செய்திமுரசு

வட கொரிய அதிபரின் சகோதரி திடீர் மாயம்

ஆட்சியில் முக்கிய அதிகாரத்தில் இருந்த வட கொரிய அதிபரின் சகோதரி திடீரென மாயமாகி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து சமீபத்தில் வெளியான தகவலில் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அவரது சகோதரியான கிம் யோ ஜாங்குக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிபர் கிம் ஜாங் உன் இறந்து விட்டதாகவும், அவரது சகோதரி நாட்டின் தலைவர் பதவியை ஏற்க உள்ளதாகவும் அண்டை நாடான தென் ...

Read More »

அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கை மக்களுக்கு குறைகின்றதா ?

ஜனநாயக நாடொன்றில் வாக்களிப்பது எந்தளவுக்கு அடிப்படை உரிமையாக ;இருக்கின்றதோ அதே போன்று நிராகரிக்கும் உரிமையையும் வாக்காளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது ஜனநாயக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. இடம்பெற்று முடிந்த பொதுத்தேர்தலில் நாடெங்கினும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் பற்றி அதிகம் பேசப்படுகின்றது. இம்முறை தேர்தலில் 7 இலட்சத்து 44 ஆயிரத்து 373 வாக்குகள், 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் நிராகரிக்கப்பட்டிருந்தன. கூடுதலாக கொழும்பு மாவட்டத்தில் 81,031 வாக்குகளும் கம்பஹாவில் 75,509 வாக்குகளும் கண்டி மாவட்டத்தில் 57,091 வாக்குகளும் நிராகரிக்கப்பட்டிருந்தன. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் இது 6.3 வீதமாக உள்ளது. ...

Read More »

கைகொடுத்தது தமிழர் என்பதை சஜித் மறந்துவிட வேண்டாம்!

சிங்கள மொழி எவ்வாறு சிங்களவர்களுக்கு பெருமையோ அதேபோல் தமிழ் மொழி பெருமையையும் இறுமாப்பையும் எமக்கு கொடுக்கின்றது. எமது மண்ணுக்கும் மொழிக்கும் முன்னுரிமை கொடுத்ததன் காரணமாக நாம் இழந்தவை பல, இனியும் பல தியாகங்களை செய்யவும் தயாராக உள்ளோம். இந்த விடயத்தில் நாம் ஆதரித்த அணியே இன்று எமக்கு எதிராக குரல் எழுப்புகின்றது வேதனையளிக்கிறது, நீங்கள் பலவீனமாக இருந்த காலத்தில் தமிழர்களே உங்களுக்கு கொடுத்தனர் என்பதை மறந்துவிட வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார். ...

Read More »

சபையில் விக்கியை எச்சரித்தார் பொன்சேகா

தேசியம், சுய நிர்ணயம் பேசி தமிழ் இளைஞர்களை தவறாக வழிநடத்திய அமிர்தலிங்கம், பிரபாகரனுக்கு நேர்ந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும், விக்கினேஸ்வரன் இதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். விக்கினேஸ்வரனும் அதே தவறை செய்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் எச்சரிக்கை விடுத்தார். விக்கினேஸ்வரன் பிரபாகரனாக முடியாது, ஏனென்றால் அவருக்கு வயதாகிவிட்டது எனவும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரச இடைக்கால கணக்கறிக்கை மீதான் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவற்றை ...

Read More »

பொன்சேகாவின் அறிவுரை ஆச்சரியத்தை தருவதோடு விநோதமாயும் உள்ளது!

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக, நான் தெரிவிக்கும் கருத்துக்களில் கவனமாய் இருத்தல் அவசியம் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அவர்கள் குறிப்பிட்டிருந்தார். நான் அவருக்கு கூற விரும்புவது நான் எனது கருத்துக்களை மிகவும் எச்சரிக்கையுடனும், அளந்துமே தெரிவித்து வருகிறேன். எனக்கு அவரது அறிவுரை ஆச்சரியத்தை தருவதோடு விநோதமாயும் உள்ளது.” இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தொன்றுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். அவரது உரையின் தமிழாக்கம்: ...

Read More »

சிட்னியில் புதிய நோய்த்தொற்றுச் சம்பவங்கள் – அச்சத்தில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், 11 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனும் அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், குவீன்ஸ்லந்து மாநிலத்தில் உள்ள சீர்த்திருத்த நிலையம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்குக் கிருமி தொற்றியதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விக்டோரியா மாநிலத்தில் நேற்று 113 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன. கடந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அங்கு பதிவாகிய ஆகக் குறைவான எண்ணிக்கை அது. நோய்ப்பரவல் தணியத் தொடங்கியிருப்பதை அது குறிக்கலாம் எனக் கூறிய மாநில முதலமைச்சர் டேனியல் ஆண்ட்ரூஸ் (Daniel ...

Read More »

ஜப்பான் பிரதமர் அபே இன்று ராஜினாமா?

உடல் நலப்பிரச்சினை காரணமாக ஜப்பான் பிரதமர் அபே இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே உடல் நலப்பிரச்சினைகள் தொடர்பாக தனது ராஜினாமா அறிவிப்பை வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்க உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. “அபே தனது நோய் மோசமடைந்துள்ளதால் ராஜினாமா செய்ய விரும்புகிறார், நாட்டை வழிநடத்துவதில் அது சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர் கவலைப்படுகிறார் என உள்ளூர் ஊடகம் தெரிவித்து உள்ளது. பிரதமரின் உடல்நிலை குறித்த ஊகங்கள் பல வாரங்களாக பரவி வருகின்றன, ...

Read More »

துரைராஜசிங்கம் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதற்காக கொண்டுவருகிறோம்?

விளக்குகின்றார் சி.வீ.கே.சிவஞானம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு நாளை சனிக்கிழமை வவுனியாவில் கூடவிருக்கும் நிலையில், அந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சி.துரைராஜசிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டு இருக்கின்றது. நாளைய கூட்டத்தில் இந்தப் பிரேரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவருமான சி.வீ.கே. சிவஞானம், கட்சியின் பொருளாளர் கனகசபாபதி, யாழ் மேயர் இமானுவேல் ஆனல்ட் மற்றும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் பரஞ்சோதி, குகபாலன் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த நம்பிக்கையில்லாப் ...

Read More »

கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை!

எதிர்வரும் மாதத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. அயல் நாடான இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிர வேகமாக பரவி வருகின்றது. இதுவே விமான நிலையத்தைத் திறக்காமல் இருப்பதற்கான பிரதான காரணம் என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியாரச்சி தெரிவித்துள்ளார். அதற்கமைய விமான நிலையம் கால வரையின்றி தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்காகத் திறக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Read More »

கால இழுத்தடிப்புக்கள் மூலம் எமது அபிலாஷைகளை நீர்த்துப்போகச் செய்ய முடியாது!

தொடர்ச்சியான கால இழுத்தடிப்புக்கள் மூலம் எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை நீர்த்துப் போகச்செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சபையில் தெரிவித்துள்ளார். அத்துடன், எமது மக்களின் அபிவிருத்தியும்,அரசியல் தீர்வும் பொறுப்புக்கூறலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்ற நிலையில் அபிவிருத்தியை மட்டும் காட்டி மற்றவையை மழுங்கடிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். நேற்று ஆற்றிய தனது கன்னி உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின்போது உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு ...

Read More »