2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (சா/தர) பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்திற்குட்பட்ட ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளது.
அப் பாடசாலையைச் சேர்ந்த ராதாகிருஸ்ணன் கேமதருண் எனும் மாணவன் 9A சித்தி பெற்று பாடசாலைக்கும் அப்பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக க.பொ.த. (சா/தர) பரீட்சையில் 9A சித்தி பெற்ற சந்தர்ப்பமும் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
9A சித்தி பெற்று பாடாசாலைக்கும் பாடாசாலைச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்த இம் மாணவனை பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகம் என்போர் தமது வெகுவான பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal