செய்திமுரசு

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள்…..

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து அமைச்சரவை ஆராய்ந்தது என நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இது குறித்து ஆராய்நது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாத விதத்தில் மாற்றங்களை மேற்கொள்வோம் என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார். இன மதங்களை கருத்தில்கொள்ளாமல் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் தீர்வை வழங்க முயல்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

‘விமலுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஏற்க முடியாது’

அமைச்சர் விமல் வீரவன்ஸவின் அமைச்சுக்கு கீழிருந்த பொஸ்போட் நிறுவனத்தை, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கீழ் கொண்டு வந்த விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்துள்ள நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சிலரது தேவை, கோரிக்கை, அவசியம், அளவீடுகளுக்கு அமைய இந்த மாற்றங்கள் முன்னெடுக்கப்படுகிறன என்றார். “எனினும், இவ்வாறு சிறு கட்சிகளின் அமைச்சர்களுக்கும் கட்சிகளுக்கும் திட்டமிட்டே இழைக்கப்படும் அநீதிகளுக்கு  எதிராக  போரட்டங்களை முன்னெடுக்க நாங்கள் தயாராக இல்லை” என்றார். எனினும், இலாபமடைந்த பின்னர் இந்த நிறுவனத்தை கைமாற்றியமைக் குறித்து எதிர்வரும் நாள்களிள் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Read More »

அரிய வகை நோய்களை எதிர்கொள்வது எப்படி?

உலகில் 8 ஆயிரம் அரிய வகை நோய்கள் இருப்பதாகவும், அவற்றைக் கொண்டிருப்பவர்கள் 40 கோடிப் பேர் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் கணக்கு 450 அரிய வகை நோய்களும், 7 கோடி மக்களும். குறிப்பிட்ட மக்கள்தொகையில் குறைந்த அளவில் ஏற்படும் நோய்களை ‘அரிய வகை நோய்கள்’ (Rare Diseases) என்று வரையறுத்திருக்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் வரையறைப்படி அரிய வகை நோய் என்பது 10 ஆயிரம் பேரில் 10 பேருக்கும் குறைவாக இருப்பது. அரிய வகை நோய்களில் 5% நோய்களுக்குத்தான் சிகிச்சை இருக்கிறது. இருக்கும் ...

Read More »

வடகொரியாவில் கரோனா இல்லையா? –

வடகொரியாவில் ஜூன் 10 -ம் தேதி வரை நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் யாருக்கும் கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் அந்நாடு தெரிவித்துள்ளது. ஆனால் இதில் உண்மை இல்லை என தற்போது தெரிய வந்துள்ளது. ஜூன் மாதம் 10 ஆம் தேதிவரை சுமார் 30,000 பேருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனைகளில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என உலக சுகாதார அமைப்புக்கு அளித்த அறிக்கையில் வடகொரியா சமீபத்தில் தெரிவித்திருந்தது. ஆனால் உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு குழு வெளியிட்ட அறிக்கையில், “ 733 ...

Read More »

ஆஸ்திரேலி தடுப்பு முகாமில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அகதிகள்

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் தாங்கள் சிறைவைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மெல்பேர்ன் குடிவரவுத் தடுப்பு முகாமில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மனுஸ் மற்று நவுருத்தீவுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் எனக் கூறப்படுகின்றது. “நாங்கள் இங்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டோம். ஆனால் எந்த காரணமுமின்றி எங்களைத் தடுப்பிலேயே வைத்திருக்கின்றனர்,” என ஓர் அகதி தெரிவித்திருக்கிறார்.

Read More »

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது!

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான பாதுகாப்பான சூழல் தற்போது கிடையாது. நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியாக செயற்பட்ட தமிழ் ; தேசிய கூட்டமைப்பு அக்காலக்கட்டத்தில் தேசிய பிரச்சினைகள் குறித்து அக்கறை கொள்ளவில்லை என ; உள்ளுராட்சி மற்றும் ; மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். ;இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். அதற்கு இந்தியா அழுத்தம் ...

Read More »

சீனாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி

பொது மக்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. கொரோனா என்ற பெரும் தொற்று சீனாவில் உருவானது. தற்போது உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நிலையில் பொது மக்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. இதையும் படியுங்கள்…. கொரோனாவின் அடுத்த எழுச்சியைத் தடுக்க தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்துங்கள்- உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் இதுவரை சீனாவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது .என்றாலும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ...

Read More »

இன்று உலக யோகா தினம்: ஆரோக்கியமான வாழ்வை அளிக்கும் யோகா

உலகில் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அத்தகைய ஆரோக்கியமான வாழ்வை அளிக்கவல்ல சக்தி யோகா கலைக்கு உள்ளது. இன்று (திங்கட்கிழமை) உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. நம் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யோகா கலை தோன்றியது. சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுத்து வடிவம் கொடுத்து, யோக சூத்திரங்களை அமைத்து, அதற்கு உயிரூட்டி, அதை நிலை பெறச் செய்தவர் பதஞ்சலி முனிவர் ஆவார். அதனால்தான் அவரை யோகா கலையின் தந்தை எனவும், அவர் கொடுத்த யோகா ...

Read More »

உடல்நலம் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிச் சிறுமிக்கான சிகிச்சை நிறைவு

குருதி தொற்று காரணமாக கிறிஸ்மஸ் தீவு அகதிகள் முகாமில் இருந்து ஆஸ்திரேலிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதிகளின் குழந்தையான தருணிகாவுக்கு சிகிச்சை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த பிரியா- நடேசலிங்கத்தின் தஞ்சக்கோரிக்கை  நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்களும் அவர்களது இரு குழந்தைகளும் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட பிரியா- நடேசலிங்கத்தின் இளைய மகள் தருணிகா கடந்த ஜுன் 7ம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2012 யில் ...

Read More »

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச

அரசாங்கம் குறித்து அதிருப்தியடைந்துள்ள அமைச்சர் விமல்வீரவன்சவிற்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் அரசியல் ஒப்பந்தமொன்று உருவாகியுள்ளது என தகவல்கள் வெளியாகிள்ளன. மூன்றாம் தரப்பொன்றின் முயற்சிகள் காரணமாக இருவருக்கும் இடையில் இணக்கப்பாடொன்று ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல பௌத்தமதகுரு ஒருவர் இருவருக்கும் இடையில் அரசியல் ஒப்பந்தமொன்று உருவாவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். 2024 ஜனாதிபதி தேர்தலில் உருவாகவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் பொதுவேட்பாளராக விமல்வீரவன்சவை நியமிப்பதற்கு ரணில்விக்கிரமசிங்க சம்மதித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விமல் வீரவன்ச தரப்பினர் தொடர்ந்தும் அரசாங்கத்தில் நீடிக்கவேண்டும் சரியான தருணம் ...

Read More »