செய்திமுரசு

மாணவி படுகொலை : சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

சுழிபுரம் மாணவி படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கின் சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியலை 3 மாதங்களுக்கு நீடிக்கும் விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜினா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து 2018ஆம் ஆண்டு ஜூன் 25ஆம்  மாலை சடலமாக மீட்கப்பட்டார். பாடசாலைக்குச் சென்று திரும்பிய மாணவியை கடத்திச் சென்று கொலை செய்துவிட்டு சடலம் கிணற்றுக்குள் போடப்பட்டிருந்தது. ...

Read More »

இலங்கையின் ஜனநாயகத்தின் முடிவு ?

பிரஹ்மா  செல்லானி ( புதுடில்லி கொள்கை ஆராய்ச்சிகளிற்கான நிலையத்தின் பேராசிரியர்) தமிழில் ரஜீபன் ஆசியாவின்  மிகவும் பழமையான ஜனநாயகம் ஆபத்தை சந்திக்கலாம்..இலங்கையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் ராஜபக்சகுடும்பத்தை சேர்ந்த ஒருவரை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.இந்த குடும்பத்திற்கும் ஏதேச்சாதிகாரத்திற்கும், வன்முறைக்கும், ஊழலிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு நன்கறியப்பட்ட விடயம். ஒரு வருடத்திற்கு முன்னர் விரைவில் பதவி விலகவுள்ள ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்ட அரசமைப்பு சதி முயற்சியிலிருந்து இலங்கையின் ஜனநாயகம் தப்பியது. இம்முறை கோத்தாபய ராஜபக்சவின் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இலங்கையின் ...

Read More »

வரலாறு படைத்த உலகின் முதல் மகளிர் விண்வெளி நடைக்குழு!

பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளியில் நடந்து பழுதடைந்த பேட்டரி சார்ஜரை பழுது பார்த்த வகையில் உலகின் முதல் மகளிர் விண்வெளி நடைக்குழு வரலாறு படைத்தது. நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மெய்ர் பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து ஒவ்வொருவராக விண்வெளியில் மிதந்து பழுதடைந்த மின்சார நெட்வொர்க்கை சரிசெய்த நிகழ்வு அரைநூற்றாண்டில் முதன்முதலாக ஆண் துணையின்றி விண்வெளி நடை நிகழ்வாகும். அமெரிக்காவின் முதல் பெண் விண்வெளி நடை வீராங்கனை கேத்தி சல்லிவான் இந்தச் சாதனையைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார். நாசா விஞ்ஞானிகள், ...

Read More »

ஆஸி.யில் இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் தங்கம் வென்ற சிறிலங்கன் பிரஜை!!

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பிரஜையொருவர் பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.   அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட்டில் இடம்பெற்ற 17 ஆவது அவுஸ்திரேலியன் மாஸ்ரஸ் போட்டியில் கலந்துகொண்ட அவர் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் சிிறிலங்கா  கடற்படையின் ஓய்வு பெற்ற முன்னாள் தளபதியான ருவான் போல் என்பவர் ஆவார். இவர் 220 கிலாகிராம் எடைப் பிரிவின் பளுதூக்கல் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவுஸ்திரேலியன் மாஸ்ரஸ் தொடராது ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. இந் நிலையில் இம்முறை நடைபெற்று முடிந்த 17 ...

Read More »

விமானத்தை கடத்த முயன்ற இலங்கையர்: வழக்கில் அதிரடி திருப்பம்!

போலி வெடிகுண்டுடன் விமானத்தைக் கடத்த முயன்ற இலங்கையர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் உடனடியாக விடுவிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மெல்போர்னிலிருந்து இலங்கை புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றின் பயணிகளுக்கு, அடுத்த சில நிமிடங்களில் தாங்கள் ஒரு பயங்கர அனுபவத்தை சந்திக்க இருக்கிறோம் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தனது இருக்கையிலிருந்து எழுந்த Manodh Marks என்பவர், தன் கையில் வெடிகுண்டுகள் போல் நீல நிற விளக்குகள் மின்னும் இரண்டு பொருட்களை கையில் வைத்துக்கொண்டு, ...

Read More »

21/4 தற்கொலை தாக்குதல்கள் ; ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு 75 முறைப்பாடு

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையபப்டுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க  நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு இதுவரை 75 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவூடாக ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விசாரணைகளுக்கு  பொறுப்பாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் வெலிக்கன்ன நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளை அடுத்து ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு சாட்சி விசாரணைகளை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள ...

Read More »

ஜனாதிபதி தேர்தல் : சுயாதீனக் குழுவும் பல்கலைக் கழக மாணவர்களும். கட்சிகளின் மீது சிவில் அமைப்புக்களின் தலையீடு ?

பேரவையால் தொடக்கி வைக்கப்பட்ட சுயாதீனக் குழு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்த பொழுது அது தமிழ் அரசியற் சூழலையும் தென்னிலங்கையின் அரசியற் சூழலையும் சடுதியாகக் குழப்பியது. அப்படி ஒரு குழு உருவாக்கப்பட்டது பல தளங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஏன் அப்படி அதிர்வுகள் ஏற்பட்டன? ஏனெனில் அவ்வாறு சிவில் அமைப்புக்கள் கட்சிகளின் மீது தலையீடு செய்ய வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் முன்னைய காலங்களைப் போல கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்க ...

Read More »

ஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிர்ப்பு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற பேரறிவாளன் , நளினி  , முருகன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையின் நிலைப்பாட்டை நிராகரித்துள்ள ஆளுனர் ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தெரிவித்த பரிந்துரைகளை ஏற்கவில்லை என அதிகாரபூர்வமற்ற வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தன்னுடைய முடிவு குறித்து அரசுக்கு ஆளுனர் எழுத்துபூர்வமாக எதையும் இன்னும் வழங்கவில்லை என்பது ...

Read More »

வெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது!

வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வர ஆலயத்தின் நிர்வாகம், மற்றும் பூசகருக்கு எதிராக தொல் பொருட்திணைக்களம் வவுனியா நீதி மன்றில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக ஆலயத்தின் நிர்வாகம், மற்றும் பூசகருக்கு அடுத்த மாதம் 29 ஆம் திகதி வழக்கு விசாரணைகளுக்காக வவுனியா நீதிமன்றில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாரி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானது எனத் தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் பொதுமக்களின் ...

Read More »

சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி!

சவுதி அரேபியாவில் புனித யாத்திரை மேற்கொண்ட வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் பேருந்து விபத்தில் உயிரிழந்தனர்.சவுதி அரேபியாவில் புனித யாத்திரை மேற்கொண்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. மதினா அருகே பேருந்து விபத்தில் சிக்கியதில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர். ஹஜ்ரா சாலையில் மற்றொரு வாகனத்துடன் பேருந்து மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read More »