செய்திமுரசு

அவுஸ்திரேலியாவிலிருந்து குடும்பத்துடன் நாடு கடத்தப்பட உள்ள மாணவி!

அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருக்கு தனது குடும்பத்துடன் நாடு கடத்தப்பட உள்ள இந்திய வம்சாவளியினரான ஒரு மாணவி, புலம்பெயர்தல் துறை அமைச்சருக்கு தெரிவிக்கும் ஒரு செய்தியாக பிரபல அவுஸ்திரேலிய பாடல் ஒன்றை பாடி நெகிழ வைத்தார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ராஜசேகரன் மாணிக்கம் சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த நிலையில், தனது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுப்பதற்காக 2103ஆம் ஆண்டு குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு சென்றார். தற்போது அவரது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை இல்லை என்பதால், அவருக்காக மருத்துவ செலவுகளை செய்ய இயலாது என்று ...

Read More »

லடாக்கில் தேசிய கொடி ஏற்றுகிறார் டோனி!

சுதந்திர தினத்தன்று லடாகில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை டோனிக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி ராணுவ சேவையில் மிகுந்த ஈடுபாடு காட்டியதால் கடந்த 2011-ம் ஆண்டு அவருக்கு ராணுவம் சார்பில் கவுரவம் அளிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு சிறிது நாட்களுக்கு அவர் ராணுவ சேசவையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் ஆக்ராவில் பாராசூட்டில் இருந்து குதிக்கும் பயிற்சியை மேற்கொண்டு அதில் தேர்ச்சி பெற்றார். சுமார் 8 ஆண்டுகள் இடை வெளிக்குப்பிறகு தற்போது அவர் இந்திய கிரிக்கெட் ...

Read More »

யாழில் வீடு புகுந்து தாக்குதல்!

இதேவேளை, யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை சனசமூக நிலையத்தின் ஜன்னல் கதவுகள் மற்றும் இரும்புக் கதவுகள் என்பன நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் அடித்து சேதம் ஆக்கப்பட்டுள்ளன என யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.   குறித்த சம்பவம் தொடர்பில் சனசமுக நிலையத்தின் தலைவரினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.            

Read More »

சட்டமா அதிபரின் நடவடிக்கையை மன்னிப்புச் சபை வரவேற்பு!

திருகோணமலையில் 2006 ஜனவரியில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்ற 5 தமிழ் மாணவர்களின் கொலை தொடர்பாக மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு இலங்கையின் சட்டமா அதிபர் எடுத்திருக்கும் தீர்மானத்தை வரவேற்றிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, விசாரணைகள் பயனுறுதி உடையவையாக இருக்க வேண்டுமானால் சில சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் கூறியிருக்கிறது. இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய வழக்கின் குற்றஞ்சாட்டப்பட்ட விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 13 வீரர்களை, அவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லையென்ற காரணத்தைக் கூறி திருகோணமலை மேல் நீதிமன்றம் விடுதலை செய்தமையை அடுத்தே இந்த மீள் விசாரணைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ...

Read More »

புதிய அரசமைப்பின் கனவும் அரசியல் தீர்வில் கபடமும்!

2015ஆம் ஆண்டு, ஆட்சிமாற்றம் உருவாக்கிய மிகப்பெரிய நம்பிக்கைகளில் ஒன்று, தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தரக்கூடிய புதிய அரசமைப்பு ஆகும். ‘நல்லாட்சி அரசாங்கம்’ நல்லாட்சியைத் தராவிட்டாலும், தமிழர்களுக்கு நல்வாழ்வைத் தருவார்கள் என்று, தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தார்கள். ‘தீபாவளிக்குள் தீர்வு, ‘பொங்கலுக்குள் புதிய அரசமைப்பு’ என்று ‘புலுடா’க்கள் தொடர்ந்தன. இன்று, புதிய அரசமைப்புக்கான வாய்ப்பு, முழுமையாக இல்லாது போய்விட்டது. புதிய அரசமைப்பின் சாத்தியமின்மையை, இலங்கை அரசியலைப் புரிந்தவர்கள், இலகுவாக அறிந்து கொள்வர். நல்லாட்சி அரசாங்கம், தனது முதலாவது ஆண்டில் பயணித்த திசையே, புதிய அரசமைப்பைக் ...

Read More »

‘ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்ட பின்னரே புதிய கூட்டணி’!

ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்ட பின்னரே ஐக்கிய தேசியக் கட்சி புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜீத் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Read More »

பிரகீத் எக்னெலிகொட -ட்ரயல் அட் பார் அமைத்து விசாரிக்க கோரிக்கை!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை நிரந்தர “ட்ரயல் அட் பார்” ஆயம் அமைத்து முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர், பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, இந்த வழக்கை விசாரிக்க ஹோமாகம மேல் நீதிமன்றில் “ட்ரயல் அட் பார்” ஆயத்தை அமைக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்டமா அதிபரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More »

அவுஸ்திரேலியாவில் பல நாட்களாக மகளின் சடலதின் அருகே படுத்திருந்த தாய்!

பல நாட்களுக்கு முன் இறந்த மகளின் சடலத்தை விட்டு பிரிய முடியாமல், அருகிலேயே அவருடைய தாய் படுத்துறங்கியுள்ள சோக சம்பவம் அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் எட்வர்ட் – நிக்கோலாஸ் தம்பதியினர். இவர்களுடைய 11 வயது மகள் சோபி அருகாமையில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். எட்வர்ட், மனைவி மற்றும் மகளை தனியாக விட்டு வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். சில நாட்களாகவே சோபி பள்ளிக்கு வராததால், நிர்வாகத்திலிருந்து பல முறை போன் செய்து பார்த்துள்ளனர். ஆனால் நிக்கோலாஸ் எந்த பதிலும் கொடுக்கவில்லை. ...

Read More »

அதிகாரம் இல்லாத ஜனாதிபதி பதவிக்காக, ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்?

ஐக்கிய தேசியக் கட்சி, இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது, அக்கட்சியின் சார்பில் நிறுத்தப் போவது, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையா அல்லது, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவையா அல்லது, சபாநாயகர் கரு ஜயசூரியவையா என்பது, இன்றுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அதன் வேட்பாளராக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை நிறுத்த வேண்டும் என, அக்கட்சியில் பெரும்பாலானவர்கள் கோருவதாகத் தெரிகிறது. ஆனால், அக்கட்சியை வழிநடத்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தமது சகோதரரான கோட்டாவை, இன்னமும் அங்கிகரிக்கவில்லை. கோட்டா, உண்மையிலேயே, ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தமிழர் விடுதலைக்கான தொடர் போராட்டம் ஆரம்பம்!!

அவுஸ்திரேலியாவில் கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரி தொடர்ச்சியான கவனயீர்ப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாக தமிழ் ஏதிலிகள் கழகம் அறிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக நடைபெறவுள்ள கவனயீர்ப்பு நிகழ்வு பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு: ஆஸ்திரேலியாவில் காலவறையின்றி தடுப்பில் வைக்கப்பட்டு இருக்கும் ஈழ தமிழர்களை உடனடியாக விடுதலை செய் ஆஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களே! நீண்ட காலமாக எந்த காலவரையும் இல்லாமல் தடுப்பில் வைக்கப்பட்டு இருக்கும் இலங்கை அகதிகளின் விடுதலைக்காக ...

Read More »