செய்திமுரசு

சிறிலங்கா இராணுவத்தால் மாற்றுத்திறனாளியான மாணவிகள் சாதனை!

போர்த் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சாதித்துள்ளனர். முல்லைத்தீவு – முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த தண்ணீரூற்று மேற்கு, முள்ளியவளையில் வசிக்கும் கெங்காதரன் பவதாரணி, நாவலர் வீதி, முள்ளியவளையில் வசிக்கும் மதியழகன் விதுர்சிகா ஆகிய மாணவிகள் இருவரே இவ்வாறு சாதித்துள்ளனர். 2009ம் ஆண்டு இருவேறு சம்பவங்களின் போது காயமடைந்திருந்தனர். இவர்களில் பவதாரணி முள்ளிவாய்க்கால் பகுதியில் எறிகணைத் தாக்குதலில் சிக்கி முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நிலையில் எழுந்து நடமாட முடியாமல் ...

Read More »

வடகொரியா தலைவர் நலமாக இருக்கிறார் என்கிறார் தென்கொரிய வெளியுறவுக் கொள்கைகளுக்கான ஆலோசகர்!

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் உயிருடனும், நலமாகவும் இருப்பதாக தென்கொரிய வெளியுறவுக் கொள்கைகளுக்கான ஆலோசகர் தெரிவித்துள்ளார். வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சமீபகாலமாக வெளி உலகிற்கு வரவில்லை என்பதால் அவரது உடல்நிலை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே, சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பிரபல அமெரிக்க செய்தி நிறுவனம் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. வடகொரியாவின் ரெசார்ட் நகரில் உள்ள ரெயில் நிலையத்தில் கிம் ஜாங் அன்னின் சிறப்பு ரெயில் நிறுத்தப்பட்டிருக்கும் ...

Read More »

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 26 மாணவர்கள் 9A

2019ஆம் ஆண்டிற்கான க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 26 மாணவர்கள் 9 பாடங்களிலும் திறமைச்சித்தி (ஏ) பெற்றுள்ளனர். 2019 டிசெம்பரில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 250 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அவர்கள், 250 பேரும் சித்தியடைந்து, கல்லூரிக்கு 100 வீதம் சித்தியைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். 26 மாணவர்கள் 9 ஏ பெற்றுள்ளதுடன், அவர்களில் தமிழ் மொழி மூலம் 12 பேரும் ஆங்கில மொழி மூலம் 14 பேரும் அடங்குகின்றனர். 29 மாணவர்கள் ...

Read More »

யாழ்.வேம்படியில் 58 மாணவிகளுக்கு 9A

நேற்று வெளியாகிய 2019ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர். 2019ஆம் ஆண்டு டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 251 மாணவிகள் தோற்றியிருந்தனர். அவர்களில் தமிழ்மொழிமூலம் 177 மாணவிகளும் 74 மாணவிகள் இருமொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இந்த நிலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர். அவர்களில் 34 மாணவிகள் தமிழ்மொழிமூலம் 24 மாணவிகள் இருமொழிமூலமும் பரீட்சைக்குத் ...

Read More »

30 முதல் 50 வயதினருக்கு கரோனா பாதி்ப்பால் முக்கிய உள்ளுறுப்புகள் பாதிக்கும்;ஸ்ட்ரோக்கால் மரணம் ஏற்படும்!

கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தினால் நீரிழிவு நோய், இதயக்கோளாறு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட நீண்டகால நோய் பாதிப்புகள் இருப்போர், முதியோர் ஆகியோருக்குத்தான் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும், அவர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் என கருத்து நிலவி வந்தது ஆனால் சமீபத்திய அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வில் 30 வயது முதல் 50 வயதுக்குள் இருப்போர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகினால் உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும். சிலர் ஸ்டோரோக்கால் திடீரென எதிர்காலத்தில் உயிரிழப்பைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர் இதில் தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியிலும்கூட, ...

Read More »

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய மாணவன் 9A சித்தி பெற்று முதலிடம்

2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (சா/தர) பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்திற்குட்பட்ட ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளது. அப் பாடசாலையைச் சேர்ந்த   ராதாகிருஸ்ணன் கேமதருண் எனும் மாணவன் 9A சித்தி பெற்று  பாடசாலைக்கும் அப்பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக க.பொ.த. (சா/தர) பரீட்சையில் 9A சித்தி பெற்ற சந்தர்ப்பமும் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. 9A சித்தி பெற்று பாடாசாலைக்கும் பாடாசாலைச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்த இம் மாணவனை பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், ...

Read More »

கிம் ஜொங் – உன் எங்கே ?

வட கொரியா கிம் ஜொங் – உன்னின் ; உடல்நலம் குறித்து இணையத்தில் ஊகங்கள் ஏராளம்.தனது பாட்டனாரான கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் தாபகர் கிம் இல் – சுங்கின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏப்ரில் 15 நடத்தப்பட்ட சூரியதினக் கொண்டாட்டங்களில் (Day ; of the Sun celebrations) அவர் காணப்படாததையடுத்து வதந்திகள் கிளம்ப ஆரம்பித்தன. ( இல் — சுங் என்பதற்கு கொரிய மொழியில் – சூரியனாக வருவது(Becoming the Sun) ; என்று அர்த்தம் என்பதால் தாபகரின் தினம் சூரிய ...

Read More »

கொவிட் -19 கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறலாம் !- எச்சரிக்கை!

கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் சமூகத்திலான பரவலாக பரிமாணமடைய அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில் ஊரடங்கை அரசாங்கம் தளர்த்தி நாட்டினை வழமைக்கு கொண்டுவர நினைப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவிக்கின்றது. வைரஸ் பரவலானது அதன் மூன்றாம் கட்டத்தில் இருப்பதால் அடுத்தது சமூக பரவலாக மாறலாம் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். கொவிட் -19 கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் தற்போது எவ்வாறான நிலைமையில் உள்ளது என்பது குறித்து தொற்றுநோய் தடுப்பு பிரிவின் உடற்கூற்று மருத்துவ நிபுணர் ...

Read More »

பிரியா நடேசன் – 2 இலட்சம் டொலர்கள் வழக்கு செலவு செலுத்த அரசுக்கு உத்தரவு!!

அவுஸ்திரேலியா அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்திற்கு 2 இலட்சம் டொலர்களை  வழக்கு செலவாக செலுத்தவேண்டும் என, அந்நாட்டு அரசுக்கு, நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பிரியா மற்றும் நடேசன் முருகப்பன் ஆகியவர்கள் சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்போரில் இருந்து பாதுகாப்புத் தேடி அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்தனர். அங்கு அவர்களுக்கு கோபிகா மற்றும் தருணிகா ஆகிய இரு குழந்தைகளும் பிறந்திருந்தன. எனினும் அவர்களின் புகலிடத் தஞ்சத்தை நிராகரித்த அவுஸ்திரேலியா அரசு அவர்களை தடுப்பு முகாமுக்கு அனுப்பி நாடுகடத்த திட்டமிட்டிந்தது. இந்த நிலையில் அவர்களின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ...

Read More »

கொரோனா வைரஸ்: இறந்ததாகக் கூறப்பட்டவர் மூன்று வாரம் கழித்து உயிருடன் திரும்பினார்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்ட 74 வயதான பெண் ஒருவர் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது . ஆல்பா மரூரி என்னும் பெண்ணின் குடும்பத்திற்குக் கடந்த மாதம் அவர் இறந்து விட்டார் என மருத்துவமனையிலிருந்து தெரிவிக்கப்பட்டது. அவரது சாம்பல் எனக் கூறி ஒரு சாம்பல் பெட்டியையும் அவருக்கு வழங்கினர். ஆனால் மூன்று வாரமாக மருத்துவமனையில் கோமாவில் இருந்த மரூரி வியாழக்கிழமையன்று கோமாவிலிருந்து மீண்டு சுய நினைவுக்குத் திரும்பியுள்ளார். மருத்துவர்களிடம் தன்னுடைய சகோதரிக்கு அழைக்குமாறு கேட்டுள்ளார். இந்த செய்தி கேள்விப்பட்டு அவர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ...

Read More »