செய்திமுரசு

தியாகி திலீபன் நினைவுநாள் செய்தியறிக்கை – மெல்பேர்ண் 2019

நீர் கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்த தியாகி திலீபனின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு மெல்பேணில் கிளேன் வேவலி சென் கிறிஸ்தோபர் ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 22 – 09 – 2019 அன்று சிறப்பாக, உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. இளைய செயற்பாட்டாளர் செல்வி மது பாலசண்முகன் நிகழ்வை தொகுத்து வழங்க மாலை 6 மணிக்கு நினைவு கூரல் நிகழ்வு ஆரம்பமானது. அவுஸ்திரேலிய தேசியகொடியை இளைய செயற்பாட்டாளர் யது பாலசண்முகன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழ தேசிய கொடியை இளைய செயற்பாட்டாளர் பவித்திரன் சிவநாதன் ஏற்றிவைத்தார். தியாகதீபம் லெப்ரினன்ற் கேணல் ...

Read More »

கூட்டமைப்பினர் நேற்றைய குழப்பங்கள் தொடர்பில் என்னுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை!

நீராவியடியில் பொங்கலிற்கு திரண்டு வந்த கூட்டமைப்பினர் நேற்றைய குழப்பங்கள் தொடர்பில் என்னுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லையென அரச அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.இது தனக்கு அதிர்ச்சியை தந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் விபரிக்கையில் கடந்த சனிக்கிழமை 21ம் திகதி பின்மாலை சட்டத்தரணி காண்டீபன் நீராவியடி பிள்ளையார் ஆலய சர்ச்சையை என் கவனத்துக்கு கொண்டு வந்தார். ஆலய தரப்பின் சார்பாகவும் நவநீதன் என்னை அழைத்து தமது நிர்க்கதி நிலைமையை என் கவனத்துக்கு கொண்டு வந்தார். புற்றுநோயால் இறந்துவிட்ட குருகந்த விகார தேரரின் உடல் நீராவியடிக்கு ...

Read More »

காவல் துறை நீதியின் முன்னிறுத்துமாறு கோரி சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்குத் துணை நின்ற காவல் துறையினரை   நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று செவ்வாய்க்கிழமை சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வடக்கு மாகாண நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் சட்டத்தரணி கே.சுகாஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் முல்லைத்தீவில் இன்று முற்பகல் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் முல்லைத்தீவு நோக்கிப் பயணமாகியுள்ளனர்.   முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்குத் துணை நின்ற காவல் ...

Read More »

பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்!

ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகிகளான லிசா மற்றும் ஜெசிகா ஓரிக்லியாசோ ஆகிய இருவரும் இரட்டையர்கள் ஆவர். இந்த பாப் பாடகி சகோதரிகளுக்கு பெரும் திரளான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. லிசா மற்றும் ஜெசிகா ஆகிய இருவரும் ஒரே மேடையில் தோன்றி பாப் பாடல்களை பாடி ரசிகர்களை பரவசப்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் இசைக்கச்சேரியில் பங்கேற்பதற்காக லிசா-ஜெசிகா ...

Read More »

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை கல்லிடைக்குறிச்சி கோவிலில் ஒப்படைப்பு!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் 37 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன நடராஜர் சிலை மீட்கப்பட்டு நீதிமன்ற நடைமுறைகளுக்கு பிறகு கோவிலில் ஒப்படைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகசமுடையார் உடனுறை அறம்வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்த விலைமதிப்புமிக்க ஐம்பொன் நடராஜர் சிலை கடந்த 1982ம் ஆண்டு திருட்டு போனது. இந்த சிலையின் மதிப்பு சுமார் ரூ.30 கோடி இருக்கும். இந்த சிலையை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. பின்னர் அந்த ...

Read More »

ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு படும்பாடு!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாக கூறிக்கொண்டு ஆட்சியதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் முடிவடையப்போகிறது. அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துவிட்டது. ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு வாக்குறுதியை அளித்துக்கொண்டு பதவிக்கு வந்த சகல ஜனாதிபதிகளையும் போன்று அவரும் வாக்குறுதியை நிறைவேற்றாமலேயே பதவியில் இருந்து இறங்கப்போகிறார். அவரின் சுமார் ஐந்து வருட பதவிக்காலத்தின் தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து தென்னிலங்கை பிரதான அரசியல் சமுதாயத்தின் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சிந்தனை மாற்றம் குறித்து ஆராய வேண்டிய அவசியத்தை ...

Read More »

ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்த தந்தையின் டைரி குறிப்பு!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த மாரா (41) என்கிற பெண் கடந்த 2013ம் ஆண்டு வயதில் தன்னைவிட சிறியவரான அந்தோணி (25) என்கிற இளைஞரை திருமணம் செய்துள்ளார். கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்த மாராவிற்கு ஏற்கனவே முதல் கணவர் மூலம் மூன்று வயதில் சார்லோட் என்கிற பெண் குழந்தை இருந்தது. அதனை தொடர்ந்து, ஆலிஸ் மற்றும் பீட்ரிக்ஸ் என்ற இரண்டு வயது இரட்டையர்களை பெற்றெடுத்தனர். சொந்தமாக நடத்தி வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து சூப்பர் மார்க்கெட்டில் இரவு நேர வேலை செய்து வந்தார். 3 ...

Read More »

கென்யா: வகுப்பறை இடிந்து விழுந்து 7 குழந்தைகள் உயிரிழப்பு!

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் இன்றூ பள்ளியின் வகுப்பறை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியின் டகோரேட்டி புறநகர் பகுதியில் ஏராளமான ஏழை, எளிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வாழ்வாதாரத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளில் ஒன்றான வீடின்றி இவர்களில் பலர் கூடாரம் அமைத்து குடும்பம் நடத்துகின்றனர். இங்குள்ள குழந்தைகள் படிப்பதற்காக இயங்கிவரும் திறன் மேம்பாட்டு பள்ளியில் இன்று காலை வழக்கம்போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, ஒரு வகுப்பறை திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. ...

Read More »

இறுதி அறிக்கையை நாளை கூடி ஆராயவுள்ள தெரிவுக்குழு!

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலை அடுத்து மே தாம் 22 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழு தமது விசாரணைகளை முடித்துள்ள நிலையில் நாளை தெரிவுக்குழு கூடி அவர்களின் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பது குறித்து ஆராயவுள்ளனர்.   தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நாளை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதுவரை காலமாக தாம் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகள் மற்றும் பெற்றுக்கொண்ட சாட்சியங்கள் அனைத்தையும் கொண்டு இறுதி அறிக்கையை தயாரிக்கவும் அந்த ...

Read More »

எவ்வித அபிவிருத்தியும் காணாத கிராம மக்கள்!

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கரியாளை நாகபடுவான் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மீள் குடியேறி 10 வருடங்கள் ஆகியும் இதுவரை தாங்கள் தொடர்ச்சியாக அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுவதாகவும் அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக பாராமுகமாக செயற்படுவதாகவும் மன்னார் மெசிடோ நிறுவனத்தினால் இன்று ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் கருத்து கேட்கும் நிகழ்சி திட்டத்தில் விசனம் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி கரியாளை நாகபடுவான் கிராமத்தை சேர்ந்த மக்கள் யுத்த காலப் பகுதியில் இராணுவ நடவடிக்கை காரணமாக தங்களுடைய சொந்த கிராமத்தில் இருந்து  வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக பல்வேறு ...

Read More »