செய்திமுரசு

“பிள்ளைகள் குறித்து, நீ கவலைப்படாதே! நான் பார்த்துக் கொள்கின்றேன்..!”

“பிள்ளைகள் குறித்து, நீ கவலைப்படாதே! நான் பார்த்துக் கொள்கின்றேன்..”: கணவரின் வார்த்தையை கேட்ட அடுத்த நொடியே பிரிந்த தாதியின் உயிர் உலகின் பல்லாயிரக் கணக்கான உயிர்களை குடிக்கும் ஓர் உயிர்கொல்லி நோயாக வலம் வந்து கொண்டிருக்கிறது கொரோனா. பிரித்தானியாவில் மூன்று பிள்ளைகளின் தாயான தாதியொருவர், நாட்டு மக்களுக்கு சேவை செய்து தன்னுயிரை நீத்துள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 16 ஆண்டுகள் தாதியாக பணி புரிந்த அரீமா என்ற பெண்ணொருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த தாதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நோயாளர்களுக்காக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், ...

Read More »

இருமல், தடிமன், சுவாசப் பிரச்சினைகள் இருப்பின் 1390க்கு அழையுங்கள்!

இருமல், தடிமன், சுவாசப் பிரச்சினைகள் இருப்பின் 1390 என்ற இலக்கத்துக்கு, அழைக்குமாறும் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டாமென்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். குறித்த எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்திய பின்னர், நோய்அறிகுறிகள் குறித்து ஆராய்ந்த பின்னர், தேவையேற்படின் வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு 1990 அம்பியூலன்ஸ் வசதி பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

ஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் அறிவிப்பு

19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம், நாளை (06) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி முதலான மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

Read More »

சிறிலங்காவில் 2691 கைதிகள் விடுப்பு!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரையின் படி நீதிமன்ற உத்தரவில் 2691 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் இன்று (04) வரையான காலப்பகுதியில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி, சிறைச்சாலை வளாகத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது கைதிகள் அவரிடம் முன்வைத்த கோரிக்கையின் பேரில் நிவாரணம் வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதி அமைச்சு, சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளை கொண்ட குழு கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான ...

Read More »

கொரோனா அச்சம் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் தாக்கம் செலுத்தக்கூடுமா?

உலகெங்கும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம், இந்தியா முதல் ஆஸ்திரேலியா வரை, சீனா முதல் அமெரிக்கா வரை எதிர்பாராத சூழல்களை உருவாக்கியிருக்கிறது. இந்த தாக்கம் பல பின்விளைவுகளை உருவாக்கும் எனக்கூறப்படும் நிலையில், தற்போது கொரோனா உருவாக்கியுள்ள அச்சம் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை புள்ளிவிவரங்களில் தாக்கம் செலுத்தக்கூடும் எனப்படுகின்றது. கொரோனா அச்சம் காரணமாக, ஆஸ்திரேலியாவின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் வெளிநாட்டினரின் குடியேற்றத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை சில ஆஸ்திரேலியர்கள் வரவேற்கக்கூடும் என்றும் ஆனால் அது ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் ...

Read More »

கொரோனா வைரசை கடந்த ஆண்டே கணித்த குட்டி ஜோதிடருக்கு குவியும் பாராட்டுக்கள்

கொரோனா வைரஸ் பற்றி கடந்த ஆண்டே கணித்து கூறிய கர்நாடகாவை சேர்ந்த குட்டி ஜோதிடர் அபிக்யா ஆனந்த்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸை 2019-ம் ஆண்டிலேயே கணித்து கூறியவர். இவரது பெயர், அபிக்யா ஆனந்த். கர்நாடகாவைச் சேர்ந்தவர். பிறந்தது, 2006-ம் ஆண்டு. இவரது தந்தை ஆனந்த் ராமசுப்ரமணியன். தாய் அனு ஆனந்த். ...

Read More »

கொரோனா குறித்த அதிர்ச்சி தகவல்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நால்வருக்கும், குறித்த வைரஸ் எவ்வாறு பரவியது என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லையென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், சமூகத்தில் கொரோனா தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்களும் இருக்கலாமென, அச்சங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் இணைந்திருப்பார்களானால், அதனால் பாரிய நோய் தொற்று ஏற்படக்கூடுமென, சங்கத்தின் பிரதித் தலைவர் சாரத கன்னங்கர அதிர்ச்சி தெரிவித்துள்ளார். எனவே, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையிட்டு, மக்கள் முன்னரைவிட சுகாதார விதிமுறைகளை அதிகளவில் பின்பற்ற வேண்டுமென, அவர் தெரிவித்துள்ளார். ...

Read More »

கொரோனா தொற்றுடன் சிசுவை பிரசவித்த தாய்

பேருவளை-பன்னில பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி, களுத்துறை- நாகொட வைத்தியசாலையில், இன்று (04) சிசுவை பிரசவித்துள்ளாரென, பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்தார். குறித்த பெண் தனது விலாசத்தை மாற்றிக்கூறியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் தாதியர்கள் கர்ப்பிணிப் பெண்ணின் கிளினிக் அட்டையை பார்த்தபோது, இப்பெண் பேருவளை-பன்னில பகுதியைச் சேர்ந்தவரெனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பெண்ணின் இரத்த மாதிரியை சோதனை செய்தபோது, அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த பெண் பிரசவித்த ...

Read More »

கொரோனா வைரஸ் தும்மல், இருமல் மட்டுமல்லாமல் மூச்சுகாற்று பட்டால் கூட பரவக்கூடியது

கொரோனா வைரசானது பாதிக்கப்பட்டவரின் தும்மல், இருமல் மட்டுமல்லாமல் அவரது மூச்சுகாற்று பட்டால் கூட பரவக்கூடியது என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று சாதாரண சுவாசம் மற்றும் பேசுவதன் மூலம் காற்று வழியாக பரவக்கூடும் என்று அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானி ஒருவர் தெரிவித்து உள்ளார். இதை தொடர்ந்து அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் தொற்று நோய்களின் தலைவரான அந்தோனி பவுசி கூறியதாவது:- இருமல் மற்றும் தும்மலுக்கு மாறாக, மக்கள் பேசும்போது கூட வைரஸ் உண்மையில் பரவக்கூடும் என்ற சில சமீபத்திய தகவல்கள் ...

Read More »

மெல்போர்ன் மோனாஷ் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரசை அழிக்க ஆய்வு!

உலகம் முழுவதும் கிடைக்கும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தினால் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் உலகளவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொற்றுநோய்க்கு பலியாகி உள்ளனர். தற்போது இந்த நோய்க்கான தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லை. மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உலகளவில் கிடைக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தான ஐவர்மெக்டின், கோவிட் -19 வைரசுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ...

Read More »