நாவலடி ஆழி பேரலையில் காவு கொள்ளப்பட்ட உன்னத உயிர்களுக்கு இன்று சரியாக காலை 9.05 மணியவில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. பேரலையின்போது உயிர்களை நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி நினைவு கூர்ந்து வழிபாடுகளில் ஈடுபடும் நிகழ்வு இன்று காலை 9.5க்கு நாவலடி கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்ட சுனாமி நினைவுத் தூபியில் இடம்பெற்றுள்ளது . குறித்த நாவலடி பகுதியில் ஆகக் கூடிய 568 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் கடந்த நிலையில் குறித்த பகுதிகளிலுள்ள ஆலயங்களில் நினைவு அஞ்சலி விளக்கேற்றி பூசைகள் இடம் பெற்றுள்ளது. ...
Read More »செய்திமுரசு
மத்தல விமான நிலையத்தில் தீ!
மத்தல விமான நிலையத்தில் இன்று காலை விமானம் ஒன்றில் தீ பரவியுள்ளது. குறித்த விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலை தீ அணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தாக தெரிவித்துள்ளனர். குறித்த தீயானது சரக்கு விமானத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த விமானம் நேற்று மாலை தாய்லாந்திருந்து மத்தல விமானத்திற்கு வந்து இன்று காலை ஓமான் நோக்கி பயணம் செய்வதற்கு தயாரான நிலையில் தீ பரவியுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த விமானத்தில் ஏழு பேர் மாத்திரம் தங்கியிருந்ததாகவும் எவருக்கும் பாதிப்பில்லையெனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »ஆங்கிலக் கால்வாயில் படகுகளில் தத்தளித்த 40 அகதிகள் மீட்பு!
கிறிஸ்துமஸ் நாளில் ஆங்கிலக் கால்வாயின் வெவ்வேறு இடங்களில் தத்தளித்த 40 அகதிகளை கடலோர பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். உள்நாட்டுப் போர், வன்முறை மற்றும் வறுமை காரணமாக சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக வெளியேறி, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றவண்ணம் உள்ளனர். இவ்வாறு செல்பவர்களில் ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்ளும்போது பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கிறிஸ்துமஸ் நாளன்று அகதிகள் பலர், படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரிட்டனுக்குள் நுழைய முயன்றுள்ளனர். ஆட்கடத்தும் கும்பல் மூலம் அவர்கள் சட்டவிரோதமாக அனுப்பி ...
Read More »ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர்தான் மிகவும் சிறப்பானது!
இந்த ஆண்டில் ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர்தான் மிகவும் சிறப்பானது. ஏனென்றால் விராட் கோலி என ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா – இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பால் டேம்பரிங் விவகாரத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணி மீது அந்நாட்டு ரசிகர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. பெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டின்போது விராட் கோலி – டிம் பெய்ன் இடையே கடும் வார்த்தைப்போர் நடைபெற்றது. இது ...
Read More »இன உருவாக்கமும் தமிழர் சின்னமும்!
உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனித இனமும், தன்னை அடையாளப்படுத்துகின்ற சின்னங்களையும் குறியீடுகளையும் வைத்திருக்கிறது. அவ்வாறானதொரு சின்னம் அல்லது குறியீடு தெரிவுசெய்யப்படும்போது, அந்த இனத்தவரின் கூட்டு ஆன்மாவும் உளமும் அதில் தாக்கம் செலுத்தக்கூடியவகையில் பார்த்துக்கொள்ளப்படுகின்றது. அதற்குள், குறித்த இனத்தின் வரலாற்று, பண்பாட்டு, ஐதீக நடைமுறைகள் இரண்டறக் கலந்தனவாக இருக்கின்றன. இந்தியர்களுக்கு அசோகச் சக்கரமொன்றும், அமெரிக்கர்களுக்கு ஒரு கழுகும், சீனர்களுக்கு அனல்கக்கும் பறவையும், சிங்களவர்களுக்குச் சிங்கமும், இந்தப் பின்னணியிலேயே நிலைபெற்றுவிட்டன. இந்தச் சின்னங்களையும் அவற்றை அடையாளப்படுத்தும் அரசுகளையும் அந்தச் சின்னத்தைத் தாங்கிக்கொள்கின்ற மக்களின் அரசியல் உளவியலையும் சற்று ...
Read More »இணையத்தின் ஊடான குற்றங்கள் அதிகரிப்பு!
இணையத்தை பாவிப்பதன் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி இந்நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடுவது குறைவாக இந்தபோதும் தற்போது அது பாரியளவில் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Read More »இத்தாலி – நிலநடுக்கத்தை தொடர்ந்து எட்னா எரிமலை வெடிப்பு!
இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலித் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது. ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா இத்தாலியின் தெற்கு பகுதியில் சிசிலித் தீவில் உள்ளது. நேற்று ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் அங்கு லேசனா நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது. இதனால் அங்கு புகைமண்டலம் சூழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எரிமலை வெடிப்பை தொடர்ந்து சிசிலி தீவில் அமைந்துள்ள கட்டானியா விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ...
Read More »ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் – ராகுல், முரளி விஜய் நீக்கம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியில் கே எல் ராகுல், முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா – இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்றது. பெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. இதனால் தொடர் 1-1 சமநிலையில் உள்ளது. ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என அழைக்கப்படும் 3-வது போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ...
Read More »முல்லைத்தீவில் கடும் மழை! வயல் நிலங்கள் சேதம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பெய்யும் கன மழைகாரணமாக, காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரக் கணக்கான வயல் நிலங்கள் சேதமடைந்துள்ளதுடன், சில குளங்கள் உடைப்பெடுக்கும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. முல்லைத்தீவு கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் காணப்படும், மொத்தம் 9679 ஏக்கர் காலபோக நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயற்காணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 05 குளங்கள் ஆபத்தான நிலையிலுமுள்ளதுடன், ஒரு நீர்ப்பாசன வாய்க்காலும் சேதமடைந்துள்ளது. மேலும் ஒலுமடு கமக்கார அமைப்பிற்குட்பட்ட 675 ஏக்கர் வயல் நிலங்களும், முள்ளியவளை கமக்கார அமைப்பின் கீழ் காணப்படும் 750 ஏக்கர் வயல் நிலங்கள், ஒட்டுசுட்டான் ...
Read More »மொழிபெயர்க்கத் தொடங்கும்போது தஸ்தயேவ்ஸ்கி எனக்குள் கூடுபாய்ந்துவிடுவார்! – எம்.ஏ.சுசீலா
170 மொழிகள், 2,300-க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் என உலக அளவில் கொண்டாடப்படும் ரஷ்ய இலக்கிய மாமேதை ஃபியதோர் தஸ்தயேவ்ஸ்கியின் பல ஆயிரம் பக்கங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர் எம்.ஏ.சுசீலா. தஸ்தயேவ்ஸ்கியின் சில கதைகள், குறுநாவல்கள் எனச் சொற்பமான எழுத்துகளை வைத்தே நாம் உரையாடிக்கொண்டிருந்த வேளையில் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’, ‘நிலவறைக் குறிப்புகள்’, ‘இரட்டையர்’ என அவரது பேரிலக்கியங்களைத் தமிழ் வாசகர்களுக்குத் தருவதற்காகத் தன் பேராசிரியப் பணிக்குப் பின்பான ஓய்வுகாலத்தை அர்ப்பணித்துக்கொண்ட சுசீலாவின் பணி போற்றுதலுக்குரியது. ‘அசடன்’ நாவல் வெளியாகி 150 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதைக் கொண்டாடும் விதமாக ...
Read More »
Eelamurasu Australia Online News Portal