செய்திமுரசு

சிறையிலிருந்து வீடு திரும்பவிருந்த யாழ். பல்கலை விரிவுரையாளருக்கு கொவிட்-19

கொழும்பு மகசின் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பத் தயாராகியிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தமிழ் அரசியல் கைதியான யாழ்.பல்கலைக் கழக இசைத் துறை விரிவுரையாளர் நல்லை க.கண்ணதாஸ் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப் பட்டுள்ளார். இந்தத் தகவலை அவருடைய வழக்கு விசாரணையை முன்னெடுக்கும் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: – கண்ணதாஸை வீட்டுக்கு அனுப்புவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றிருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று ...

Read More »

வௌவாலுக்கு வைத்த துப்பாக்கிக் குறி தவறி தாதியைப் பதம் பார்த்தது

மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோவில் 3ஆம் குறுக்கு வீதியில் எந்திரி ஒருவர் தாதியரின் மரத்தில் இருந்த வௌவால் மீது எயார்கண் துப்பாக்கியால் சுட்டதில் குறி தவறி எதிர் வீட்டின் தாதி உத்தியோகத்தர் ஒருவர் மீது குண்டு பட்டதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ள சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தொடர்புபட்ட எந்திரியைக் கைது செய்ததுடன் துப்பாகியை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் காவல் துறையினர்  தெரிவித்தனர். இதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமை யாற்றும் 55 வயதுடைய நடராசா ...

Read More »

அமெரிக்காவிடம் கடும் நிபந்தணை – சிங்களப் புத்திஜீவிகள் பரிந்துரை

ஜே பைடன் நிர்வாகம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் மீளவும் இணைந்து இலங்கைக்குக் கடும் அழுத்தம் கொடுக்கும் என்றோ, குறைந்தபட்சம் போர்க்குற்றம் குறித்த சர்வதேச விசாரணை நடக்கும் என்றோ எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால் ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானம் ஒன்றுக்கான முன்மொழிவுக்கு ஈழத்தமிழர்கள் தயாராகி, இலங்கை மேற்கொண்ட குற்றங்கள் அனைத்தினதும் குற்றங்களுக்கான சர்வதேச நீதியைக் கோரத் தலைப்பட வேண்டும். மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்து 2015ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பாடுபட்டிருந்த பொது அமைப்புகளில் ஒன்றான தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் ...

Read More »

30 சிசுக்களை மூன்றாம் தரப்பினருக்கு விற்ற சந்தேக நபர் கைது

பிறக்காத சிசுக்கள் சார்பாக கர்ப்பிணித் தாய்மார்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பின்னர், சிசுக்கள் பிறந்ததும் அவற்றை  மூன்றாம் தரப்பினருக்கு விற்கும் மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரை காவல் துறை  சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சமூக ஊடகங்களின் ஊடாக பிரசாரத்தை முன்னெடுத்து தெஹிவளை பிரதேசத்தில் இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாககாவல் துறை  ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறித்த சந்தேக நபர் மாத்தளை பகுதியை சேர்ந்தவர் என்றும் கொழும்பில் தங்கியுள்ளதாகவும் காவல் துறை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ...

Read More »

தொடர் மழையால் கிழக்கில் வெள்ளக்காடு

கிழக்கு மாகாணத்தில், கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், தமது வீடுகளை விட்டு வெளியேறி, உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சம் நிலவி வரும் இக்காலகட்டத்தில் மக்கள் மிகப்பெரும் அசௌகரியத்தை தற்போது எதிர்நோக்கி வருகின்றனர். முன்னதாக, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் மழை ...

Read More »

எதிர்கால கப்டனுக்கு ஸ்மித் மட்டுமே

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு ஸ்மித் மட்மே எதிர்கால கேப்டன் என்ற நிலை இல்லை என அந்நாட்டு கிரிக்கெட் போர்டு சேர்மன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆரோன் பிஞ்ச், டெஸ்ட் அணி கேப்டனாக டிம் பெய்ன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். டெஸ்ட் அணிக்கு ஸ்மித்தை கேப்டனாக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. டிம் பெய்னும் கேப்டன் பதவி குறித்து யோசிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஸ்மித் மட்டுமே கேப்டனுக்கான ஆப்சனில் இல்லை என அந்நாட்டு கிரிக்கெட் போர்டின் ...

Read More »

பைசர் தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் – 27 நாடுகளில் பயன்பாட்டிற்கு வருகிறது

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் 27 நாடுகளுக்கு ஒரே நாளில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருகிறது. அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் உள்பட பல நாடுகளிடம் பைசர் ...

Read More »

சொல்லும் செயலும் தமிழரசியலும் ?

ஈழவேந்தன் இப்பொழுது கனடாவில் இருக்கிறார். அவர் முன்பு நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த பொழுது கிளிநொச்சியில் ஒரு சர்ச்சை எழுந்தது. ஈழவேந்தன் நாடாளுமன்றத்தில் ஆவேசமாக எதிர் தரப்பைச் சாடுவார். ஆனால் நாடாளுமன்ற கன்ரீனில் யாரை எதிர்த்து பேசினாரோ அவரோடு உட்கார்ந்திருந்து தேநீர் அருந்துவாராம். இது தொடர்பில் கிளிநொச்சிக்கு யாரோ முறைப்பாடு செய்திருக்கிறார்கள். இக்காலகட்டத்தில் ஈழவேந்தன் என்னை சந்தித்த பொழுது நான் அவரிடம் சொன்னேன் “மிதவாத அரசியல் என்றால் அப்படித்தான். ஆயுதப் போராட்டம் எதிரியின் இருப்பை அழிக்க நினைக்கும். ஆனால் மிதவாத அரசியல் அப்படியல்ல. எதிரியின் இருப்பை ...

Read More »

ஆவணத்தில் சுமந்திரன் சொல்லியிருப்பது என்ன?

“தமது சிபார்சுகள் என்று கூறி சுமந்திரன் எமக்குத் தந்த ஆவணத்தில் கூறியிருப்பது இலங்கை உட்பட ஒரு தடவை அல்ல மூன்று தடவைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அங்கத்தவர்கள் யாவரினதும் சம்மதத்துடன் இயற்றியது போன்ற ஒரு கூட்டத் தீர்மானத்தை 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இயற்ற வேண்டும் என்பதே. அதாவது முன்னர் மூன்று முறை காலக்கெடு அளித்தது போல் மேலும் ஒரு முறை காலக்கெடு அளிக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.” இவ்வாறு கூறுகின்றார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும், யாழ். மாவட்ட ...

Read More »

யாழ். மாநகர சபை புதிய மேயர் யார்?

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது தடவையும் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநகர சபையின் புதிய மேயர் தெரிவு எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம. பற்றிக் டிறஞ்சன் இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகக் கடந்த 16ஆம் திகதி, மாநகர மேயர் இம்மானுவல் ஆனோல்ட்டால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. வரவு – செலவுத் ...

Read More »