இரு நாடுகளிடையே போர் ஏற்படும் போது சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்குமே உயிர்ச்சேதம், பொருட்சேதம் என்று பெரும் இழப்பு ஏற்படுகிறது. தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு போரில் ஈடுபடும் ராணுவ வீரர்களின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. மரணம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற நிலையிலேயே அவர்கள் தாய் நாட்டுக்காக ஆயுதம் ஏந்துகிறார்கள். போரின் போது பல வீரர்கள் எதிரி நாட்டு ராணுவத்திடம் போர்க்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் உண்டு. இதற்கு முடிவு கட்ட சர்வதேச நாடுகள் தீர்மானித்ததன் விளைவாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில், போர்க்கைதிகளை ...
Read More »செய்திமுரசு
உலகத் தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய பிரதமர்!
சித்திரைப் புத்தாண்டு நாளாகிய இன்றைய தினம் உலகத் தமிழ் மக்களுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison தனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விசேட வாழ்த்துச் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார். உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களாலும் சிறிலங்காவின் சிங்கள மக்களாலும் இன்றைய தினம் வசந்த காலத்தை வரவேற்கும் சித்திரைப் புத்தாண்டு நாள் கடைப்பிடிக்கப்படுகின்ற நிலையில் அவ்ஸ்திரேலியப் பிரதமர் தனது வாழ்த்துக்களை தமிழ் மக்களுக்குத் தெரிவித்திருக்கின்றார். அவுஸ்திரேலியாவில் அனைத்து கலாசாரங்களும் மதிக்கப்படுகின்ற நிலையில் ஆஸிவாழ் தமிழர்களுக்கும் மற்றும் உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களுக்கும் ...
Read More »மீன்பிடிப்படகு, வலைகளுக்கு விசமிகள் தீ வைப்பு!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை பகுதியில் விசமிகளால் மீன்பிடி படகு மற்றும் கடற்றறொழில் வலைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, நேற்றுக் காலை 8 மணியளவில் அம்பன் கொட்டோடை பகுதியில் கந்தன் சுரேந்திர ராசா என்பவர் புதிதாக கரை வலையை கொள்வனது செய்து நேற்றைய தினம் முதல் முதலாக தொழிலை மேற்கொண்டுவிட்டு படகு மற்றும் வலைகளை கடற்கரையில் வைத்து விட்டு வீடு சென்றுள்ளார். இந்நிலையில் கடற்கரையில் எதோ எரிந்து கொண்டிருப்பதை கண்ணுற்று கடற்கரைக்கு சென்றபோது படகு மற்றும் வலைகள் ...
Read More »கலப்பு நீதிமன்றம் அல்லது சிறப்புத் தீர்ப்பாயம் : கம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை கம்பூச்சியாவில் போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட கெமரூச் ரிபியூனல் என்று அழைக்கப்படும் ஒரு கலப்பு நீதிமன்றம் இரண்டு போர்க் குற்றவாளிகளுக்கு இரண்டாவது தடவை ஆயுள் தண்டனைகளை விதித்தது. தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் கியூ சம்பான் 87 வயது. கெமரூச் அரசாங்கத்தின் அரசுத்தலைவராக இருந்தவர். மற்றவர் நுஓன் சே 92 வயது. கெமரூச் இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தளபதியாகவும் அவ்வியக்கத்தின் தலைவரான போல்ட்பொட்டின் வலது கையாகவும் இருந்தவர். ...
Read More »இரணைமடு பொறியியலாளருக்கு இடமாற்றமா?
இரணைமடுக்குளத்தின் வான்கதவுகளை தானே திறந்து வைக்க ஏதுவாக அதனை திறப்பதற்கு தாமதிக்க வைத்த பொறியியலாளர் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து முல்லைதீவு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனினும் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வான் பாய்ந்து பாரிய அழிவு ஏற்பட்டமைக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட அதிகாரிகளின் தவறு காரணமா எனக்கண்டறிய ஆளுநரால் நியமித்த குழுவின் விசாரணை அறிக்கை வெளிவருமுன்னரே அவர் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டதாக வடக்கு மாகாண உள்ளக அலுவலக தகவல்கள் தெரிவித்துள்ளன. வடக்கு மாகாணத்தின் மிகப் பெரும் நீர்த் தேக்கமான இரணைமடுக் குளமானது அதன் கொள் அளவு ...
Read More »டிரம்புடன் 3-வது உச்சிமாநாடா? – நிபந்தனை விதிக்கிறார் கிம்
வடகொரிய தலைவரை 3-வது முறையாக சந்தித்து பேச டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா சரியான அணுகுமுறையுடன் வரவேண்டும் கிம் ஜாங் அன் நிபந்தனை விதித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் எதிரிகளாக திகழ்ந்து, வார்த்தை யுத்தம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் போட்டனர். அதைத்தொடர்ந்து இந்த ...
Read More »அவுஸ்ரேலியாவில் இரவு கேளிக்கை விடுதியில் முன் துப்பாக்கிச் சூடு!
அவுஸ்ரேலியா, மெல்பேணில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் காயமடைந்துள்ளனர். அதில் 37 வயதான பாதுகாப்பு காவலர் இறந்துவிட்டார் காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ”லவ் மெசின்” இரவு கேளிக்கை விடுதியின் வெளிப்புறத்தில் இன்று (14) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.20 மணியளவில் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது. Narre Warren South இலிருந்து ஆரோன் காலிட் ஓஸ்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் பின்னர் அவர் மருத்துவமனையில் இறந்தார். 28 வயதான மனிதன் ஒரு மோசமான நிலையில் இருக்கிறார். ஒரு 50 வயது மனிதன் மற்றும் ...
Read More »நாவலைப் பின்தொடரும் ஒளிப்படப் பயணம்!
கேரளத்தின் வைக்கத்தைச் சேர்ந்தவர் டி.மனோஜ். ஒளிப்படக் கலைஞர். மலையாள எழுத்தாளர் ஓ.வி.விஜயன் எழுதிய நாவல் ‘கசாக்கின் இதிகாசம்’, பாலக்காட்டுக்கு அருகிலுள்ள தஸ்ராக் எனும் கிராமத்தில் நிகழ்கிறது. தஸ்ராக்கைத்தான், ‘கசாக்’ என்று பெயர் மாற்றிப் பிரயோகித்திருக்கிறார் விஜயன். நாவலிலுள்ள தஸ்ராக்கின் அம்சங்களை ஒளிப்படங்கள் எடுத்து அதைப் புத்தகமாக ஆவணப்படுத்தியிருக்கிறார் மனோஜ். இந்த மிகு நேர்த்தியான புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் படங்களெல்லாம் நாவலிலுள்ள வாக்கியங்களைப் பின்தொடர்ந்து எடுக்கப்பட்டவை. இந்தப் புது இலக்கியப் பரிமாணத்தில் இது முக்கியமானதொரு தொடக்கமாக அமைந்திருக்கிறது. அவரோடு உரையாடியதிலிருந்து… ஒளிப்படக் கலையில் உங்களுக்கு எப்படி ஆர்வம் ...
Read More »அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. வழமையான தினங்களில் நெடுஞ்சாலைகளில் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரையிலான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. எனினும், இந்தப் பண்டிகைக் காலத்தில் நாளொன்றிற்கு ஒரு லட்சத்து ஐயாயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் வரையிலான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதாக அதிவேக நெடுஞ்சாலை செயற்பாட்டு மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு அமைவாக சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள் உள்நுழைதல் மற்றும் வெளிச் செல்வதற்கான மேலதிக வாயில்களும் திறக்கப்பட்டுள்ளன. ...
Read More »ஜுலியன் அசாஞ்சேவை கழட்டிவிட்டது அவுஸ்ரேலியா!
விக்கிலீக் நிறுவுநர் ஜுலியன் அசாஞ்சேவைத் எங்களிடம் ஒப்படைக்குமாறு கோரமாட்டோம் என அவுஸ்ரேலியப் பிரதமர் ஸ்காட் மொரிஸ்ஸன் கூறினார். ஏனைய அவுஸ்ரேலியக் குடிமக்களுக்கு தூதரகம் ஊடகச் செய்யும் செய்யக்கூடிய அனைத்து உதவிகளும் அசாஞ்சேக்கு வழங்கப்படும். பிரபல்மானவர் என்பதால் எதுவித சிறப்பு நடைமுறைகள் எதுவும் வழங்கப்படமாட்டாது. ஜுலியன் அசாஞ்சேவைத் எங்களிடம் ஒப்படைக்குமாறு கோரமாட்டோம். அது பிரித்தானியாவுக்கும் அமொிக்காவுக்கும் இடையிலான விவகாரம் என அவுஸ்ரேலியப் பிரதமர் ஸ்காட் மொரிஸ்ஸன் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.
Read More »