைந்த நாள். கொச்சிக்கடைவாழ் மக்கள் மட்டும்தானா…? இல்லை… நாடு முழுவதுமுள்ள புனிதரின் பக்தர்கள் ஆலயத்துக்கு ஓரணியாகத் திரண்டுவந்து கொண்டாடும் திருவிழா இது. புனித அந்தோனியார்…! அவரை நினைத்தாலே போதும், மனதில் கவலைகள், துன்பதுயரங்கள், கஷ்டநஷ்டங்கள் எல்லாமே சூரியனைக் ...
Read More »12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை !
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி குறித்த மாகாணங்களுக்குள் உள்ளடங்குகின்ற 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், புத்தளம், திருகோணமலை, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் குருணாகல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று ...
Read More »ஹாங்காங்கில் கைதிகளை சீனாவுக்கு அழைத்து செல்ல எதிர்ப்பு போராட்டம்!
கைதிகளை சீனாவுக்கு அழைத்து செல்ல வசதியாக தனி சட்டம் கொண்டு வருவதை எதிர்த்து ஹாங்காங்கில் 1 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 1841-ம் ஆண்டு வரை ஹாங்காங் இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தில் இருந்தது. கடந்த 1997-ம் ஆண்டு சீனா கட்டுப்பாட்டுக்கு மாறியது. ஒப்பந்தப்படி ஹாங்காங்குக்கு என்று தனி சட்டம், தன்னாட்சி உரிமை மற்றும் குறிப்பிட்ட உரிமைகள் தொடருவது என ஒப்புக் கொள்ளப்பட்டது. பேச்சு சுதந்திரம், நீதி சுதந்திரம், தனி சட்டம், தனியான பொருளாதார கட்டமைப்பு மற்றும் ஹாங்காங் டாலரை பணமாக தொடர்ந்து கையாள்வது ...
Read More »
Eelamurasu Australia Online News Portal