செய்திமுரசு

எரிகின்ற வீட்டில் பிடுங்கியது இலாபம்!

அடுத்தது தேர்தல்தான் என்று, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளை ஆரம்பித்திருக்கின்றன. அது வசை பாடல் காதையாகவே இருக்கிறது. நாம் என்ன திட்டம் வைத்திருக்கிறோம், எதைச் செய்வோம், எமது கட்சி வெற்றி பெற்றால், ஆட்சியமைத்தால் எதையெதை எல்லாம் மக்கள் அடைந்து கொள்வார்கள் என்று சொல்வதற்கும், விளக்கமளிப்பதற்கும் அப்பால், மற்றைய கட்சிகளைப் பற்றி விமர்சிப்பதையே தொழிலாகப் பல கட்சிகள் கொண்டிருக்கின்றன. தாம் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்திலும் இவ்வாறான வசைபாடல்கள் நடைபெறுவது வழமைதான். நாட்டின் அடிப்படைப் பிரச்சினையான இனநெருக்கடிக்கான நிரந்தரத் தீர்வு தேவை என்றிருக்கும் நிலையில், இலங்கையின் அரசியலுக்கு ...

Read More »

சஹ்­ரானின் உத்­த­ரவின் கீழ் புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்டது!

மாவ­னெல்லை நகரை அண்­மித்த பகு­தி­களில் ஒரே இரவில்  நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் அடித்து சேத­மாக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளா­னது, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக கரு­தப்­படும் பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாஷிமின் உத்­த­ர­வுக்கு அமை­யவே முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக சி.ஐ.டி. நேற்று மாவ­னெல்லை நீதிவான் நீதி­மன்­றுக்கு  அறி­வித்­தது. இந்த விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று முற்­பகல்  மாவ­னெல்லை நீதிவான் உப்புல் ராஜ­க­ருணா முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்த போதே , குறித்த விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பிர­தான விசா­ரணை அதி­கா­ரி­யான சி.ஐ.டி.யின் விஷேட ...

Read More »

எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்க முடியாது!

ஓமன் வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம், என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஓமன் வளைகுடா பகுதியில் நார்வே மற்றும் சிங்கப்பூருக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது மர்மமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த மே மாதம் சவுதிக்கு சொந்தமான 2 எண்ணெய் கப்பல்கள் உட்பட நான்கு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் உலகளவில் எண்ணெய் விலை கிடுகிடுவென ...

Read More »

சஹ்ரான் மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டார்! – ஹிஹ்புல்லாஹ்

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது நான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தேன். அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் ஜனாதிபதி  மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டிருந் தார் என்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா  நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தார். ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து  விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள    நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு அழைக்கபட்ட ஹிஸ்புல்லாஹ் இதனைக் குறிப்பிட்டார்,   அவரது சாட்சியத்தின் முழு விபரம் வருமாறு: கேள்வி:- ...

Read More »

தற்கொலைதாரியின் சடலத்தை புதைக்க முடியாமல் திண்டாட்டம்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட  தற்கொலையாளி மொஹமட் நாசார் மொஹமட் ஆசாத்தின்  சடலத்தை தமது பிரதேசங்களில் புதைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணமாக காவல் துறை  சடலத்தை அடக்கம் செய்ய முடியாது நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். கடந்த 21 ஆம் திகதி இடம் பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதியான காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் நாசார் மொஹமட் ஆசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்கள் மரபணு பரிசோதனையில் அவருடையது என உறுதிப்படுத்தப்பட்டது இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ...

Read More »

டிரோன்களை செயலிழக்கச் செய்யும் புதிய நவீன ரக துப்பாக்கி !

ஆஸ்திரேலியாவில் டிரோன்களை செயலிழக்கச் செய்யும் புதிய நவீன ரக துப்பாக்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உரிய அனுமதியின்றி பறக்கவிடப்படும் டிரோன்களை செயலிழக்கச் செய்யும் வகையில் ஆஸ்திரேலிய இராணுவம் புதிய துப்பாக்கியினை உருவாக்கியுள்ளது. இந்த துப்பாக்கி குண்டுகளுக்கு பதில் கதிர் வீச்சுகளை பயன்படுத்துகிறது. தடை செய்யப்பட்ட இடங்களை படம்பிடிப்பது, சிறிய ரக குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்துவது என டிரோன்களின் பயன்பாடு தவறான வழிக்கு மாற்றப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தவே இந்த கதிர்வீச்சு துப்பாக்கிகள் ஆஸ்திரேலிய இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி மூலம் 10 ஆயிரம் அடி தூரத்தில் ...

Read More »

மெல்பேர்னில் வீட்டு முன்பணத்தில் மோசடி மோசடி செய்த தம்பதி!

மெல்பேர்ன் வீடு கட்டுவதற்காக வாடிக்கையாளர்கள் செலுத்திய முன்பணத்தில் மோசடி செய்த தம்பதியினருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. இவர்கள் இருவரும் 2015 ஆம் ஆண்டு முதல் இந்த மோசடிக்குற்றத்தை மேற்கொண்டுவந்துள்ளனர். நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதையடுத்து கணவனுக்கு மூன்று வருட சிறையும் மனைவிக்கு 20 மாத சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. வீடு விற்பனை முகவரான Nguyen, வீட்டுத்தரகு வர்த்தகத்தில் தனது கணவன் Ngo-ஐயும் பங்குதாரராக இணைத்து பணியாற்றியிருந்தார். இவர்களின் ஊடாக வாடிக்கையாளர்கள் வீடு கட்டுவதற்கு வைப்புச்செய்த பணத்தை இன்னொரு வங்கிக்கணக்கிற்கு மாற்றிக்கொண்டனர். இதன் மூலம் இந்த மோசடியை செய்திருக்கிறார்கள் என்றும் ...

Read More »

கோடி அற்­புதர் அந்­தோ­னி­யாரின் கோலாகலமற்ற திரு­விழா!

இன்­றைய திரு­விழா திருப்­பலி காலை 10  மணி­க்கு, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்­கப்­ப­டும்  ஜூன் மாதம் 13ஆம் திகதி என்­றாலே கொழும்பு கொச்­சிக்­க­டைவாழ்  மக்­களின் மனதில் குதூ­கலம் குடி­கொண்டு விடும். ஆம், அன்­றுதான் கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னி­யா­ருக்குத் திரு­விழா எடுக்கும் நாள்; கோலா­கலம் நிறைந்த நாள். கொச்­சிக்­க­டைவாழ் மக்கள் மட்­டும்­தானா…? இல்லை… நாடு முழு­வ­து­முள்ள புனி­தரின் பக்­தர்கள் ஆல­யத்­துக்கு ஓர­ணி­யாகத் திரண்­டு­வந்து கொண்­டாடும்  திரு­விழா இது. புனித அந்­தோ­னியார்…!  அவரை நினைத்­தாலே போதும், மனதில் கவ­லைகள், துன்­ப­து­ய­ரங்கள், கஷ்­ட­நஷ்­டங்கள்  எல்­லாமே சூரி­யனைக் ...

Read More »

12 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை !

வடக்கு, வட­மத்­திய மற்றும் வடமேல் மாகா­ணங்­களில் எதிர்­வரும் ஐந்து நாட்­க­ளுக்கு மணித்­தி­யா­லத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எதிர்வுகூறி­யுள்­ளது. அதன்­படி  குறித்த மாகா­ணங்­க­ளுக்குள் உள்­ள­டங்­கு­கின்ற 12 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. 12 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், புத்­தளம், திரு­கோ­ண­மலை, பொலன்­ன­றுவை, மாத்­தளை மற்றும் குரு­ணாகல் உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளுக்கே இவ்­வாறு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. ஏனைய மாவட்­டங்­களில் மணித்­தி­யா­லத்­துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று ...

Read More »

ஹாங்காங்கில் கைதிகளை சீனாவுக்கு அழைத்து செல்ல எதிர்ப்பு போராட்டம்!

கைதிகளை சீனாவுக்கு அழைத்து செல்ல வசதியாக தனி சட்டம் கொண்டு வருவதை எதிர்த்து ஹாங்காங்கில் 1 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 1841-ம் ஆண்டு வரை ஹாங்காங் இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தில் இருந்தது. கடந்த 1997-ம் ஆண்டு சீனா கட்டுப்பாட்டுக்கு மாறியது. ஒப்பந்தப்படி ஹாங்காங்குக்கு என்று தனி சட்டம், தன்னாட்சி உரிமை மற்றும் குறிப்பிட்ட உரிமைகள் தொடருவது என ஒப்புக் கொள்ளப்பட்டது. பேச்சு சுதந்திரம், நீதி சுதந்திரம், தனி சட்டம், தனியான பொருளாதார கட்டமைப்பு மற்றும் ஹாங்காங் டாலரை பணமாக தொடர்ந்து கையாள்வது ...

Read More »